சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘Wireless Network’

Windows Server 2008 இல் Wireless Network

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 7, 2008

இந்த முறை விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பை செயற்படுத்துவது பற்றி பார்க்கலாம். வழமைபோல இந்த செயன்முறையை நீங்கள் VM Ware அல்லது Virtual PC போன்ற போலி இயங்குதள நிர்வாக மென்பொருட்கள் மூலம்  பயிற்சிபெற முடியாது. ( ஆனால் NAT மூலமாக எப்படி செய்யலாம்) கண்டிப்பாக உங்கள் கணனியில் இரண்டாம் நிலை இயங்குதளமாக நிறுவிக்கொள்ளலாம். அல்லது பயிற்சிக்காக ஓர் வன்தட்டை பயன்படுத்தலாம்.

முக்கியமாக மடிக்கணனியில் விண்டோஸ் சர்வர் 2008 பயன்படுத்துவபர்களுக்கு உதவியாக இந்தப்பதிவு இருக்குமென எண்ணுகிறேன்.

சரி விடயத்திற்கு வருவோம். நீங்கள் உங்கள் கணனியில் Wireless Network Adapter ஐ நிறுவிய பின்னர் Wireless NIC மூலமாக கம்பியில்லாத வலையமைப்புடன் தொடர்புகொள்ள முயற்சிக்கவும். இப்போது இதன் status ஆனது Disabled ஆகவிருப்பதை உணர்வீர்கள்.

Wireless Network வசதியுள்ள மடிக்கணனிகளில் விண்டோஸ் சர்வர் 2008 நிறுவப்பட்டிருந்தால் அதன் Wireless Connection ஆனது Disabled ஆகவிருப்பதை காணலாம்.

ஏன் இப்படி? வேறொன்றுமில்லை. வழக்கமான நிலையில் Disabled ஆக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை இயங்குநிலைக்கு கொண்டுவர சில படிமுறைகளை கையாளவேண்டும். முக்கியமாக இதற்குண்டான கோப்புகளை நாமாக நிறுவ வேண்டும். விண்டோஸ் சர்வர் 2008 இன் அழகே இதுதான். நிறைய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் எல்லாம் Disabled ஆகவிருக்கும். நமக்கு தேவையானவற்றை மட்டும் நிறுவிக்கொண்டால் போதுமானது. இதனால் பல தேவையற்ற அம்சங்கள் மூலமாக கணனியின் செயல்பாடு விரயமாக்கப்படமாட்டாது.

இப்போது நாம் கோப்புகளை நிறுவும் முறையை பார்க்கலாம்.

Start > Network க்கு செல்லவும்

Network and Sharing Center எனும் பொத்தானை அழுத்தவும்.

Tasks என்பதற்கு கீழுள்ள Manage Network Connections க்கு செல்லவும்

Network Connections பக்கத்தை திறந்து கொள்வீர்களாயின் Wireless Network Connection ஆனது Disabled ஆகவிருப்பதை பார்க்கலாம். நீங்கள் right click மூலம் இயங்குநிலைக்கு வரவழைக்க முற்பட்டாலும் மீண்டும் Disable ஆக மாறிவிடும்.

இவ்வம்சத்தை இயங்குநிலைக்கு கொண்டுவர Wireless LAN Service Feature
என்பதை நிறுவ வேண்டும்.

1. Start > Server Manager , or Start > Administrative Tools > Server Manager எனும் வழிமுறைகளட மூலம் Server Manager ஐ திறக்கவும்.

2. இடது பக்கமுள்ள பட்டியலிலிருந்து Features என்பதை தெரிவு செய்யவும்.

3.வரும் சாரளத்தில் Add Features என்பதை தெரிவு செய்யவும்.

4. இப்போது பயன்படுத்தத்தக்க அம்சங்கள் கொண்ட ஒரு பட்டியல் கிடைக்கும். அதில் scrole செய்து  Wireless LAN Service checkbox ஐ தெரிவு செய்து Next ஐ சொடுக்கவும்.

5. அடுத்து வரும் Confirm Installation Selections சாரளத்தில் Install ஐ சொடுக்கவும்.

நிறுவும் பணி துவங்கிவிடும்.


நிறுவுதல் முடிவுற்றதும் Close Button ஐ சொடுக்கவும்.

6. மீண்டும் Network Connections பக்கத்திற்கு செல்லவும். அங்கு Wireless Network Connection இன்  status ஆனது “Disabled” என்பதிலிருந்து ” Not Connected” என மாறியிருக்கும். அப்படி மாறவில்லையெனில் Wireless Network Connection மீது Right Click செய்து Enable என்பதை சொடுக்கவும்.


7. இனி Wireless Network இனை நாம் தாராளமாக இயங்கச்செய்யலாம். Wireless Network Connection மீது Right Click செய்து Connect/Disconnect என்பதை தெரிவு செய்யவும்.


8. இப்போது பயன்படுத்தக்கூடிய wireless connection களின் பட்டியல் ஒன்று கிடைக்கும். அதில் ஒன்றை தெரிவு செய்து Connect என்பதை தெரிவு செய்யவும். சிலவேளைகளில் உங்களின் Wireless Connection இல் ஏதாவது பாதுகாப்பு அமைத்தல்கள் இருப்பின் shared key யை உள்ளிடச்சொல்லி கேட்கும். அல்லது சில Wireless Network க்குகள் SSID இனை மறைத்து வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கயே சுயமாக wireless connection ஐ நிறுவ அல்லது அமைத்தெடுக்க வேண்டி வரலாம்.


Wireless Networking சரியாக நிறுவப்பட்டபின்னர் கீழே படத்தில் காட்டியவாறு காணப்படும்.

சுருக்கம் –
சாதாரணமாக விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பு Disabled ஆக இருக்கும். அதை எவ்வாறு இயங்குநிலைக்கு கொண்டுவருவதென இந்தப்பதிவு விளக்குகிறது.


ஆக்கம் –
சுபாஷ்.

டிஸ்கி 1-

அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.

தமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும்  உதவியாகவிருக்கும். நன்றி.

ஊசாத்துணை-
http://technet.microsoft.com/en-us/network/bb530679.aspx
http://www.way2books.com/2008/06/windows-server-2008-networking-and.html – Free e Book

http://www.networkworld.com

படங்கள் –

டிஸ்கி 2 –

நேற்று US Robotics Wireless ADSL2 Router வாங்கினேன். அதனால்தான் இந்த Win 2k8 Wireless Network பரிசோதனைகள். இதுவரை இணைய அகலப்பட்டை இணைப்பிற்கு 4G தொழில்நுட்பமான WiMax பாவித்து வந்தேன். இனி பத்தாம்பழைய தொழில்நுட்பமான ADSL ற்கு மாறலாமென தீர்மானம். அதனால்தான் ADSL ற்கு apply செய்துவிட்டு ADSL Router ஐயும் வாங்கி வந்திருக்கிறேன். புதிய தொழில்நுட்பத்திலிருந்து பழையதிற்கு ஏன் மாறுகிறேனென எனக்கே குழப்பம்தான். ஆனால் ADSL ஆனது நான் தற்போது பாவிக்கும் 3.5G தொலழில்நுட்ப HSPA ஐயும் 4G தொலழில்நுட்ப WiMax ஐயும் விட Flexible ஆக இருக்கிறது. எப்படியென விளக்கமாக இன்னொரு பதிவில் சொல்லுகிறேன். இரன்டிற்கும் Bill கட்டுவதை விட பழைய ADLS மேலென எண்ணத்தோன்றுகிறது.  ஆனாலும் எப்பவும் எனது ஆதரவு 3.5 Genaration HSPA ற்குதான். 4G கூட இதற்குபிறகுதான். ஏனென பிறகு சொல்கிறேன்.

Posted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008 | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 17 Comments »