சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘அறிமுகம்’

தமிழில் Fedora 10 ( x86 & x64 மற்றும் Gnome & KDE ) தொடர்

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 10, 2009

Fedora லினக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு இலவச கட்டற்ற இயங்குதளம். இந்த பெடோரா லினக்ஸ் பற்றிய உதவிக்குறிப்புகளாகத்தான் இந்த ”தமிழ் Fedora” அமையவிருக்கிறது. முதலிலேயே லினக்ஸ் பற்றி அதிகமாக எனக்கு ஒன்றும் தெரியாதென இங்கேயே கூறிவிடுகிறேன். வழமையாக உபுண்டு வைத்தான் பயன்படுத்தி வந்தேன். ஆனால் பெடோராவை கற்றிருப்பது கூடுதல் தகைமையாதலால் இப்போது அதனையும் சுயமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். பல இணையத்தளங்களும் Fedora வினது உத்தியோக பூர்வ இணையத்தளமும் பல உதவிக்குறிப்புகளை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றிகள். படிக்கும் தகவல்களை அப்படியே கணினியில் சேமிக்கும் வழக்கமுண்டு. அதனை பதிவிலும் இட்டு உங்களுடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களின் அனுபவத்திலுருந்தும் அறிவிலுமிருந்தும் இன்னும் புதிய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாமென நினைக்கிறேன். ஏனெனில் இங்கு பலர் சுளியோடி முத்துப்பெற்றவர்கள். அவர்களின் ஆதரவு எப்போதுமிருக்குமென நம்புகின்றேன்.

பல நிறுவனங்கள் தங்களின் சர்வர் மேலாண்மைக்கு அதிகம் Cent OS, Suse Linux மற்றும் RedHat Server போன்றவற்றைத்தான் பயன்படுத்துவார்கள். சிலர் Debian OS பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் ஒவ்வொரு வினக்ஸ் இயங்குதளங்கள்தான். Linux Flavors என குறிப்பிடுவார்கள். இவற்றில் Cent OS மற்றும் RedHat Server ஆகியவை Fedora வினை தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். உபுண்டுவிற்கு 98%ம் தான்.
Susi Linux மற்றும் Debian OS போன்றவை உபுண்டுவிற்கு தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். Fedora விற்கு 98%ம் தான். காரணம் Fedora ஆனது ஆரம்பகால RedHat இயங்குதள kernel இனை அடிப்படையாக வைத்து அதே கட்டமைப்புக்களுடன் உருவாக்கப்பட்டது. ஆனால் உபுண்டுவோ Debian OS இன் கட்டமைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையில் மேலோட்டமாகப் பார்த்தால் எந்த வேறுபாடுகளும் தெரியாது. ஆனால் மென்பொருள் நிறுவும் பொறிமுறையும் சில commands வித்தியாசமாக பாவிக்கப்படும். ( வேறுபாடுகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தரவும் )

சரி, இனி பெடோராவைப்பற்றி பார்க்கலாம். Fedora Core 4 விலிருந்து இதனை பயன்படுத்தி வருவதனால் மற்றய லினக்ஸிலிருந்து இது மிகவும் பிடித்தவொன்றாக மாறிவிட்டது. பெடோராவின் முழு வரலாறும் விக்கிப்பீடியாவின் பக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அதையெல்லாம் விட்டுவிட்டு விடயத்திற்கு வரலாம். தற்போது பெடோராவின் 10ம் பதிப்புதான் சந்தையில் இறுதியாக வெளிவந்திருக்கும் பதிப்பு. அடுத்த மாதம் 11ம் பதிப்வை வெளியிடுகிறார்கள். இப்போது வேண்டுமானால் பீட்டாவினை தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் இங்கு நாம் பார்க்கப்போவது Stable ஆகவிருக்கும் 10ம் பதிப்பைப்பற்றித்தான்.

பெடோரா 10 ஆனது x86 மற்றும் x64 பதிப்புகளாக கிடைக்கிறது. நமது கணினியின் வேகம் அதிகமாகவிருந்தால் x64 பதிப்பினை நிறுவிக்கொள்ளலாம். அதாவது உங்களிடம் 3GB க்கு மேலான அளவு ரேம், AMD x86_64 ரக அல்லது இன்டல் Dual Core/ Core 2 Due மற்றும் இவற்றிற்குப்பிந்திய processor இருக்குமானால் இந்த 64பிட் பதிப்பின் முழு வேகத்தையும் எங்களால் அனுபவிக்க முடியும். வேகம் என்றால் சும்மா இல்லை. மேலே கூறியதைவிட வேகம் குறைந்த எனது மேசைக்கணினியில் 64பிட் பதிப்பு நிறுவ எடுத்த கால அளவு வெறும் 5 நிமிடங்கள்தான். ( 32பிட் உபுண்டுவிற்கு 15 நிமிடம், 32பிட் விஸ்டாவிற்கு அல்டிமேட் 20-30 நிமிடம், 32 பிட் XP_sp2 க்கு 20-25 நிமிடம், 64பிட் XP_sp2 ற்கு 15 நிமிடங்களும் பிடித்தது). அவ்வாறில்லையெனில் 32பிட் பதிப்பான x86 இனையே நிறுவிக்கொள்ளலாம். நீங்கள் போலி இயங்குதள மென்பொருட்களை (  Vertual Box / VM Ware & Vertual PC  இனை தவிர்த்தல் நலம்) பாவிப்பதாயிக் 32பிட் இயங்குதளத்தையே நிறுவிக்கொள்ளவும்.

அடுத்து நமக்குத்தேவை எம்மாதிரியான வரைகலை இடைமுகப்பினை (Desktop Interface ) என்பதை வைத்து 2 வகையாக பிரிக்கலாம். சாதாரணமாக பிரபலமான Linux Desktop ஆக Gnome விளங்குகிறது. இது பாவிக்க சற்று இலகுவாகவிருப்பினும் பயனர்களிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வது கடினம். அதற்கேற்றாற்போல பயனர்தான் வளையவேண்டும். அடுத்தது KDE எனப்படும் பழைமைவாய்ந்த இடைமுகப்பு. இது ஆரம்ப காலத்தில் லினக்ஸ் முதன்முதலில் GUI ஆக வந்தபோதிலிருந்து பணன்படுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. தற்போது KDE 4.1 ஆனது மிகவும் வலிமைவாய்ந்த இலகுவானதொரு பயனர் இடைமுகப்பாக தெழிற்படுகின்றது. பயனர் தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பது இதன் சிறப்பம்சமாகும். இதனால் லிகன்ஸிற்கு மென்பொருள் தயாரிப்பவர்களின் முதற்தேர்வாகவும் KDE இருக்கின்றது.

நாம் இங்கு முதலில் 32பிட் Gnome உடைய பெடோராவைப்பற்றி பார்க்கலாம். 64பிட்டிற்கு வரவேற்பு எவ்வாறு கிடைக்குமென தெரியாது. அதனால் 64பிட் பற்றி பின்னர் பார்க்கலாம். ( தட்டச்சு செய்யும் நேரம் மிச்சம் ) மற்றும் சாதாரணமான Genome இலிருந்து படிப்பதும் நல்லது. நல்ல புலமை பெற்றபின்னர் மற்றயதை நாமே சுயமாக கற்றுக்கொள்ளலாம்.

=================================================================================================

இந்த தொடரினை http://fedoraintamil.blogspot.com எனும் புதிய பதிவினில் துவங்கியிருக்கிறேன். அனைவரினதும் ஆதரவும் உதவிகளும் வழமைபோல கிட்டுமென்ற நம்பிக்கையுடன்…

இது பற்றிய எங்களிற்குத்தெரிந்த விடயங்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

ஆரம்பத்தில் பிளாகர் தந்த லொள்ளுகளினால் வேர்ட்பிரஸ் தேடி வந்தேன். மற்றும் Cpanel மூலமாக நிறுவுவதும் இலகுவென்பதான் வேர்ட்பிரஸ்ஸே எனது ஏகோபித்த தெரிவாகவிருந்தது. இப்போது பல புதிய வசதிகள் பிளாகரிலும் இருப்பதனால் ஒரு முறை பரீட்சார்த்த முயற்சியாக பிளாகரில் பதிவு துவங்கியிருக்கிறேன். பார்க்கலாம்…

மிக்க நன்றிகளுடன் சுபாஷ்.

Posted in அறிமுகம், தகவல் தொழில்நுட்பம், லினக்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 8 Comments »

தமிழ்மண வாசிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 13, 2008

தமிழ்மண அங்கத்தவர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். கிட்டத்தட்ட பதிவெழுத ஆரம்பித்து ஒரு வாரமாகும் நிலையில் தமிழ்மணம் எனது பதிவை இப்போது ஏற்றுக்கொண்டு விசா வழங்கியிருக்கிறது. நன்றி.

தமிழ்மணத்தில் எனது பதிவையும் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி.  இங்குள்ள அனைத்து தமிழ்மண வாசிகளுடன் இணைந்துகொள்வதிலும் மிக மகிழ்ச்சி. என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். நிறைய நாளாக தமிழ் பதிவுகளை வாசித்து பிடித்தவற்றிற்கு பின்னுட்டமும் இட்டுவந்த நான் கொஞச நாள் விடுமுறையில் வீட்டிலிருந்தபோது விளையாட்டாக ஒரு தமிழ்பதிவை துவக்கிவிட்டேன். சாண்டில்யனின் சரித்திர நாவல்களுடன் ஐக்கியமாயிருந்த நான் இப்போது பதிவுகளை வாசிப்பதில்தான் ஓய்வுநேரத்தை செலவிடுகிறேன். அந்தளவிற்கு தமிழ்பதிவுகளும் பதிவர்களும் இடுகைகளும் விவாதங்களும் பின்னுட்டங்களும் நன்றாக ஈர்த்துள்ளன. உங்களின் அன்பையும் நட்பையும் என்னுடனும் பகிர்ந்துகொள்வீர்களென நம்புகிறேன். நன்றி.

சுபாஷ்.

(( காலையில் எழுந்தவுடன் மெயிலில் தமிழ்மண மெயில் பார்த்து இந்த பதிவை எழுதினேன். காலையில் நம்ம ரஃமானோட பாட்டு கேட்டுட்டே டைப்படிச்சதுல பாடசாலையில் தமிழ்பாடத்துக்கு எழுதியதுபோல சீரியசா எழுதிட்டேன். இத வச்சு என்னை சீரியசான ஆளுனு நினைச்சுடாதீங்க. நா மொக்கச்சாமி சங்க ஆளுதான்!!!! ))

Posted in அறிமுகம், பொது | குறிச்சொல்லிடப்பட்டது: , | 20 Comments »