சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோசனைகள் 1

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 26, 2009

முதலில் பொதுவான தமிழ் / பிறமொழி இணையத்தளமிருப்பின் அதன் மூலம் என்னென்ன செய்யலாமென பார்க்கலாம்.

எல்லாவிதமான விடயங்களையும் உங்கள் பதிவில் / வெப்பில் கவர் பண்ணுபவரா நீங்கள் ? உங்களுக்கு கூகிளிக் ஆட்சீன்ஸ்தான் முதல் தெரிவாகவிருக்கட்டும். மற்றயது Banner Ad போன்றவற்றையும் முயற்சிக்கலாம். பொதுவாக பதிவுகளில்Pay per clicks / Immpressions எல்லாம் பயன்படாது. மாதத்திற்கு இவ்வளவென விளம்பரப்படுத்தும் சேவைகளைத்தான் நம்பவேண்டும். அதுதான் அதிகமான வருவாயை தரும். தமிழில் இதுபோன்றதொரு தளம் இருக்கிறதாவென தெரியவில்லை. இல்லாவிட்டால் புதிதாக உருவாக்கலாம். தேவையான மென்பொருள் வசதியை என்னால் தர முடியும். ஆனால் பிரபலமாக வெகு நாளாகும். விகடன், தட்ஸ்தமிழ், தமிழிஷ், தமிழ்மணம் போன்ற பிரபலமாகவுள்ள தமிழ் இணையத்தளங்கள் இச்சேவையை செய்ய முன்வந்தால் மிக உச்ச பயன் கிடைக்கும். ஏனெனில் விளம்பரதாரர்களும் நம்பிக்கையுடன் விளம்பரம்தர ஒத்துழைப்பார்கள்.

——————————————————————————

இத்தளம் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும்?

விளம்பரம் வெளியிட விரும்புவோர் தங்கள் தளம் பற்றிய விபரங்களை தரவேண்டும். அத்தள Hits விடயங்கள் automatic script / Tamilish or smiler Tamil web sites- votes அடிப்படையிலே  திரட்டப்படும். ( Alexa / Google page rank போன்றவை இங்க உதவாது. ) இவர்கள் எந்த வகை வியாபார விளம்பரங்கள் தங்கள் தளங்களில் வெளியிடலாமென தெரிவிக்க வேண்டும்.  மற்றும் எதிர்பார்க்கும் கட்டணத்தையும் தெரிவிக்கவேண்டும். இவையாவும் டேட்டாபேசில் ஒருமுகப்படுத்தப்பட்டு சேமிக்கப்படும்.

விளம்பரதாரர் தங்கள் விளம்பரங்கள் எந்த வகையான தளங்களில் வரவேண்டுமென நிர்ணயம் செய்து தங்கள் எதிர்பார்க்கும் அல்லது செலுத்தக்கூடிய உச்ச கட்டணத்தையும் தெரிவிப்பர்.

நமது Script ஆனது இவர்கள் இருவருக்கும் இணைந்தாற்போல வரும் விளம்பரதாரரையும் வெளியீட்டாளர்களையும் பட்டியல் போட்டு நொடியில் தந்துவிடும். பின்னர் இருவருக்கும் பிடித்திருந்தால் விளம்பரம் வெளியிடலாம். தரகாக இயைத்தளத்திற்கு ஒரு விகித அடிப்படையிலோ அல்லது fixed rate ஆகவோ பணம் செலுத்த இந்த தளத்திற்கும் வருமானம் பெருகும்.

அடுத்து 3ம் தரப்பாக இணையத்திற்கு சம்பந்தமில்லாதவர்களாகவிருப்பவருக்கும் இவ்விணையம் மூலம் வருமானமீட்டலாம். அதாவது உங்களின் ஏரியாவிலுள்ள வியாபா நிலையங்களிலிருந்து விளம்பரங்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இடைத்தரகாக ஒரு வருமானத்தையும் பெறலாம்.  ஆக 4 தரப்பினருக்கும் வருமானம் கிடைக்கும்.

சாதாரண Banner ad management script  இனை சிறிது மேம்படுத்துவதன் மூலம் இவ்வசதிகள் கொண்ட ஒரு இணையத்தளமிருப்பின் வருமானம் பெருகும். ஆங்கில தளங்களுக்கு இவ்வாறெரு தளம் முற்றாக வடிவமைத்துக்கொடுத்திருக்கிறேன். இதைப்பற்றி வேறு தகவல் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும். ( தெழில் காரணமாக என்னால் Script தரமுடியாது. என் பிழைப்பே இதுதான். ஆனால் என்னாலான யோசனைகளை தயங்காமல் தருவேன் )

——————————————————————————————

அடுத்து Google Adsense களை நம்பி ஆங்கிலத்தளங்களை வைத்திருக்கிறீர்களா?

உங்களின் தளம் கண்டிப்பாக ஏதாவதொரு குறித்த விடயத்ததை மட்டுமே விவாதிப்பதாகவோ வெளியிடுவதாகவோ இருக்கட்டும்.

அதாவது Google Adsense ல் Finance, Economics, debt, Loan போன்ற key words வரும் விடயங்களை உள்ளடக்கிய தளங்களில் வெளியிடப்படும் adsense ஆட்களை யாராவது கிளிக்கினால் இதற்கு அதிக பணம் தருவார்கள். ஏனெனில் இந்த கீ வேர்ட்ஸ்சுக்கு இருக்கும் மவுசு அப்படி. ஆக நீங்களும் இது சம்பந்தமான பதிவுகளை இட்டு அதை விளம்பரப்படுத்தி ஹிட் சேர்த்தீர்களெனில் உங்கள் வெப்பிலிருந்து வரும் கிளிக்ககளுக்கு அதிக பணம் கிடைக்கும். 1st year படிக்கும்போது Adsense அறிமுகம் கிடைத்தது(2005/2006 ). அப்போது 4 பதிவுகளை ஆரம்பித்தேன். 3 மாதத்திற்குப்பின்னர் ஒரு மாதத்திற்கு $80-100 வரை கிடைத்தது. 4 வாரங்களுக்கொருதரம் செக் வரும். பின்னர் இந்த சில்லரை வேலையை விட்டுவிட்டு Software development ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை நன்றாக நடக்கிறது. விரைவில் 3வருட நிறைவு வர இருக்கிறது:) .

பல ஐடியாக்களை நீண்ட நாட்களாகவே பதிவிடும் எண்ணம் இருந்தது.  இன்றுதா கொஞ்சமாவது தட்டச்சு செய்திருக்கிறேன். எனது அறிவுக்கெட்டிய சில சில்லறை யோசனைகளைத்தான் சொல்லப்போகிறேன். உபயோகப்படுத்தலாமென நினைத்தால் விடாமுயற்சியாக முயன்றுபாருங்கள். யாருக்கும் ஐடியா சொல்லும் வயதில் நான் இல்லை. தவறாக நினைக்காமல் இருந்தால் சரிதான். இந்த ஐடியாக்கள் படிக்கும்பொது இருந்தது. இப்போது இல்லை. உங்களுக்கு ஏதாவது பொறி தட்டினால் தாமதிக்காமல் செயல்படுத்திவிடுங்கள். ( அதுதான் எல்லாவற்றிற்கும் மிக முக்கியம்.)

பின்னர், குறிப்பிட்ட விடயங்களை மட்டும் எழுதும் பதிவர்களுக்காக சில ஐடியாக்களை தருகிறேன். நீங்கள் திட்டாமல் ஆதரித்தால் மட்டும்.

அன்புடன் சுபாஷ்.

28 பதில்கள் to “இணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோசனைகள் 1”

 1. kricons said

  இதை போலவே நானும் ஒரு பதிவை வெளியிடலாம் என்று இருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள். Google Adsence தற்போது தமிழ் வலைபதிவை விளம்பர படுத்த அனுமதிக்க வில்லை. Google Adsense போல மற்றோரு தளம் ads.guruji.com. ஆனால் இன்னும் முழுமையாக இயங்க வில்லை என நினைக்கிறேன். அந்த விளம்பரங்களை என் வலைபதிவில் இனத்துள்ளேன். ஆனால் ads.guruji.comல் என் Views and Clicks கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

 2. திட்டாமல் ஆதரிக்கின்றேன்…

  தொடர்ந்து எழுதவும்

 3. James C said

  Valthkkaludan varugiren.

  Valaithalam pinnar inaiyathalam
  Ithu ini en vasantha (kaa)lam.

  Vanangugiren.
  James C

 4. தொடர்ந்து எழுதுங்க. உருப்புடாதது_அணிமாவும் திட்டாமல் ஆதரிக்கிறார். அவரைப்போல நான் திட்டவும் மாட்டேன். ஆனால் ஆதரிப்பேன். வாழ்க வளமுடன்

 5. naren said

  Who is owner for .com , .in ?
  I have an idia about this.pl.help to me.

 6. எனக்கென்னமோ.. இந்த adsense மேல.. எந்த ஈர்ப்பும் இருந்ததேயில்லை சுபாஷ். ஒருவேளை.. நீங்க சொன்னா அந்த $80-100/மாதம்-ங்கறது… இங்க.. 2 மணிநேர சம்பாத்தியமா இருக்கறனால இருக்கலாம்.

  இருந்தாலும்.. தொடருக்கு வாழ்த்துகள். எங்க ஆதரவு எப்பவும் உண்டு! 🙂 🙂 🙂

 7. […] இணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோ… முதலில் பொதுவான தமிழ் / பிறமொழி […] […]

 8. இந்த விகடன், தட்ஸ்தமிழ், தமிழிஷ், தமிழ்மணம் இவங்களே – தமிழ் வலைப்பதிவுகளுக்கான விளம்பரச் சேவையை தொடங்கலாம்னு சொல்லி கீறீங்க. நல்ல ஐடியா. அவங்க புரிஞ்சுக்கணும்.

  மேலும் CTS அடிப்படையில் இல்லாம, page viewing அடிப்படையில் அமைந்தால் நல்லது. ஆனால் அதற்காக ஒரே ஐபி வழியா 100 இம்ப்ரசன் இருந்தால் அதை bad அடிப்படையில் எடுத்துக்கொள்ளட்டும்.

  எத்தனை நாளைக்குத்தான் கூகிள் ஆட்சென்ஸையே நம்பிக்கிட்டு இருப்பது? உங்கள் ஆலோசனையை அவர்கள் செயல்படுத்தினால் உங்களுக்கு நன்றி. இப்போது முன்னறிவிப்பு நன்றி.

 9. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் kricons
  தமிழனாகப் பிறந்த காரணத்தால் எங்க நாட்ல நினைத்ததெல்லாம் செய்ய முடியாது. அதன் ஆதங்கம்தான் அப்படி எழுதினேன்.
  முந்திவிட்டேனா என இல்லை. நீங்களும் உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்கள். நமக்கும் நாலு பேர் பார்வையிலிருந்து வரும் விடயங்களை கணிப்பதும் மிக உபயோகமான ஒன்று. நான் கொஞ்சம் சீரியசில்லாமல் எழுதுவேன் நீங்க சரியானமாதிரி அடிச்சு விடர மாதிரி நச்சுனு சொல்லுங்க.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அணிமா
  கண்டிப்பா ட்ரை பண்றேனுங்க.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் James C
  ஏதோ கவுஜயாக சொல்ல ட்ரை பண்ணீங்களோ????
  ஹிஹி

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தமிழ்நெஞ்சம்
  ஒரு ஆதங்கத்தில்தான் இப்படி ஒரு பதிவிட்டேன். ஆனால் கணடிப்பாக நிறைய விடயம் சொல்ல ஆசைஇ முயற்சி செய்கிறேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் naren
  சூகிளில் .com.in தள registration என தேடிப்பாருங்கள். கண்டிப்பாக கவர்மென்ட் தளமொன்று இருக்கும். தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளலாமே!!!

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஹாலிவுட் பாலா
  நீண்ட நாட்களிற்குப்பின்னர் சந்திப்பதில் மகிழ்ச்சி.
  2005ம் ஆண்டு 20 வயதில் 1ம் ஆண்டு படித்து ஊர் சுற்றும் வேளையில் கையில் சுளையாக 10000 ரூபா கிடைத்தால் எப்படி இருந்திருக்கும் ????? அந்த மகிழ்ச்சிதான் அது. இன்னும் மறக்க முடியாதது. இனி எங்கே எவ்வளவு வருமானம் வந்தாலும் வாழ்க்கையில் அதுதான் பெரிய விடயமாகவிருக்கும்.( எனக்கு 🙂 )

 10. சுபாஷ் said

  ஃஃஒரே ஐபி வழியா 100 இம்ப்ரசன் இருந்தால் அதை bad அடிப்படையில் எடுத்துக்கொள்ளட்டும்.ஃஃ
  உண்மையில் இதுதான் நவீனமானதும் தற்போது புழக்கத்தில் உள்ள உத்தி.

  எனக்கென்னமோ இப்படி ஐபி வச்சோ இல்ல வேற முறையை வச்சொ பணம் தருவதாக சொன்னால் கண்டிப்பாக நிறைய மோசடிகள் நடக்கும். ( socks protocols வச்சு நானே நிறைய முறை சோதனை முயற்சியில் இறங்கியிருக்கேன். – தப்பாக நினைக்க வேண்டாம். அது படித்த பாடத்தில் ஒரு பகுதி. ஹிஹி )
  வலைப்பக்க டிராபிக் ரேஜ்சைப்பொறுத்து வலைப்பக்க உரிமையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்யட்டும். அதில் விளம்பரம் செய்ய விரும்பும் விளம்பரதாரரும் இந்த விலை கட்டுப்படியாகவிருப்பின் மாதாந்த அல்லது வருடாந்த தொகைக்கு விளம்பர இடத்தை குத்தகைக்கு எடுப்பது போல எடுத்துக்கொள்ளட்டும். நிறைய ஹிட் வரும் அதேவேளை குறைந்த விலையில் விளம்பர இடம் தரும் தளத்திற்கு மவுசு கூடும்.
  இதனால் மோசடி நடக்குமென நினைக்கவில்லை. அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக பணம் கையில் கிடைக்கும். ஆனால் இது மிக மிக மிகவும் பழைய முறை.

 11. சுபாஷ் said

  ஃஃஇவங்களே – தமிழ் வலைப்பதிவுகளுக்கான விளம்பரச் சேவையை தொடங்கலாம்னு சொல்லி கீறீங்க. நல்ல ஐடியா. அவங்க புரிஞ்சுக்கணும்.ஃஃ

  அதன் காரணம் திடீரென அவ்விணையத்தளம் துவங்கி பதிவர்களினது ஆதரவை பெறலாமெனிலும் பணம் செலுத்த தயாராகவுள்ள விளம்பரதாரர்களையும் அவர்களின் நம்பிக்கையையும் பெ நிறைய நாளாகும் ( குறைந்தது 1 வருடம் ) இத்தோடு இத்தளத்தை நரியான முறையில் சந்தைப்படுத்த வேண்டும். இதைப்பார்த்து போட்டிக்கு வரும் வேறு தளங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

  இதற்காகத்தான் நாமே இவ்வாறு செய்யாமல் ஏற்னவே நச்தையில் நன்மதிப்பைப்பெற்றுள்ள நிறுவனங்களை கேட்டேன். அவர்களிற்கு ஒரு சிறு லைன் விளம்பரம் அவர்கள் வெப்பிலோ பேப்பரிலோ போட்டால் போதும். ( விளம்பரதாரர்களை சென்றடைய பேப்பர்தான் இப்போதைக்கு சிறந்த ஊடகம் )

  இணைய இணைப்பு சிக்கலால் பின்னர் சந்திக்கிறேன்.

 12. சுபாஷ் said

  ஃஃஇவங்களே – தமிழ் வலைப்பதிவுகளுக்கான விளம்பரச் சேவையை தொடங்கலாம்னு சொல்லி கீறீங்க. நல்ல ஐடியா. அவங்க புரிஞ்சுக்கணும்.ஃஃ

  அதன் காரணம் திடீரென அவ்விணையத்தளம் துவங்கி பதிவர்களினது ஆதரவை பெறலாமெனிலும் பணம் செலுத்த தயாராகவுள்ள விளம்பரதாரர்களையும் அவர்களின் நம்பிக்கையையும் பெற நிறைய நாளாகும் ( குறைந்தது 1 வருடம் ) இத்தோடு இத்தளத்தை சரியான முறையில் சந்தைப்படுத்த வேண்டும். இதைப்பார்த்து போட்டிக்கு வரும் வேறு தளங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

  இதற்காகத்தான் நாமே இவ்வாறு செய்யாமல் ஏற்னவே நச்தையில் நன்மதிப்பைப்பெற்றுள்ள நிறுவனங்களை கேட்டேன். அவர்களிற்கு ஒரு சிறு லைன் விளம்பரம் அவர்கள் வெப்பிலோ பேப்பரிலோ போட்டால் போதும். ( விளம்பரதாரர்களை சென்றடைய பேப்பர்தான் இப்போதைக்கு சிறந்த ஊடகம் )

  இணைய இணைப்பு சிக்கலால் பின்னர் சந்திக்கிறேன்.

 13. இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எல்லா வலைப்பதிவர்களுக்கும் ஆசை தான் ஆனால் நம்பகமான தளங்கள் எதுவும் தமிழில் இல்லையே……

 14. Subash said

  வாங்க முனைவர்.இரா.குணசீலன்
  எப்படியான தளங்கள் வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் ?
  மாதாமாதம் இவ்வளவௌ விளம்பரங்கள் வரும் ஆங்கிலத்தளங்களைப்போலவா?
  நிச்சயமாக அதில் அணுவளவேனும் பிரயோஜனமில்லை.

  இங்கு நான் சொல்ல விரும்புவது இணையம் மற்றும் இணையத்தளம் போன்றவற்றைக்கொண்டு நமது அறிவினாலும் முயற்சியினாலும் செய்யக்கூடிய சில உபரித்தெழில்களைத்தான். சின்ன வேலையோ பெரிய வேலையோ. கண்டிப்பாக நிறைய உழைக்க வேண்டும். சும்மா இருந்து 1 சதம் கூட ஈட்டமுடியாதென்பது அனுபவம். அப்படியாக free time ல் செய்யக்கூடிய உபரித்அதாழில்களைப்பற்றி கொஞ்சம் சொல்லிவர நினைத்தேன். அவ்வளவுதான்.

  அப்படியான தளங்களில்லையென நினைத்து யாராவது அப்படியான தளங்களை ஒருவாக்குவார்களென பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். இதில் வரும் சாலஞ்களை முந்தய பின்னூட்டத்தில் சொல்லிவிட்டேன். அதைடியல்லாம் பார்த்து முடியுமென தன்னம்பிக்கையிருப்பின் அதற்கான முதல் றோட்டை ஏன் நீங்களோ போடக்கூடாது????

  எனது நாட்டில் இவ்வாறு செய்யமுடியவில்லையே எனவும் அப்படி செய்யக்கூடிய நாட்டில் நான் இல்லையெனவும் நிறைய துக்கப்பட்டிருக்கிறேன். நீங்களாவது பண்ணுங்க. துவங்குமட்டும்தான் எல்லாம் பெரிய பருப்பு. ஆரம்பித்துவிட்டோமானால் எல்லாம் ஜிஜிபிதான்

 15. தமிழன் ஒவ்வொருவரும் பயன் பட வேண்டியது. உண்மையில் இதை linux பதிவுகளை விட இந்த பதிவுகளை ஆதரிக்கிறேன்.

  நான் அட்சென்ஸ் மூலம் ஓரளவு ஈட்டுகிறேன் . என் வலை ஆங்கிலம் சம்பந்தப்பட்டதே.

  என்னை பொறுத்தவரை adsense இல் முடியாதது இல்லை. கொஞ்சம் slow , ஆனால் பலன் கிடைக்கும்.

 16. Joe said

  நல்ல பதிவு சுபாஷ்.

 17. naren said

  Hai, give me answer to my question.

 18. Subash said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் Graphics and Designers Blog

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் Joe

 19. Subash said

  @naren

  http://www.google.lk/search?q=.co.in+domain+registration&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

  ————————————————————————————————-
  http://www.innter.net/en/domain/domains/i/co_in_domain.php

  http://www.netlynx.com/?gclid=COPKp7PZk5oCFQEMewodPzq4Nw

  http://www.domainsearchindia.com/

  http://www.marcaria.com/India/Domains/domain-registration-co-in-India.htm

  தெரியாமத்தான் கேக்கிறேன். இத சேர்ச்ச பண்ண கூட சோம்பலா கண்ணா?
  இங்கருந்து நான் சேர்ச் பண்ணி குடுக்கவேண்டியிருக்கு. அங்கிருந்து இதகூட பண்ணமுடியாம வேற என்னதான் பண்றதா உத்தேசம்??? கோச்சுக்காதீங்கப்பு

 20. சுபாஷ்…
  நீங்களும் கொழும்பு தானா???
  🙂

  என்னுடைய வலைத்தளத்துக்கு வருகை தந்தது அறிந்தேன்…
  நன்றி.

  இனி உங்களுடைய வலைத்தளத்துக்கும் அடிக்கடி வருகை தருவேன்…
  🙂


  வேத்தியன்.

 21. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் எதிர்கால வருகைக்கும் நன்றிகள் வேத்தியன்
  🙂

 22. உபயோகமான பதிவு சுபாஷ்.வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள்.

 23. Subash said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அடலேறு

 24. […] ஐடீ மாணவர்கள், சுயதொழில் ஆர்வலருக்குஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோ…ஐடியா டாக்டர்79 லெப்பேர்ட் […]

 25. sutha said

  வணக்கம், என்பெயர் திருமதி ராஜ் சுதா

  நான் பகரினில் (Bahrain) இருக்கிறேன் வேலை இல்லை வீட்டில்தான் இருக்கிறேன் எனக்கு word, excel, page maker, photo sop,coral drow என்பன தெரியும். முன்பு நமது ஊரில் வேலை பார்த்துள்ளேன். photo sopல் alpamசெய்வேன்,typeingகும் நன்றாக தெரியும் இங்கு visa, compani ruls போன்ற விடயங்களால் நான் வேலைக்குப் போக முடியாமல் உள்ளது. எனக்கு எந்த நேரதிலும் inter net பார்க்கும் வசதி உண்டு. inter netல் உங்கள் இணயத்தளத்தினை பார்த்தேன் நன்றாக உள்ளது. நானும் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க ஏதாவது வழி சொல்லுங்களேன். எனது e-mail rajahsutha@yahoo.com நன்றி.

 26. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் sutha

  photoshop தெரிந்தாலே போதுமே!!!
  templates களை செய்து விற்றுவிடலாமே!!!! – இது நான் இன்னமும் செய்துகொண்டருக்கும் விடயம்.
  சில உதவித்தளங்களை பார்த்து அவற்றின்மூலம் உங்களின் திறமையை இன்னும் நுட்பமாக வளர்த்துக்கொண்டு அவ் டெம்பலேட்டுகளை விற்றுவிடலாம்.
  Themeforest.com
  Buy Stock design.com
  Graphicriver.com
  போன்றவற்றில் நிறைய பலன் கிடைக்கும். பயப்படாமல் விற்கலாம். நானும் இங்கேதான் கடையை நடத்துகிறேன். முயற்சியோடு நம்பிக்கையமிருப்பின் அசைக்கமுடியாது.

  கொஞ்சம் css கற்றால் PSD to css( tableless design) or PSD to xHTML முலம் மிக மிக இலகுவாக மாற்ற போட்டேமாசாப்பிலேயே உள்ள வசதியை பாவித்து மாற்றினால் இன்னும் அதிக விலைக்கு விற்கலாம்.
  வாழ்த்துக்கள்.

 27. udayaham said

  vanakkam ithu innudaiya kanni pathivu. puthithaaga web moolam sambathikka thudippavargaLukku konjam vilakkamaaga kurippaga konjam vilakkamaga padi padiyaaga sonnal nalam yarum munvaruvaargala?

 28. சுபாஷ் said

  @udayaham
  please unga comments ealathajum Tblog.Hisubash.com ல் பதிவீர்களா???
  தயவுசெய்து தமிழில் பதியவும். வாசிக்க சிரமமாக இருக்கிறது நண்பரே.
  நன்றிகள்

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: