சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

உங்க Blog கை கைகழுவ 10 வழிமுறைகள்

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 4, 2008

டைம் கிடைக்கறதேயில்லனு நிறய பேர் ( நானும்தான் ) சும்மா அலட்டிக்கொள்வார்கள். சிலருக்கு இருக்கற டைமில என்ன செய்யறதென்று தெரியாம பேந்த பேந்த முழிப்பார்கள். ஆனா நான் ஒருவழியாக ஒரு சின்ன ரிசேர்ச் ஏதாவது பண்ணலாமென நினைத்துஐடியா தேடினோனா, ஐடியா மணி ஐடியா குடுத்தாரு. ( வேற யாரு கூகிளண்ணேதான்)

Blog குகளின் subscribers குறைவதற்கான வழிமுறைகளை கொஞ்சம் ரிசேர்ச் பண்ணிப்பாக்கலாம் என நினைத்துக்கொண்டு கூகிளாண்டவரிடத்திற்குப்போனா, அட நம்மள மாதிரி நிறய பேரு இப்படியே ரிசேர்ச்சு பண்ணி வச்சுருந்தாங்க. பாவம். அவங்களுக்கும்… ம்ம் வேணாம். இப்படி அதிகமா அலட்டினாலும் வர்றவங்க நின்னுடுவாங்களாம்.

எல்லா முடிவுகளிலிருந்தும் நா ஒரு 10ஐ செலக்ட் பண்ணிருக்கேன். நீங்களும் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லிட்டுப்போங்க.

1.அளவுக்குஅதிகமான Posts களை போடுவது. – வாசகர்கள் கடைசியாக போட்ட பதிவுகளைத்தான் அதிகம் படிப்பதாக சொல்கிறார்கள். ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 பதிவுகள் போடலாம். ஆனால் ரெகுலர் வாசகர்கள் எத்தன போட்டாலும் படிப்பார்கள். ஆக உங்க ஒவ்வொரு பதிவையும் எல்லாரும் படிக்கணும்னா ஒரு நாளுக்கு ஒண்ணோட நிறுத்திரணுமாம்.

2. தொடர்ச்சியான இடைவெளியில் post போடாமை -அதாவது எப்பவாவது இருந்துட்டு போடரது, மாசத்துக்கொண்ணுனா அப்படியே மெயின்டேன் பண்ணணும். வாரத்துக்கொண்ணுணா அப்படியே, தினமும்னாலும் அப்படியே தொடர்ந்து பண்ணணுமாம்.

3. Blog இனுடைய மைய நோக்கத்தை விட்டு வேறு பதிவு போடுவது ( அதாவது நான் தொழில்நுட்ப பதிவு போடபோறன்னு அலப்பற விட்டுட்டு மொக்கை பதிவு போடர மாதிரி )

4. நமது பதிவுகளை நாமே மறுபதிவு செய்வது, ( சுயசுடுதல் ) – மீள்பதிவின்போது புதிய விடயங்களிருந்தால் அவற்றை மட்டும் அப்டேட் பண்ணிவிட்டு பழைய பதிவிற்கு லிங்க் குடுப்பதுதான் அதிக வாசகர்களையும் ரேட்டிங்கையும் கூட்டுமாம். ஏனெனில் பழைய பதிவுகளுக்கு ஹிட்ஸ் வந்தா ரேட்டிங் அதிகமாகும்.(கூகுளுக்கு மட்டும்)

5. சுவாரசியமில்லாத கருத்து அல்லது தகவல். – இத  படிக்கும்போது மானிட்டரில் ஈ வந்து நிக்குமாம். ( இந்த பதிவுக்கும் நிக்குதா? முதல்ல ஃபேன போட்டு வாங்க !!! )

6. தலைப்பிற்கு சம்பந்தமில்லாத பதிவு – சோடானு சொல்லி கூப்பிட்டு ஓடி வாறவரனுக்கு பச்ச தண்ணிய குடுத்தா, இன்னாரு நாள் நாம உண்மையா சோடா குடுதடதாலும் ஏன்னும் பாக்க மாட்டானுக.நகைச்சுவை மற்றும் மொக்கைப்பதிவுகளுக்கு இது விதிவிலக்கு. ஆனால் உங்கள் ஸ்டைல் தெரியாத புது ஆளாயிருந்தா அவருக்கு உங்க பதிவு பற்றி நெகடிவான எண்ணம்தான் வரும்

7. ஈகோ – வாசிப்பவரை ஒண்ணுமே தெரியாதவராக மட்டம் தட்டறது அல்லது தனக்கு மட்டுமே தெரியும்கறமாதிரி அலப்பற விடுறது. வாசிக்கும் போது ஒவ்வாரு வாசகருக்கும் அந்த பதிவு தனக்காகவே எழுத்ப்பட்டு சொல்ல வரும் செய்தியை தாழ்மையுடன்  சொல்ற மாதிரி இருக்கணுமாம்.

8. தரம் குறைந்த ஆக்கங்கள் – ரெஸ்டோரண்ட ஸ்டைலா வச்சு விளம்பரப்படுத்தி உள்ள பச்சத்தண்ணி மாதிரி இருந்தா இறால் கறிய ஹாஃப் ரேட்ல குடுத்தாலும் அடுத்த தரம் திரும்பிகூட வரமாட்டாங்க

9. மிகமிக நீளமான பதிவுகள். – படமில்லாம மிக நீளமாக பதிவு போடரது. நீளமாயிருந்தா பார்ட் பார்ட்டாக பிரிச்சு பொடலாம். இல்லேனா பொருத்தமான சுவாரசியமான படங்களை ஆங்காங்கே போட்டுவிடலாம். சின்ன சின்ன பத்திகளாக பிரிச்சு விடலாமாம்.

10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க.

ஹம்ம். இதுல நீங்க ஒத்துக்கற ஒத்துக்காத விடயங்களையும் சொல்லுங்க.

தெடர்ந்த வாசிக்கற ஒரு பிளாக்கிலிருந்து நீங்க வெறுத்துபோய் வாசிக்கறத விடுறீங்கனா என்னென்ன காரணங்களுக்காக என்னதையும் அறியத்தரவும்.

மிகமுக்கியம் – இந்த ரிசேச்சுக்கு எனக்கு Phd குடுப்பாங்களா?
(PhDPermanent Head Damage !!! 🙂 )

98 பதில்கள் to “உங்க Blog கை கைகழுவ 10 வழிமுறைகள்”

  1. மொத போனி ஆஜர்

  2. மெய்யாலுமே நான் தான் பஸ்டா ??

  3. மொத மூணு சும்மா மொக்கைக்கு போடாச்சு.. இனி பிரிச்சு மேயுற நேரம்…

    ஸ்டார்ட் மூஜிக்

  4. டைம் கிடைக்கறதேயில்லனு நிறய பேர் ( நானும்தான் ) சும்மா அலட்டிக்கொள்வார்கள்/////////

    அய்யா ஜாலி..( நான் அப்படி சொல்லலையே..))

  5. டைம் கிடைக்கறதேயில்லனு நிறய பேர் ( நானும்தான் ) சும்மா அலட்டிக்கொள்வார்கள்///////

    இப்பவாச்சும் ஒத்துகிட்டியே நைனா..
    இனி அலட்டிக்காத …

  6. சிலருக்கு இருக்கற டைமில என்ன செய்யறதென்று தெரியாம பேந்த பேந்த முழிப்பார்கள்.///////////////////////

    இது என்ன பத்தி சொல்ற மாதிரி இருக்கே??
    உண்மைய சொல்லு உனக்கு எப்படி தெரியும் ??
    வன்மையாக கண்ணடிக்கிறேன்..

  7. நான் ஒருவழியாக ஒரு சின்ன ரிசேர்ச் ஏதாவது பண்ணலாமென நினைத்துஐடியா தேடினோனா//////////////

    அப்போ கூட சொந்தமா நினைக்குறது இல்ல.. என்ன பண்றது மண்டையில இருந்தா தானே??

  8. ஐடியா மணி ஐடியா குடுத்தாரு. ( வேற யாரு கூகிளண்ணேதான்)///////////////////////////

    ஒ.. அப்போ அந்த ஐடியா டாக்டர் ஐடியாவும் இவரு தான் குடுத்தாரா?? சொல்லவே இல்ல

  9. /////////அட நம்மள மாதிரி நிறய பேரு இப்படியே ரிசேர்ச்சு பண்ணி வச்சுருந்தாங்க. /////////

    ஒ.. இதே பொழப்பா தான் நிறைய பேரு இருக்குறாங்களா??

  10. ////////////இப்படி அதிகமா அலட்டினாலும் வர்றவங்க நின்னுடுவாங்களாம்.///////////////////

    இப்பவாச்சும் புரிஞ்சா சரி தான்.. ( ஒன்னுமே புரியலையே??)

  11. எல்லா முடிவுகளிலிருந்தும் நா ஒரு 10ஐ செலக்ட் பண்ணிருக்கேன்.///////////////

    டாப் டென்னு சொல்லணும்… புரியுதா??
    ஆமா எதுக்கு பத்தோடு நிறுத்திட்ட??

  12. நீங்களும் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லிட்டுப்போங்க.//////////////////

    அது தான் சொல்லிக்கிட்டு இருக்கோம்ல.. அப்புறம் என்ன ??

  13. சுபாஷ் said

    வாங்க அணிமா
    ஃஃமொத போனி ஆஜர்ஃஃ

    வந்துட்டீங்கல. இனி பிரச்சுடுவீங்க!!!
    ஹிஹி

  14. /////////////அளவுக்குஅதிகமான Posts களை போடுவது.////////////////

    என்னது?? அதிகமாவா?? யோவ் இங்க ஒன்னுக்கே தாலி அறுக்குது இதுல இது வேறயா?/
    ( நம்ம குடுகுடுப்பை அவர்களை சொல்லலையே?? )

  15. ///////////ஆக உங்க ஒவ்வொரு பதிவையும் எல்லாரும் படிக்கணும்னா ஒரு நாளுக்கு ஒண்ணோட நிறுத்திரணுமாம்./////

    நான் எல்லாம் மாசத்து ஒன்னு போடுறதோட நிறித்துக்குனுமா?? இல்லன நான் போடுற மொக்கைய யாரு தாங்குவாங்க..

  16. /////////////தொடர்ச்சியான இடைவெளியில் post போடாமை///////////////

    யோவ் மேட்டர் இருந்தா போட மாடோமா?? அது தான் கிடைக்க மாடேங்குதே, இதுல இது வேற..

  17. ////////////அதாவது எப்பவாவது இருந்துட்டு போடரது, மாசத்துக்கொண்ணுனா அப்படியே மெயின்டேன் பண்ணணும். வாரத்துக்கொண்ணுணா அப்படியே, தினமும்னாலும் அப்படியே தொடர்ந்து பண்ணணுமாம்.////////////////

    ஏதோ பிகர மைண்டைன் பண்ற மாதிரி சொல்ற.. அதுக்கு கூட எனக்கு ராசி இல்லியே…

  18. ///////////சுபாஷ் கூறுகிறார்:
    அக்டோபர் 4, 2008 இல் 3:46 பிற்பகல்

    வாங்க அணிமா
    ஃஃமொத போனி ஆஜர்ஃஃ

    வந்துட்டீங்கல. இனி பிரச்சுடுவீங்க!!!
    ஹிஹி//////////////////////////

    பாருயா இந்த மனுசன?? பிரிச்சி மேஞ்சா சந்தோஷ படுறத…
    இதுல சிரிப்பு வேற,,

  19. //////////////( அதாவது நான் தொழில்நுட்ப பதிவு போடபோறன்னு அலப்பற விட்டுட்டு மொக்கை பதிவு போடர மாதிரி )///////////////////////

    யோவ்… தப்பு தப்பு… மொக்கை போடுறேன்னு சொல்லிட்டு தொழில்நுட்ப பதிவுகள் போடற மாதிரின்னு இருக்கணும்..

  20. நமது பதிவுகளை நாமே மறுபதிவு செய்வது, ( சுயசுடுதல் ) .////////////////////////

    ஐ.. இது நல்ல ஐடியா வா இருக்கே??
    உடனே பண்ணிட வேண்டியது தான்

  21. ஏனெனில் பழைய பதிவுகளுக்கு ஹிட்ஸ் வந்தா ரேட்டிங் அதிகமாகும்.(கூகுளுக்கு மட்டும்)////////////////
    \

    பாத்தியா என்ன ஒரு வில்லங்கம்.. இவங்க ரேட்டிங்க கூட்டுறதுக்கு நாம லிங்க் குடுக்கணுமா??

  22. சுவாரசியமில்லாத கருத்து அல்லது தகவல்.///////////////////

    இதுக்கு நீ வெளிபடையா என்னோட வலை முகவரிய சொல்லி இருக்கலாம் ..
    எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு. ..

  23. இத படிக்கும்போது மானிட்டரில் ஈ வந்து நிக்குமாம்.////////////////////

    என்னோட பதிவ படிக்கும் போது டைநோசரே வந்து நிக்குதாம்.. இதுக்கு இப்போ நான் என்ன பண்ண??

  24. ( இந்த பதிவுக்கும் நிக்குதா? முதல்ல ஃபேன போட்டு வாங்க !!! )/////////////////////////

    இந்த பதிவுக்கு கொசு தொல்லை தான் நிறைய இருக்கு..
    அப்புறம் இங்க பேன் கிடையாது.. ஏ சி தான். ஹி ஹி

  25. தலைப்பிற்கு சம்பந்தமில்லாத பதிவு //////////////

    இதோ பார்ரா?? மறுபடியும் என்ன பத்தியே புகார் வாசிச்சுகிட்டு இருக்காரு

  26. யோவ் நான் மட்டுமே இங்க கும்மிக்கிட்டு இருக்கேன்.. யாருமே இல்லியா??
    மோகன் எங்க போனீங்க?? விஷு என்னாச்சு உங்களுக்கு?? நான் பதிவு போட்ட மட்டும் உடனே ஆஜர் ஆகி கும்முறீங்க இல்ல, எங்கையா போய்ட்ட?? சீக்கிரம் வாயா… இங்க ஒருத்தன் சிக்கிகிட்டு இருக்கான்..

  27. சீக்கிரம் வாங்க… அப்புறம் நாளைக்கு சண்டே .. நான் வர மாட்டேன்.. இப்பவே சொல்லிட்டேன்..

  28. நகைச்சுவை மற்றும் மொக்கைப்பதிவுகளுக்கு இது விதிவிலக்கு. ///////////////////////

    அப்போ நானும் என்னுடைய வலைப்பூவும் விதி விலக்கா.. வயுத்துல பீர வார்த்தியே ராசா..

  29. ஆனால் உங்கள் ஸ்டைல் தெரியாத புது ஆளாயிருந்தா அவருக்கு உங்க பதிவு பற்றி நெகடிவான எண்ணம்தான் வரும்/////////////////////////////

    ஆனா.. நம்ம பதிவுகள படிக்கிறவங்க.. மெண்டல் எண்ணம் தான் வரும்..

  30. ரெஸ்டோரண்ட ஸ்டைலா வச்சு விளம்பரப்படுத்தி உள்ள பச்சத்தண்ணி மாதிரி இருந்தா இறால் கறிய ஹாஃப் ரேட்ல குடுத்தாலும் அடுத்த தரம் திரும்பிகூட வரமாட்டாங்க//////////////////////

    ஹே, நாங்க ப்ரீயா குடுத்தா பினாயிலே குடிக்குறவங்க… இறால் கிடைச்சா வெட்டாம இருப்போமா??

  31. தனியாக கும்மி அடிப்பது போர் அடிப்பதால்.., நண்பர்கள வந்ததும் மீண்டும் தொடர்வேன் என்று சொல்லி “”கொல்””கிறேன் ..
    வருவோம்ல..

  32. சுபாஷ் said

    நைட்“ வந்து பதில் சொல்றன்!!!
    மன்னிக்கவும்

  33. #
    Please Don’t Copy
    Page copy protected against web site content infringement by Copyscape/////////////////

    என்னது இது???
    இது கொஞ்சம் ஓவரா இல்ல??
    யாராச்சும் இந்த புள்ளைக்கு சொல்லுங்கப்பா..

  34. சுபாஷ் கூறுகிறார்:
    அக்டோபர் 4, 2008 இல் 4:17 பிற்பகல்

    நைட்“ வந்து பதில் சொல்றன்!!!
    மன்னிக்கவும்////////////////////////

    இதை நான் ஒத்துக்க மாட்டேன்…
    எனக்கு ரிப்ளை வேணும் வேணும்..

  35. scssundar said

    //10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க.//

    இதை எப்படி செய்வது? விளக்கம் தேவை… பதிவே போட்டாலும் சரி.. இல்லை எனக்கு தனி ஈ மடலில் எழுதுங்கள்.

    மேலும் உங்கள் பதிவில் பின்னுட்டங்களை ஈமெயிலில் பெற வசதி செய்யப்படவில்லை அதையும் செய்யுங்களேன்

    நன்றி

  36. scssundar said

    இருந்தாலும் இந்த உருப்படாதவர் கூட சேர்ந்து நீங்கள் அடிக்கும் கும்மி ரொம்பவே ஓவர்….

    சரி சரி…

    என் பதிவில் எப்ப ஆரம்பிப்போம் கும்மியை…?

  37. நல்ல யோசனைதான், அப்படியே அணிமா அண்ணனும் நீங்களூம் நம்ம கடைக்கு வாங்க

  38. படமில்லாம மிக நீளமாக பதிவு போடரது.////////////////////

    அதுக்கு தான் நான் எப்பவும் உசாரு.. ஜொல்லிட்டு போங்க எதுக்கு வெச்சிருக்கோம் .. எல்லாம் இதுக்கு தான்

  39. நீளமாயிருந்தா பார்ட் பார்ட்டாக பிரிச்சு பொடலாம்./////////////////////

    இது என்ன பொட்டலமா?? பிரிச்சு பிரிச்சு போடுறதுக்கு???

  40. இல்லேனா பொருத்தமான சுவாரசியமான படங்களை ஆங்காங்கே போட்டுவிடலாம்/////////////////

    இது ஒரு நல்ல தகவல்..( இத கூட சொல்லாட்டி அப்புறம் என்ன?? )

  41. சின்ன சின்ன பத்திகளாக பிரிச்சு விடலாமாம்./////////////////

    யாருப்பா இங்க பத்தி வியாபாரம் பண்றது??

  42. ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே./////////////////

    இதை நான் ஒத்துக்க மாட்டேன்… (சும்மா சொல்லி வெய்ப்போம்)

  43. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. //////////////////////

    ஆமா, இத எப்படி பண்றது ராசா???
    சும்மா சொல்லுப்பா>>>

  44. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க./////////////

    நாங்க எல்லாம் எழுத வந்தே ஒரு மாசம் தான் ஆகுது,,, இப்போ என்ன பண்ணுவ??

  45. ஹம்ம். இதுல நீங்க ஒத்துக்கற ஒத்துக்காத விடயங்களையும் சொல்லுங்க.///////////

    எனக்கு ஒரு விசயமும் தெரியாது…

  46. தெடர்ந்த வாசிக்கற ஒரு பிளாக்கிலிருந்து நீங்க வெறுத்துபோய் வாசிக்கறத விடுறீங்கனா என்னென்ன காரணங்களுக்காக என்னதையும் அறியத்தரவும்.//////////////////

    இதுவும் என்னுடைய வலைப்பூவ பத்தி தானே?? சொல்லுங்கப்பா..

  47. மிகமுக்கியம் – இந்த ரிசேச்சுக்கு எனக்கு Phd குடுப்பாங்களா?///////////

    அட்ரஸ் தரவும்.. அப்போ தான் டெலிவரி பண்ண வசதியா இருக்கும்…

  48. (PhD – Permanent Head Damage !!! 🙂 )

    ஒ.. இதுக்கு வேற அர்த்தம் இருக்கா??
    அப்படின பிடி இந்தா PH.D

  49. இனி முதல், நீ ஹாய் சுபாஷ் இல்லை..
    டாக்டர் சுபாஷ் என்று எல்லாராலும் அன்புடன் அழைக்க படுவாய்.

  50. ஐய்யா அம்பது போட்டாச்சு……..
    வாழ்த்துக்கள் நண்பரே

  51. யோவ் அம்பது வரைக்கும் நான் ஒருந்தனே அடிச்சி ஆடிகிட்டு இருக்கேன்.. யாருமே இல்லியா?? எங்கையா போய் தொலைந்தீர்கள்..

  52. scssundar கூறுகிறார்:
    அக்டோபர் 4, 2008 இல் 5:36 பிற்பகல்

    //10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க.//

    இதை எப்படி செய்வது? விளக்கம் தேவை… பதிவே போட்டாலும் சரி.. இல்லை எனக்கு தனி ஈ மடலில் எழுதுங்கள்.///////////////////////

    தம்பி அடுத்த பதிவு உனக்கு ரெடி…

    சீக்கிரம் போட்டுடு …

  53. அக்டோபர் 4, 2008 இல் 5:40 பிற்பகல்

    இருந்தாலும் இந்த உருப்படாதவர் கூட சேர்ந்து நீங்கள் அடிக்கும் கும்மி ரொம்பவே ஓவர்….

    சரி சரி…

    என் பதிவில் எப்ப ஆரம்பிப்போம் கும்மியை…?///////////////////////

    இங்க பாருப்பா, வேலியில போற ஓணான எடுத்து மடிக்குள்ள வுட சொல்றாரு..

  54. எனக்கு இங்க போர் அடிக்குது.. தம்பி இப்படி நீ ரிப்ளை பண்ணாம இருந்தா அவ்வளவு தான்.. சொல்லிபுட்டேன்

  55. வரட்டா… பாய் பாய்

  56. நல்ல பயனுள்ள தகவல்கள், நான் இதை உண்மையாதான் சொல்லுறேன் நீங்க காமெடின்னு நினைக்க கூடாது

  57. Tamil said

    டைம் கிடியாகரதால தானே உங்களால எழுத முடியுது, அப்புறம் எப்படி உங்களை போல டைம் கிடைகதவர்கல்னு சொல்றீங்க தலைவா ?

    சரி அத விடுங்க,

    நல்ல பயனுள்ள தகவல், மிக்க நன்றி

  58. சுபாஷ் said

    அடக்கடவுளே!!!
    அணிமா!!!!!!!!!
    இது எனக்கே ஓவராதா தெரியுது.
    இந்தப்பதிவுக்கு இப்படியா??
    ஆஹா என்ன ஒரு பாசம்!!!!
    எல்லாத்துக்கும் ரிப்ளை தருவேன்
    ( பஜப்படாதீங்கண்ணா!! பிளாக்கிலதான் )

  59. சுபாஷ் said

    வாங்க சுந்தர்.
    Blogger ல் 200 பின்னுட்டங்களுக்கு ஒரு பேஜாக அதுவே மாற்றிக்கொள்ளும்.
    நாம் செட் பண்ண முடியாது.

    ஆனா சொந்த சர்வரில வேர்ட்பிரஸ் நிறுவியிருந்தா ஓபன் சோர்ஸ்ங்கறதினால Add Onn போட்டு விரும்பியபடி செய்யலாம் ( 50 பதிவுக்கு ஒரு பேஜ்னு )

    ஆனா நீங்கதா Blogger Citizen ஆச்சே!!!
    நானும் Blogger ல testing blog ஒன்னு பண்றேன்.
    டெம்ப்லேட் செட் பண்றது பெரிய வேலையா இருக்குங்க.
    மத்தப்படி ஆட்சீன்ஸ் எல்லா ஈசியா போடகூடியமாதிரி இருக்கு.

  60. சுபாஷ் said

    வாங்க குடுகுடுப்பை. வருகைக்கு நன்றி!!!!
    college work எல்லாம் முடிய கண்டிப்பா திங்கட்கிளமையிலேர்ந்து உங்க கடய ஒரு கை பாக்கலாம்

    வாங்க நசரேயன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    ஃஃநீங்க காமெடின்னு நினைக்க கூடாதுஃஃ
    நா காமடியா நினைக்கணும்னே இப்படி சொல்றது!!!

    வாங்க Tamil
    ( நானும் Tamil தாங்க!!!! )
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  61. சுபாஷ் said

    Monday வரை என் college assignment works இருப்பதால் அனைவரையும் Monday evening சந்திக்கிறேன்.
    இடையில் draft ல் உள்ள windows பதிவொன்னு இறங“குமென்பதையும் தெரிவிச்சுக்கிறேன்ன்ன்ன்ன்ன்
    டும்டும்டும்

  62. Vishnu said

    நல்ல ஒரு பதிவு நண்பரே …
    பயனுள்ள தகவல்..மிக்க நன்றிகள் …

  63. Vishnu said

    ///உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
    மொத மூணு சும்மா மொக்கைக்கு போடாச்சு.. இனி பிரிச்சு மேயுற நேரம்…

    ஸ்டார்ட் மூஜிக்//

    எங்க எனக்கும் மியூசிக் வரட்டும்…ரெடி ஸ்டார்ட் 1 2 3 …

  64. Vishnu said

    //சுபாஷ் கூறுகிறார்:சிலருக்கு இருக்கற டைமில என்ன செய்யறதென்று தெரியாம பேந்த பேந்த முழிப்பார்கள்..//

    யாரு நம்ப அணிமா தலை முழிக்கற மாதிரியா ????..

  65. Vishnu said

    //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்: வன்மையாக கண்ணடிக்கிறேன்..//

    பழக்க தோஷம் விட முடியல ..

  66. Vishnu said

    ///உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
    /////////////தொடர்ச்சியான இடைவெளியில் post போடாமை///////////////

    யோவ் மேட்டர் இருந்தா போட மாடோமா?? அது தான் கிடைக்க மாடேங்குதே, இதுல இது வேற..//

    ஏங்க அவரை அழ வைக்குறீங்க …

  67. Vishnu said

    //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
    அக்டோபர் 4, 2008 இல் 7:48 பிற்பகல்
    யோவ் அம்பது வரைக்கும் நான் ஒருந்தனே அடிச்சி ஆடிகிட்டு இருக்கேன்.. யாருமே இல்லியா?? எங்கையா போய் தொலைந்தீர்கள்..//

    தலை இப்ப தான் வந்தேன் ..ஹி ஹி ..(தலையை சொறிஞ்சு கொண்டே ..)

  68. Vishnu said

    //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:

    மிகமுக்கியம் – இந்த ரிசேச்சுக்கு எனக்கு Phd குடுப்பாங்களா?///////////

    அட்ரஸ் தரவும்.. அப்போ தான் டெலிவரி பண்ண வசதியா இருக்கும்…//

    போன வாரம் இத தான் அவங்க Phd தரவங்க எங்க தலை கிட்ட சொன்னாங்க ..
    அதன் அவரு சொல்றாரு ..
    அவரு குடுத்த மாதிரி நீங்களும் அட்ரஸ் குடுத்துட்டு வாங்க ..

  69. Vishnu said

    அணிமா தலை அவர்களுக்கு ;;
    தலைவா ..தப்பா எடுக்காதீங்க ..இங்க வரும்போது ..சுபாஷ் கும்மளாம்னு தான் வந்தேன்..உங்களைப்பார்த்த உடனே ..ஆட்டோமேடிக்கா ………………………..

  70. Vishnu said

    //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:

    இனி முதல், நீ ஹாய் சுபாஷ் இல்லை..
    டாக்டர் சுபாஷ் என்று எல்லாராலும் அன்புடன் அழைக்க படுவாய்.//

    தலைவா அப்படியே எனக்கும் ஒன்னு ஏற்பாடு பண்ணுங்களேன் …:-))

  71. Vishnu said

    //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:

    ஐ.. இது நல்ல ஐடியா வா இருக்கே??
    உடனே பண்ணிட வேண்டியது தான்//

    ஆகா எங்க தலைக்கு ஐடியா வந்திருச்சு

  72. barthee said

    மிகவும் சரிதான் நண்பரே, நல்ல தகவல்

  73. செருப்படி said

    ஏய் கும்மி பிசாசுகளா… இதுல உங்களுக்கு என்ன கிடைக்குது… உருப்படியான பதிவுக்கு உருப்படியான பினூட்டம் போடுங்க… வாந்தி எடுக்காதீங்க… படிக்கிறவனுக்கு எரிச்சல இருக்கு… ஒரு சந்தேகம் கேட்கலாம்னா…. பதிவ மூட வேண்டியதா இருக்கு

  74. சுபாஷ் said

    thanks Vishnu!!!
    ahhh :)))

  75. சுபாஷ் said

    Thanks barthee

    thank செருப்படி.
    extremely sorry for the inconvenience.

  76. மோகன் said

    அடப்பாவி, இன்னும் என்ன என்ன வழி முறைகள் சொல்லி குடுக்க போறியோ?

  77. மோகன் said

    // உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
    மோகன் எங்க போனீங்க??//

    இதோ வந்துட்டேன்.

  78. மோகன் said

    //வழிமுறைகளை கொஞ்சம் ரிசேர்ச் பண்ணிப்பாக்கலாம் என நினைத்துக்கொண்டு//

    ஓஹோ, ரீ – சர்ச் (அதாவது திரும்ப தேடறது) பண்ணுறதுக்கு பேரு தான் research -ஆ? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?

  79. மோகன் said

    //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
    அக்டோபர் 4, 2008 இல் 4:10 பிற்பகல்

    நகைச்சுவை மற்றும் மொக்கைப்பதிவுகளுக்கு இது விதிவிலக்கு. ///////////////////////

    அப்போ நானும் என்னுடைய வலைப்பூவும் விதி விலக்கா.. வயுத்துல பீர வார்த்தியே ராசா..//

    விதி விலக்கு இல்லைன்னு சொன்ன மட்டும் மாறிவிடவா போறீங்க?

  80. மோகன் said

    //10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. //

    அப்படியா?

  81. மோகன் said

    //ஆனா.. நம்ம பதிவுகள படிக்கிறவங்க.. மெண்டல் எண்ணம் தான் வரும்..//

    புரிஞ்சா சரி.

  82. மோகன் said

    அடடா, நிஜமாவே ஒரு சந்தேகம் கேக்க வந்தவர ரொம்பவே படுத்திடீங்களே அணிமா, இது நியாயமா?

  83. Sri said

    யூஸ்புல்லா இருந்தது அண்ணா..!! :))

  84. Sri said

    பின்னூட்டமும் நல்லா இருக்கு..!! ;)))

  85. சுபாஷ் said

    வாங்க மோகன்!!!
    வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி

  86. சுபாஷ் said

    வாங்க Sri
    முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

  87. சுபாஷ் said

    சுந்தர் ,

    WordPress ல் Meta RSS ல் comments feed களை rs reader முலமாக பெறலாம். ஆனால் Blogger போன்று email notification இங்கு காணவில்லை!!!
    ( திரும்பவும் blogger தான் பெஸ்டோ??? )
    கண்டிப்பாக இதற்கு ஏதாவது செய்வேன் சுந்தர்.
    முடித்ததும் அறியத்தருகிறேன்.
    நன்றி

  88. Hi.. Your research is amazing.
    //10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க.

    Sorry Boss. Till Now I didn’t get 25+ Comments / Post.

    As Per your request, I am posting 1 or 2 posts / day only.

    Thanks Dear Buddy

  89. சுபாஷ் said

    Thanx TamilNenjam

  90. அன்பின் சுபாஷ்,

    அருமையான ஆலோசனைகள் – சிந்திக்கலாம்

    இந்த செருப்படி என்பவரின் மறு மொழியினை மென்மையாக ஆதரிக்கிறேன். உண்மையில் எரிச்சல் தான் வருகிறது கும்மி மறுமொழிகள் படிக்கும் போது. (என்னுடைய பதிவினில் கேட்டு வாங்கி – கும்முபவர்களை அழைத்து கும்மி அடிக்கச் சொல்லி இருக்கிறேன் ) – ஏனோ எழுத வேண்டும் என நினைத்தேன் – அவ்வளவு தான்

    என் பங்குக்கு : பிளாக்கை கை கழுவணும்னா – கைய நீட்டச் சொல்லி – பினாயில் ஊத்தி கழுவி விட வேண்டியது தானே ! ( சாரி ! )

  91. சுபாஷ் said

    வருகைக்கும் கருத“திற்கம் மிக்க நன்றி சீனா அவர்களே.

    கும்மி நண்பர்ளுடன் ஜாலியாக பொழுதை கழிக்க போடுவது.
    அதில் கிடைக்கும் ரிலாக்ஸ் சந்தோஷம் அவ்வளவு சுகம். எல்லாதையும் மறந்து சிரிச்சுட்டு இருக்கலாம்.
    இனி இதுக்கென தனியாக பதிவு போடலாமென இருக்கிறேன்.
    அசௌகரியங்கள் இருந்தால் முழு பொறுப்பாளி நானே!
    நண்பர்களை தவறாக எண்ண வேண்டாம்.
    நன்றி.

    ஃஃஃஎன் பங்குக்கு : பிளாக்கை கை கழுவணும்னா – கைய நீட்டச் சொல்லி – பினாயில் ஊத்தி கழுவி விட வேண்டியது தானே ! ( சாரி ! )ஃஃஃஃ

    ஹாஹா அதுதா நம்ம கைல இல்லியே!!! வெர்ட்பிரஸ் காரங்க கம்பியுட்டரதா கழுவணும்!!!

  92. Prasanna said

    வணக்கம் சுபாஷ்!

    RV யுடைய ப்ளாக்கிலிருந்த லிங்க் மூலம் இங்கே முதல் முறையாக வருகிறேன். ரொம்ப உபயோகமான விஷயங்களா எழுதறீங்க.

    தொடர்ந்து எழுதவும்!

  93. சுபாஷ் said

    வாங்க பிரசன்னா
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்
    தொடர்ந்தும் வாங்க!!!

  94. BHuvanesh said

    மிக நல்ல இடுகை! திரு. ஆர்.வி அவர்களின் தளத்திலிருந்து வந்தேன்!

    கும்மி நல்ல இருக்கு! எல்லா நல்ல விசயத்தையும் நாலு பேரு எதிர்பாங்க (இங்க ரெண்டு பேரு தான் எதிர்கறாங்க!)! சுனாபானா விடுரா விடுரான்னு போய்டே இருக்க வேண்டியது தான்!

  95. nilaamathy said

    நான் இன்னும் அகர வரிசை தானுங்கோ……….எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோ ? கொஞ்சம் விளங்குது ஆனால் விளங்கலை . இது ஜோக் இல்லயுங்கோ . நிறைய தடுமாற்றம் . நிலாமதி

  96. Subash said

    வாங்க BHuvanesh, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
    ஹாஹா. உண்மைதான். கும்மியடிக்கிறது செம ஜாலி!!!! அப்படி பண்றவங்களுக்குதான் புரியும். Support ற்கு நன்றிங்க.

    வாங்க nilaamathy உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
    சொல்லித்தர என்ன இருக்கு. நீங்க சொன்ன மாதிரி வெிளய்கியும் விளங்காம பதிவு போட்டாலே அதுதான் முக்கிய விடயமாக மாறிவிடும். உதா – சிறந்த உலகதரமான படங்கள். நாவல்கள் — நம்பள மாதிரி ஆளுங்களுக்கு விளங்காம பண்ணோம்னா அதுதா பெஸ்ட்னு சொல்லிடுவாங்க ( ஐயோ. ரகசியத்த சொல்லிட்டேனோ!!!!! )

  97. nilaamathy said

    வணக்கம் சுபாஷ் ………….நன்றிகள் உங்கள் புதிய ஆக்கங்கள் வரும்போது என் இ மடலுக்கு அறிய தரவும் . நன்றிகள். நட்புடன் நிலாமதி .

  98. சுபாஷ் said

    ஆஹா என்னிடம் இப்படி கேட்ட மெத ஆளு நீங்கதான். ( ரொம்ப அப்பாவியா இருப்பீங்களோ ??? )

    RSS Feed use பண்ணலாமே.
    கண்டிப்பாக அறிஙத்தருகிசேன்ஃ

பின்னூட்டமொன்றை இடுக