சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘downgrade’

விண்டோஸ் Vista விலிருந்து XP க்கு செலவில்லாமல் டவுண்கிறேட் பண்ணுவது எப்படி?

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 28, 2008

நீங்கள் புதிதாக கணனி (மடிக்கணினி) வாங்கினால் இப்போது அதனுடன் லைசன்ஸ் பெறப்பட்ட Vista Business அல்லது Vista Ultimate தருவார்கள். ஆனால் நமக்கு விஸ்டா வேண்டாம், XP  தான் வேண்டுமென நினைத்தால் துளி செலவில்லாமல் லைசன்ஸ் வேர்சனை நிறுவிக்கொள்ளலாம்.

நிறைய கணினி பயனர்கள் இன்னும் Vista பாவிக்க மறுக்கிறார்கள். காரணம் இதற்கு வந்த எதிர்மறையான கருத்துக்களே. பாவிக்க கடினம், கூடுதலான வன்பொருள் தேவை, நிலையான தன்மையின்மை, ஒத்திசைவின்மை மற்றும் விலை போன்ற காரணங்களை சர்வ சாதாரணமாக பல வலைத்தளங்கள் குறிப்பிட்டிருந்தன.

முன்னர் HP, Dell மற்றும் Lenovo போன்ற மடிக்கணினிகளில் Windows XP யை pre installed ஆக தந்தார்கள். இப்போது Windows Vista தருகிறார்கள். ஆனாலும் மேலே சொன்ன காரணங்களால் பயனாளர்கள் இனனும் XP தான் வேண்டுமென நினைக்கிறார்கள். Microsoft கூட இந்த நிலமையை உணர்ந்து Vista Business அல்லது Vista Ultimate உரிமம் வைத்திருப்பவர்கள் துளி செலவில்லாமல் தாராளமாக XP Professional ஐ நிறுவிக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது

சரி இவர்களுக்குதான் இந்தப்பதிவு!!! எப்படி நாம் விண்டோஸ் விஸ்டாவிலிருந்து எக்ஸ்பீக்கு உரிமத்துடன் மாறுவதென பார்க்கலாம்.

இதற்குமுன்னர் Microsoft Downgrade பற்றி என்ன சொல்லியிருக்கிறார்களென பாருங்கள்.

Desktop PC பாவனையாளர்கள் தங்களின் உரிமம் பெறப்பட்ட Vista Business அல்லது Vista Ultimate ஐ இதனது பயனர் வரைமுறையை மீறாதவண்ணம் டவுண்கிறேட் பண்ணலாம். ஆனால் Vista Business அல்லது Vista Ultimate உரிமம் வைத்திருப்பவர்கள் மாத்திரமே Windows XP Pro வுக்கு மாறலாம். இந்த டவுண்கிறேட் உரிமம் Windows XP Pro 32 bit, 64 bit மற்றும் XP Tablet PC Edition போன்றவற்றிற்கு செல்லுபடியாகும். தவிர Windows Vista Home Basic மற்றும் Windows Vista Home Premium உரிமம் வைத்திருப்பவர்க்கு இந்த சலுகை கிடையாது.

சரி, இனி இதனை எப்படி செயல்படுத்துவதென பார்க்கலாம்.

 1. தற்போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் விண்டோசுக்கான Product Key யை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக நிறைய மென்பொருட்கள் இணையத்தில் குவிந்திருக்கின்றன..
 2. இப்போது உங்களிடமுள்ள பைரேட் அல்லாத XP Setup CD/ DVD மூலமாக கணினியில் நிறுவவும். முன்னர் பதிவு செய்யப்பட்ட அல்லது பழைய கணினிகளுடன் வரும் CD கொண்டு நிறுவ வேண்டாம். முடிந்தால் Microsoft இலிருந்து தரவிறக்கி நிறுவுவதே நல்லது.
 3. நிறுவலின் பின்னர் புகுபதிகை செய்யவும் ( Log on செய்யவும் )
 4. விண்டோஸ் அக்டிவேஷன் பண்ணும்படி கேட்கும்போதோ அல்லது
  go to “Start” -> “All Programs” -> “System Tools” -> “Activate Windows”
  அல்லது
  right click on “Computer” and click “Click here to activate Windows”
  என்பதன் மூலமோ Activation Window வை திறந்து
  Yes, I want to telephone a customer service representative to active Windows now
  என்பதை சொடுக்கவும்.
 5. உங்கள் பிரதேசம் மற்றும் நாடு என்பவற்றை தெரிவுசெய்தபின்னர் அருகிலிருக்கும் Microsoft Customer Care தொலைபேசி இலக்கம் உங்களுக்கு வழங்கப்படும். அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவும். அனேகமாக இது கட்டணமற்ற அழைப்பாகவே இருக்கும்.
 6. அதில் சொல்லப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி நிஜ மனித பிரதானியை அழைக்கவும் (human customer care representative 🙂 ). இது கடினமாக இருக்குமானால், நீங்கள் அழைப்பை ஏற்படுத்தியவுடன் Installation ID கேட்கும்போது எதையாவது குடுத்தால் தவறான உள்ளீடென செய்தி வரும். இரண்டு மூன்றுதடவை இப்படியே செய்தால் customer care representative தானாக வழிக்கு வருவார்.
  படத்தில் 3ம் படிமுறையில் Installation ID இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது.
 7. இனி அவரிடம் நீங்கள் டவுண்கிரேட் செய்துள்ளதை தெரிவிக்கவும். அவர்கள் நீங்கள் நிறுவிய இயங்குவளத்திற்கான product key யை கேட்கும்போது Vista விற்கான product key யை தெரிவிக்கவும். அத்துடன் XP யின் விபரங்களையும் அவர்களிடம் தெரிவியுங்கள்.
 8. validation முடிந்ததும் Confirmation ID ஒன்று தருவார்கள். இதனை 6ஆவது படிமுறையில் காட்டப்பட்ட பட சாரளத்தில் Step 4 என்பதில் பதிவு செய்துவிட்டீர்களென்றால் அத்தோடு முற்றும் போட்லாம்.

ஆக்கம்,
சுபாஷ்,
https://hisubash.wordpress.com

உங்களின் கருத்துக்களை தயவுசெய்து அறியத்தாருங்கள். மற்றும் இப்பதிவு சம்பந்தமாகவுள்ள வேறு பதிவுகளிக் சுட்டி மற்றும் வேறு கூடுதலான தகவல்களை பின்னுட்டத்தில் அறியத்தரவும். அது எமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நல்ல தொகுப்பை உருவாக்கவும் உதவியாக அமையும்.

மற்றும் சரியான தமிழ் சொற்பிரயோகங்களையும் அறியத்தந்தால் பதிவின் தரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

=================================

டிஸ்கி – (பதிவில் பின்னுட்டமாக இட்டதையே இங்கு மீண்டும் பதிகிறேன்.)

வருகைக்கும் கருத்திற்கும் அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவு கண்டிப்பாக XP க்கு மாறவேண்டுமென போடப்பட்டதல்ல.

மாற விருப்பமாயின் எப்படியென்பதுதான் பதிவின் விடயம்.

சாதாரணமான வீட்டு மற்றும் அலுவலக பாவனைக்கும் இணைய பாவனைக்கும் Home Premium தாராளமாய்ப்போதும்.
தற்போதுள்ள பல மென்பொருட்களையும் நிறுவி உபயோகிக்கலாம்.

Vista Business and Ultimate போன்றவை திறன் கூடிய மடிக்கணனிகளுடன் தான் வருகிறது. வேகமும் அதிகம். ஆக XP க்கு மாற வேண்டியதில்லை. ஆனால் Dual Core மற்றும் AMD வகை கணனிகளில்தான் விஸ்டா வேகக்குறைவாக செயல்படும். அவர்கள் மாற்றினால் பயனுள்ளதாயிருக்கும்.
அல்லது உங்கள் கணனி வேகம் குறைவாகவிருந்தாலும் XP க்கு மாறுவது பரவாயில்லை.

நீங்கள் டெவலப்மன்ட் வேலைகள் மற்றும் பெரிய விஷேட மென்பொருட்களை (MS SQL Server based application and Network) உபயோகிக்கவேண்டி வந்தால் மட்டுமே Business and Ultimate அல்லது XP பயன்படுத்தலாம். ஏனெனில் சில மென்பொருட்களை Home Version ல் நிறுவ முடியாது.
உதா- சில கணக்கீட்டு மென்பொருட்கள், MS Sql Server2005

மற்றும் XP க்கு மாறுவது உங்கள் பழைய மென்பொருட்கள் Vista க்கு ஆதரவில்லையெனில் மட்டும் பயனளிக்கும்.
மற்றும் XP யின் உதவிகளையும் மைக்ரோசாப்ட் நிறுத்தும் இவ்வேளையில் XP யில் மினக்கடுவது அவ்வளவு நல்லதல்ல. ( முக்கியமான தேவை இருந்தாலன்றி )
மற்றயது புதிய தொழில்நுட்பங்களோடும் அப்டேட்டுகளோடும் தொடர்பில் நம்மை வைத்துக்கொள்வது ஐடி யில் இருக்கும் நமக்கு முக்கியம்.

ஆக முக்கியமான தேவைகளன்றி XP க்கு downgrade பண்ண வேண்டாம். புதியதை அதன் வித்தியாசங்களோடு வரவேற்று நமக்கேற்றபடி மாற்றுவோம்.

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி

Posted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 45 Comments »