சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘Extension’

ஜிமெயிலின் மெருகேற்றப்பட்ட பயர்பாக்ஸ் தோல் நீட்சி

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 11, 2008

தலைப்பிலுள்ள எனது தமிழை நீங்கள் எப்படி விளங்கினீர்களோ தெரியாது. எதுக்கும் கீழே குடுக்கப்பட்டுள்ள படங்களை ஒருமுறை பார்த்துவிட்டீர்களென்றால் நான் எதை சொல்லப்போகிறேன் என்பது விளங்கிவிடும். Skin Extension ஐ எப்படி தமிழில் சொல்வது ????

சரி, விடுங்க, ஒரேமாதிரியான ஜிமெயிலை பார்த்து பார்த்து போரடிக்கிறதா உங்களுக்கு? ஒருமாதிரியுமில்லாத புதுமாதிரியாய் இருந்தால் நல்லதென்று நினைப்பவரா நீங்கள் ?  அப்படியென்றால் முதலில் கீழே உள்ள சுட்டியில் உள்ள நெருப்புநரி நீட்சியை சுட்டுக்கொள்ளவும்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2108

சரி. நிறுவிவிட்டீர்களென்றால் http://userstyles.org/ எனும் தளத்திற்குச்சென்று உங்களுக்கு பிடித்தமான  Skin ஐ தரவிறக்கி நீட்சியில் சேர்த்துக்கொள்ளவும். பல பயனாளர்கள் தாங்கள் சொந்தமாக உருவாக்கிய பல  Skins  இங்கே கிடைக்கும். நமக்கு தேவையானது இங்கே கிடைக்கும்.
http://userstyles.org/styles/8835.html

CSS ஐ இம்போர்ட் செய்தபின்னர் நீங்கள் எப்போது ஜிமெயில் சென்றாலும் கீழேயுள்ள படத்திலுள்ளவாறுதான் காட்சியளிக்கும்.

====================================================

இந்த நீட்சி  CSS கோப்பு மூலமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறது.  CSS பற்றி தெரிந்திருக்கவேண்டுமென எந்த அவசியமுமில்லை. ஆனால் தெரியுமென்றால் உங்கள் விருப்பம் போல  Skin ஐ மாற்றியமைக்கலாம். CSS பற்றிய இலவச புத்தகம் சக பதிவாளர் பகி அவர்களால்  இலவசமாக வழங்கப்படுகிறது.

http://oorodi.com/?p=510

நன்றி :  ஊரோடி பகி.

====================================================

எல்லா பயர்பாக்ஸ் வேர்ஷன்களுக்கும் ஒத்திசைவாக  புதிய skin நீட்சியை மீளாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக ஜிமெயில், ஜி காலண்டர் பாவனையாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். புதிய skin கண்ணைக்கவரும் விதத்தில் அழகாக செய்யப்பட்டுள்ளது.

CSS ல் பரிட்சயமுள்ளவர்கள் தாங்களாகவே இதில் பல மாற்றங்களை செய்ய முடியுமென்பது கூடுதல் சிறப்பு. கீழேயுள்ள படங்களை பார்த்த பின்னர் எப்படியென்று கூறுங்கள்.

இது ஜிமெயிலுக்கானது.

இது ஜி காலண்டருக்கானது,

இதேபோல youtube, Google என பல பிரபலமான தளங்களுக்கும் நீங்கள் செய்யலாம்.

உதாரணமாக

நான் இன்ஸ்டோல் செய்து பார்த்துவிட்டு பின்னர் நீக்கிவிட்டேன். ஜிமெயிலுக்கு நான் தண்டர்பேர்ட் பயன்னடுத்துவதால் இதனால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் ஜி காலண்டரின்  Skin  எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதை பாவித்த நண்பர் தனது பயர்பாக்ஸ் ஜிமெயிலை மெதுவாக லோட் பண்ணுகிறது என்றார். ஆனால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.நீங்களும் பயன்படுத்தி பார்த்துவிட்டு எப்படியென்று ஒரு கருத்து தெரிவிக்கலாமே ??

————–

டிஸ்கி –
கூகுள் நிறுவனத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Advertisements

Posted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், லினக்ஸ், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 15 Comments »