சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘2008 server’

ஏன் விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக மாற்ற வேண்டும்?

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 16, 2008

ஏன் வேலை மெனக்கட்டு விண்டோஸ் 2008 சர்வரை இன்ஸ்டால் செய்து தேவையில்லாம வேர்க்ஸ்ரேஷனாக மாற்றணும ? என் கிட்ட இருக்கிய விஸ்டாவோ XP யோ நல்லாத்தானே வேலை பண்ணிடிருக்கு ???

இப்படி நீங்க மனசுக்குள்ள கேக்குறது டெலிபதில எனக்கும் புரோட்காஸ்ட் ஆகுது. ஹாஹா.

விஷயம் என்ன என்று பார்த்தா,
விண்டோஸ் 2008 சர்வர் ஆனது விஸ்டாவின் சர்வீஸ் பக் 1 உடன் உள்ள அத்தனை விடயங்களையும் உள்ளடக்கியதுடன் சில மேலதிக வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனா இதெல்லாதையும் விட முக்கியமா செம வேகத்துடனும் நம்பகத்தன்மையுடனும் செயல்படும.

Dell XPS M1710 test bed (Core 2 Duo T7200 at 2GHz, 2GB RAM, 80GB 7200RPM disk) இந்த வகை கனிணியில் பரீட்சித்துப் பார்த்தபோது சுமார் 11-17%  2008 வேர்க்ஸ்ரேஷன் சிறப்பாக செயல்படுவதை அவதானிக்கலாம்.

முடிவுகள்

விஸ்டாவை விட 10 வீதம் வேகமாகவும்  விஸ்டா இயங்குநேரத்தில் தேவைப்படும் ரேம் அளவில் தோராயமாக 2/3 ரேமை மட்டுமே பயன்படுத்துகிறது.

மேலும் பல செய்முறை விளக்கங்களுடன் இதை எப்படி நிறுவுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்,

இனியென்ன install Win 2k8 Server as a workstation.

Posted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | 11 Comments »