சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘interface language’

தமிழிலும் எரியும் நெருப்புநரி !!!

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 6, 2008

நெருப்பநரியை விட ஏனோ மனசுவரவில்லை. ஆக மீண்டும் ஒரு நெருப்புநரி பற்றிய பதிவு!!! கடந்தவாரம் முழுக்க காய்ச்சலிலேயே போய்விட்டது. ஏன் நமக்கு இப்படியொரு சொதனைனு பாத்தா தொடர்ந்து விண்டோஸ் பத்தி பதிவு போட்டனா? உடகே நம்ம நெருப்புநரியார் சாபம் குடுத்திருக்காருனு இன்டர்நெட் ஜோசியக்காரர் சொன்னாரு. சரி நமக்கெதுக்கு வம்பு? அவருக்கு ஐஸ் வைக்கற மாதிரி ஒரு பதிவ போடலாமேனுடு இந்த பதிவு!!!

இந்தமுறை User Interface மொழியை முற்றிலும் தமிழில் மாற்றுவது பற்றி பார்க்கலாம்.

இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் அயராத முயற்சியின் பலனாக இந்த முழு தமிழ் இடைமுகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக முதற்கண் அவர்களுக்கும் அவர்களை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி.

இப்ப ஸ்டெப் பை ஸ்டெப்பா பாக்கலாம்.

1. இங்க வந்து தமிழ் இடைமுகப்புக்கான ஆட் ஓன்னை டவுண்லோட் செய்யவும்.

2. அப்படியே இன்ஸ்டால்பண்ணி Firefox ஐ restart பண்ணவும்.

3. Address Bar ல் about:config என டைப் செய்து என்டரை அழுத்தவும்

4.மவனே இங்க என்ன பண்ணப்போறேனு தெரியுமானு Firefox கேக்கும். அதுக்கும் என்டர அமுக்குங்க. இப்ப வார பக்கத்தில் மேல Filter Zone என்று ஒன்று இருக்கும். அதுல general.useragent.locale என டைப் செய்யவும்

5. மேல வந்தமாதிரி உங்களுக்கும் வரும். இதுல fr-FR க்கு பதிலா உங்கள்ட en-US னு இருக்கும். அதுக்கு மேல ரைட் க்கிளிக் பண்ணி Modify என்றத க்கிளிக்னணும்.

வார விண்டோல ta-LK னு டைப் பண்ணுங்க ( Case Sensitive வோட)

6. Firefox ஐ restart பண்ணுங்க. நீங்க சரியா Language Pack ஐ install பண்ணியிருந்தா எல்லாமே தமிழில் வர நீங்க என்னமாதிரியே மேனு முளிப்பீங்க. ஏன்னா தமிழ் தெரிந்த தமிழர் குறைவென்பதால். வெட்கம்தான்!!!

எனக்குத்தா தமிழ் நல்லா தெரியும்னு நெஞ்ச நிமித்தி திரிஞ்ச ஆளா நீங்க??? அப்ப உங்க நெனப்புக்கு ஆப்புதான்.

இதை நிறுவியபின் தமிழனென்ற ஒரு இது வரும் பாருங்க. கட்டாயம் பெருமைப்படணும்.

இப்படி தமிழில் இருப்பதை எப்படி பழைய நிலைக்கு மாற்றுவது?

சிம்பிள்,

5ஆவது படிமுறையில் Modify என்பமதற்கு கீழே Reset என்று இருக்கும். அத கிளிக் பண்ணி Firefox ஐ restart பண்ணா போதும். பழையபடி தமிழனின் மிகவிருப்ப மொழி ஆங்கிலத்திற்கு மாறிவிடும்!!!!

ஃஃஃஃஃஃஃஃ எப்பவும் எதையும் செய்துபாக்க பயப்படவே கூடாது. ச்சும்மா ட்ரை பண்ணுங்க ஃஃஃஃஃஃ

இதேமாதிரி இமெயிலை நிர்வாகிக்க உதவும் தண்டர்பேர்டையும் முழு தமிழில் மாற்றலாம்.

தண்டர்பேர்ட் பற்றி அறியவும் தமிழில் மாற்றவும் :

பயனர் போப்பு – தமிழில்

மொழிக்போப்பு

எல்லா நன்றியும் http://www.lakapps.lk/tamil/ க்கே!!!

வளரட்டும் இவர்கள் சேவை.

Posted in தகவல் தொழில்நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | 40 Comments »