சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

TVயில் பாடி வெற்றிபெற சில மொக்கை யோசனைகள்

Posted by சுபாஷ் மேல் மே 13, 2009

1. உங்கள் குரல் வளத்தை நன்றாக எடை போட்டு எவ்வாறான பாடல்கள் உங்களுக்கு செட் ஆகுமென சரியாக மதிப்பிட்டு வைத்திருங்கள்.

2. ARRahman , இளையராஜா போன்றவர்களின் பாடல்களை தவிர்த்தல் நலம். எனெனில் இவர்கள் அழகிய சிறு அசைவுகளை கொண்டுவர அதிகமாக கறுப்புக்கட்டையை பயன்படுத்தி மெட்டமைத்து இசைக்கோர்ப்பு செய்பவர்கள். அதை அப்படியே மேடையில் இசையமைக்கும் குளுவினரால் கொண்டுவருவது கடினம். மற்றும் இசைக்கோர்ப்பில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வடிவமைத்திருப்பார்கள். இலகுவில் அந்த இசையை மேடையில் வாசிப்பது கடினமே. இதனால் நீங்க எவ்வளவு நல்லா பாடினாலும் உங்க திறமை சரியாக வெளிவராமல் போக வாய்ப்புண்டு.

ஹரீஷ், விஜய் ஆன்டனி, தேவா, வித்யாசாகர் போன்றவர்களின் பாடல்களை மேடையில் இலகுவாக வாசிக்கலாம். பெரிய குரல் அசைவுகளும் இருக்காது.

யுவன், ஜோஷ்வா, பிரகாஷ் இதில் ரெண்டும்கெட்டான். சிலபாடல்களை தெரிவுசெய்து பாடினீர்களெனில் ஓகே.

3. நடுவராக வருபவரின் பாடல்களை தவிர்த்தல் நலம். முதல் காரணம் நீங்க அவர பார்த்து சிரித்து வணக்கம் சொல்றது அவருக்கு ஐஸ் வைக்கத்தான்னு  அவங்க நினைத்தால் நீங்க எப்படி நல்லா பாடினாலும் எடுபடாது.

அவங்க பாட்டை அவங்கதான் அக்குவேறு ஆணிவேறாக தெரிந்துவைத்திருப்பார்கள். நீங்க எப்படி பாடினாலும் சின்ன சறுக்கலை கண்டாலும் அவங்க பாட்டை கடிச்சு குதர்ற மாதிரி அவங்களுக்கு பட்டால்…. அவ்வளவுதான். ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு )

4.  பாடும்போது சின்ன சின்ன டக்குனு இருக்கறமாதிரி சின்ன மேனரிசங்களை பண்ணணும். அதுக்காக காக்கா வலிப்பு வந்தமாதிரி ஒரே பண்ணக்கூடாது. சில தேவையான நேரத்தில் மட்டுமே. அடுத்து அட்டேன்சனில் நின்னு பாடக்கூடாது. வெகு வெகு இயல்பாக நின்னு அல்லது இருந்து பாடுங்க. பாக்கறவங்களுக்கு நீங்கதான் பாட்டுக்கு சொந்தக்காரர் மாதிரி அனுபவிச்சு பாடரதா தெரியணும். முடிஞ்சா கொஞ்சம் அப்பாவி ஃபீலிங்கை முகத்தில் கொண்டுவர ட்ரை பண்ணுங்க.

ஆண் போட்டியாளரெனில் கண்ணை மூடி பாடிக்கொண்டு டக்கென கழுத்தோடு தலையை சைட்லயோ முன்னாலயோ இழுத்து பாடலுக்குள் நீங்க இருக்கறதா ஒரு ஃபீலிங்கை ஏற்படுத்தலாம். பெண் போட்டியாளரெனில் கண்ண மூடிக்கொண்டு மேலே சொன்ன ஐடியாவோடு சற்று இடுப்பசைத்து, கையை நன்றாக பொத்திப்பிடித்து சற்று மேலே, கீழே,  சைட்ல என சின்ன சின்ன முவ்மென்ட்ஸ் பண்ணலாம். கண்ண திறந்து பாடறீங்கனா, நாடியோடு தலையை கீழே சரித்து பாடும் அதே நொடியில் கண்களை மேலே நன்றாக உயர்த்தி லெப்ஃட் றைட்டாக அசைக்கலாம். நீங்க கண்மை பாவிப்பவராயின் இது நல்லா வேர்க்கவுட்டாகும். ஆண்கள் கண்ண திறந்து பாடுவதை தவிர்க்கவும். ( அப்பதா மத்தவங்க சிரிக்கறது தெரியாது ) . இப்படி பாடலுக்குள் நீங்க இருக்கறதா ஒரு ஃபீலிங்கை ஏற்படுத்தணும்.

மேடைக்கு அருகில் வந்ததும் ஒருதரம் மேடையை குனிஞ்சு தொட்டு கும்பிடுவதுபோல ஒரு வேலை பண்ணணும். இதெல்லாம் டக்குனு பார்வையாளரையும் நடுவரையும் ஈர்க்கும்.

5. நிகழ்ச்சி நடத்துபவரோடு முடிந்தளவு தன்னடக்கத்தோடு பேசுங்கள். சில பெரிய இசை வித்துவான்களைப்பற்றி தெரிந்து கொண்டு அவ்வப்போடு டைமிங்ல அவங்களப்பத்தி எடுத்து விடணும். அதுக்காக பெரிய விடயம் தெரிந்தவர்களது மேடையில் நின்று அப்படி சொல்லக்கூடாது. அடடா இவனுக்கு இவரப்பத்தி தெரிஞ்சிருக்கேனு பரவசப்பட்டு இன்னும் டீப்பா அவங்களப்பத்தி கேட்டாங்கனா தெலைந்தீர்கள். பார்க்க கொளுக் மொளுக்கென வலிப்பு வந்தாமாதிரி எப்பவும் ஆக்சன் சொல்லிட்டே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களாக பார்த்து இருந்தால் மட்டும் இந்த டெக்னிக்கை எடுத்து விடவும்.

6. எந்தக்கேள்விக்கும் டக்கு டக்குனு பதில் சொல்லக்கூடாது. றஃமானோட பேட்டிகளை பாத்திருக்கீங்களா? ஹரீசின் பேட்டிகளை பார்த்திருக்கீங்களா ? எந்தக் கேள்விக்கும் கொஞ்சம் யோச்சிட்டுத்தான் பதில் சொல்லுவாங்க. எதையும் டப்பனு கவுத்தமா சொன்னமானு இல்லாம ஆறுதலா யோசிச்சு என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து தெளிவாக பேசுவார்கள். பார்க்கவே மேதைகள் மாதிரி இருக்கும். இதேமாதிரித்தான் நீங்களும் ரியாக்சன் குடுக்கணும்.  இவ்வளவு ஏன் நம்ம டாக்டர் இளையதளபதி கூட பேட்டில கேள்வி கேட்டா ஆட்காட்டி விரலால மூக்க ஒரு தரம் பிரஸ் பண்ணி தலையை கெளிச்சு அண்ணாந்து பார்த்துத்தான் பதில் சொல்லவாங்க. அவரே அப்படி ரியாக்சன் குடுக்கராருனா நீங்க எப்படிலாம் குடுக்கணும்???

அண்மையில் சன் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி அங்கத்தை மட்டும் பார்க்க நேர்ந்தது.  அதில் பங்குபற்றிய அனைவரும் அருமையாக பாடியிருந்தார்கள். விஜய் ஆன்டனி அவர்கள்தான் நடுவர். மற்ற 2 பேரும் யாரென தெரியவில்லை. சரி, அதுல அசத்தப்போவது யார் ல வார ஓருத்தர் அடிக்கடி வந்து அட்டேன்சனில் உலகமெல்லாமிருக்கும் தமிழர்களென ஆரம்பிப்பார். அதுதா மிகவும் பிடித்திருந்தது. சிரிப்பு தாங்க முடியாமலிருந்தது.

15 பதில்கள் to “TVயில் பாடி வெற்றிபெற சில மொக்கை யோசனைகள்”

 1. யோசனைகள் எல்லாம் அருமையா இருக்கு நண்பா…

  எப்பிடி இப்பிடில்லாம்??
  ரூம் போட்டு ஒக்காந்து யோசிப்பீங்களோ???
  🙂

 2. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வேத்தியன்

  அட!!!!! எப்படியெல்லாம் யோசிக்கலாமென ஒரு பதிவு போடலாமென ஐடியா வந்துருக்கீ!!!!!
  ஹிஹி

 3. அட்டகாசமுங்க.
  கலக்கிட்டீங்க‌

 4. இப்போ போறேன்…

  அப்புறமா வரேன்…

  ( ஆணி அதிகம்)

 5. SnapJudge said

  🙂 😀

 6. Hi. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க சுபாஷ். ஆகா..

  பார்க்கவே மேதைகள் மாதிரி இருக்கும். இதேமாதிரித்தான் நீங்களும் ரியாக்சன் குடுக்கணும். — நானா.. ஹூம்ம்

  OOps!
  சத்தப்போவது யார் ல வார ஓருத்தர் அடிக்கடி வந்து அட்டேன்சனில் உலகமெல்லாமிருக்கும் தமிழர்களென ஆரம்பிப்பார். அதுதா மிகவும் பிடித்திருந்தது. சிரிப்பு தாங்க முடியாமலிருந்தது.

  ஆஹா
  காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

 7. kalai said

  பதிவு நன்று!
  பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

  நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
  உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

 8. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் கிஷோர்

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் உருப்புடாதது_அணிமா

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் SnapJudge

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் tamilnenjam

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் kalai

 9. anubaviraja said

  இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானும் பாடிருபேநோன்னோ :))))

 10. அப்படியே தயவுசெய்து டிவியில் லூகாஸ் வெற்றி பெறுவது எப்படி?, பிரிட்டானியா வெற்றி பெறுவது எப்படி? அம்பத்துர் எஸ்டேட் வெற்றி பெறுவது எப்படி? டன்லப் வெற்றி பெறுவது எப்படி? அம்பத்துர் வெற்றி பெறுவது எப்படி?, ஆவடிவெற்றி பெறுவது எப்படி? ன்னெல்லாம் எழுதுங்களேன்!

 11. hi.. i am expecting more posts like this. waiting.. still waiting. 1/2 மணி நேரமா வெயிட் பண்றேன்..

 12. உங்க ரேசியோ நல்லா இருக்கு 48 பதிவு போட்டிருக்கீங்க தமிழிஷில்.. 43 பதிவுகள் பப்ளிஷ் ஆகியிருக்கு.

  கலக்கல் பதிவுகளாக இட்டால் இப்படித்தான்.

  நான் பல நேரங்களில்.. மொக்கைகளைப் போட்டு – ஆனால் அந்த மொக்கைகளும் பல நேரங்களில் பப்ளிஷ் ஆகியிருக்கின்றன.

  ஆதலால் விதவிதமான மொக்கைகளை அள்ளித் தெளித்திருக்கிறேன்

 13. ஒரு சிறு விண்ணப்பம். ஆங்கிலப்பதிவுகளில், ஆட்சென்ஸ் உள்ள பதிவுகளில் தமிழில் பின்னூட்டங்கள் நிறைய இடம் பெற்றால் – உடனே PSA எனப்படும் Public Service Ads வருகிறதே. இதை சரிசெய்ய ஏதேனும் உபாயம் கூறவும்.

  நேற்று ஒரு பதிவு Girl’s Day out இப்படி தலைப்பு வைத்தேன். ஆனால் உடனே PSA வந்துவிட்டது. இது எதுவும் porno based keyword ஆ?

  உடனே Why Men are from mars, women are from venus ? என மாற்றி வைத்தேன் – ஆனால் வேளைக்கு ஆகவில்லை.

  அப்படியே விட்டுட்டேன். அந்தப்பதிவும் பப்ளிஷ் ஆச்சு.. ஆனால் PSA மட்டும் போகவேயில்லை.

  ஏதேனும் தடுப்பு வழிகள் இருந்தால் கூறவும் சுபாஷ் அவர்களே.

 14. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் anubaviraja

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நாமக்கல் சிபி

 15. சுபாஷ் said

  வாங்க தமிழ் சார்.
  ஃஃஆதலால் விதவிதமான மொக்கைகளை அள்ளித் தெளித்திருக்கிறேன்ஃஃ
  என்ன இப்படி சொல்லிட்டீங்க. உங்க பதிவுகளை சின்சியரா படிக்கற ஆள் நான். மொக்கைனு சொன்னா எப்படி?

  ஃஃஆட்சென்ஸ் உள்ள பதிவுகளில் தமிழில் பின்னூட்டங்கள் நிறைய இடம் பெற்றால் – உடனே PSA எனப்படும் Public Service Ads வருகிறதேஃஃ

  பிளாகர் டெம்பிளேட்டானது ஒவ்வரு பின்னுட்டத்தையும் tag ஆக எடுத்து சேர்ச் எஞ்சினுக்கோ அல்லது அனலைடிசுக்கோ அனுப்புகிறது. ஆனால் தமிழ் அதிகமானதால் public service ads வருமென எதிர்பார்க்கவில்லை. இது தொடர்ந்து நடைபெறுகிறதா? இல்லை இந“தப்பதிவிற்கு மட்டுமா?

  அந்தத்தலைப்பு porno வகையிலில்லையே. அதற்கும் ஏன் அப்படி வந்ததென பரியவில்லை. 2 – 3 தரம் refresh பண்ணி பார்த்தீங்களா? ஏனெனில் தனி ஆங்கிலப்பதிவுகளிலும் எனக்கு அப்படி நடந்திருக்கிறது.

  எனதறிவிற்கு புலப்படுவது, சரியான adsense channel கிடைக்காததினால் public service ads வந்திருக்கலாம்.
  இதற்கு சரியான வழி பிளாகின் ஒவ்வொரு category க்கும் தனியான channel உருவாக்கி பொருத்தமான key words ஐ description ல் குடுத்துவிடுங்கள்.
  SEO பொறிமுறையில் tags ஆனது key words ஆக பெறப்படும். search engine ல் முதலிடம் பிடிக்க tags ல் உள்ள சொற்கள் கண்டிப்பாக post title ல் இடம்பெறவேண்டும். அத்துடன் post லும் அதிகமாக அச்சொற்கள் வரவேண்டும். அதுதான் வழமையாக SEO ற்காக பண்ணும் வேலைகள்.

  இந்த SEO ற்காக பயன்படுத்தும் keywords / tags இனைத்தான் adsense ஆனது எந்த ஆட்களை பிரசுரிக்கவேண்டுமென நிர்ணயிக்க பயன்படுத்துகிறது. ஆகவே அந்த keywords உங்களின் adsense channel ல் இல்லையனெ்றால் public service ads வர வாய்ப்பக்கள் அதிகம்.

  உங்களின் flash music keyboard பதிவில் adsense மிகப்பொருத்தமான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு உங்களின் blog tags ஆனது adsense channel keywords உடன் ஒத்துப்போவதே காரணம்.

  🙂

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: