சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

இணையத்தில் பணம் 2 – ஐடீ மாணவர்கள், சுயதொழில் ஆர்வலருக்கு

Posted by சுபாஷ் மேல் மே 2, 2009

வேறு விடயங்கள் பற்றி பேச முன்னர், ஆரம்பித்த விடயத்தை முழுவதுமாக முடித்துவிடலாம்.

அந்தப்பதிவில் விளம்பரதாரர், விளம்பரம் வெளியிடுவோர், மற்றும் இருவரையும் சேர்த்துவைக்கும் இணையத்தளத்தினர் மற்றும் இவர்கள் மூவரையும் இணைத்துவிடும் இடைத்தரகர்களைப்பற்றி பார்த்தோம்.

இந்த வியாபாரத்தில் ஐடீ மாணவர்களையும் பார்ட்டைமாக வெப் வடிவமைப்பு வேலை செய்பவர்களையும் சுயதொழில் ஆர்வமுடையோருக்கும் இதன் மூலம் அல்லது அதுபோன்ற வேலைவாய்ப்பினால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் விளம்பரங்களை இடுவதெனில் banner ad தான் கண்ணை சட்டென ஈர்க்கவல்லது.

இதற்கு முன்னர் தளத்தில் விளம்பரங்களை எங்கு வைக்கவேண்டுமென பார்க்கலாம். பிளாக்கைப்பொறுத்தவரையில் இதற்குச்சிறந்தது 3 column template. கனிணி திரையின் இடது பக்கத்தில் முக்கிய விடயங்கள் அல்லது தள சம்பந்தமான விடயப்பொருள் இருக்கவேண்டும்.  இது template ன் 60 % இனை எடுத்துக்கொள்ளும். அடுத்து சிறிய நடுப்பக்க column. இது 20% மான template இனை எடுத்துவிடும். அடுத்து இறுதி column. இது scroll bar பக்கமாக 20% மான template இனை எடுத்துவிடும். இதுதான் விளம்பரங்களை வெளியிட சிறந்த வித வடிவமைப்பென்பது வல்லுனர்களின் கருத்து. இதில் கடைசி 2 column க்கு மேலே சிறிய இடத்தில் 125×125 என அழைக்கப்படும் பெட்டி வடிவ விளம்பரம் இடும் பகுதி வேண்டும். இம்முறை இப்போது மிக பிரபலமாகிவருகிறது. இது பட்டென கண்ணைக்கவரும் விதத்திவ் இருப்பதால் இந்த இடத்தில் விளம்பரம் வைக்க நல்ல கிராக்கியுண்டு ( ஆங்கிலத்தளங்களை மூலமாகக்கொண்டு சொல்கிறேன் ). இரண்டீரண்டாகவோ அல்லது மூன்று மூன்றாகவோ, மூன்று அல்லது 4 நிரைகளாக இவ்விளம்பரங்கள் வந்தால் தளம் பார்க்க அழகாகவும் இருக்கும், வாசகர்களின் பார்வையும் கண்டிப்பாக படும். இதில் ஈர்க்கப்படுபவர்கள் விளம்பரம் மீது சொடுக்கலாம். ஆகவே இவ்விளம்பரங்களுக்கு நிலவும் கிராக்கியை மனதில் வைத்து விளம்பரதாரர்களை இப்படியாகவுள்ள வடிவத்தில் விளம்பரங்களை தரும்படி கேட்பதுதான் நல்லது.

கீழேயுள்ள படமானது இவ்வகையான டெம்ப்லட்டுக்கள் எவ்வாறிருக்குமெனவும் 125பிக்சல் ஆட் இடம் எங்கேயுள்ளதெனவும் விளக்குகிறது.

ectem

மேலேயுள்ள படத்திலிருப்பது 3×2 ரக 125பிக்சல் ad space. அதாவது 3 column, 2 row. மொத்தம் 6.

334

மேலேயுள்ள படத்திலிருப்பது 2×2 ரக 125பிக்சல் ad space. மொத்தம் 4.

சரி, இப்படியான 125×125 வகை பெட்டி வடிவ Image ad களை கண்ணைக்கவரும் விதமாக வடிவமைக்க வேண்டாமா??? பார்த்தவுடன் வாசகர்களை அதன் மீது ஒரு கிளிக்கு கிளிக்கிப்பார்க்கும்படி வைக்கும் attractive வடிவமைப்பு வேண்டாமா???? இங்கேதான் Graphic Designers ன் தேவை வருகிறது. Web 2.0 எனப்படும் அடுத்த தலைமுறை வடிவமைப்புக்கள் கோலோச்சி வரும் இக்காலத்தில் அம்மாதிரியான அழகான வடிவங்களையும் படங்களையும் உருவாக்கி தரும் Graphic Designers தேவை. தொழில் நிலை வடிவமைப்பாளர்களை விட கல்லூரி மாணவர்களோ அல்லது part time வேலையாக வடிவமைப்பு பணி செய்ய ஆர்வமுள்ளவர்களோ இவ்வேலைக்கு சிறந்தவர்கள். ஏனெனில் இதற்கு நிறைய பணம் கிடைப்பதில்லை. மிஞ்சிப்போனால் ஒரு விளம்பரத்தை வடிவமைக்க அதிகபட்சம் 30 நிமிடம் கூட ஆகாது. ஆனாலும் தொழில்நிலை வடிவமைப்பாளர் இதற்கு பெறும் தொகையானது விளம்பரதாரருக்கு கட்டுபடியாகாது. அத்துடன் இம்முறை விளம்பரதாரருக்குப் புதிதென்பதால் அவர்கள் கண்டிப்பாக நிறைய பணம் செலவளிக்க மாட்டார்கள். பின்னர்தான் விளம்பர செலவு ஒரு முதலீடென புரிந்துகொள்பர். அந்நேரத்தில் அதிகமாக கட்டணம் பெறலாம். ஆக இவ்விடயத்திற்கு பார்ட்டைம் வடிவமைப்பு வேலை செய்பவருக்கும் கல்லூரி மாணவருக்கும் சிறந்ததோரு உபரித்தொழிலாக இருக்கும். நேரமும் பிரயோஜனமாக கழியும்.

விளம்பரங்களை பெற்றுக்கொடுத்தவுடன் விளம்பரத்தளமானது அவர்களிற்கு தேவையான banner இனை வடிவமைக்க அத்தளத்தில் பதிவு செய்துள்ள மேலே கூறிய பார்ட்டைம் வடிவமைப்பாளர்களுடன் விளம்பரதாரர்களை தொடர்புபடுத்திவிடவேண்டும். அல்லது அப்படி செய்வது பிடிக்கவில்லையெனில் அவர்களின் தேவைக்கேற்ப எப்படியான வடிவமைப்பு வேண்டுமென விளக்கங்களை கலந்தாலோசித்துவிட்டு பின்னர் இவற்றை வடிவமைப்பாளவிடம் கூறலாம். இது விளம்பரதாரருடன் மற்றவரது தொடர்புகள் இடையூறு விளைவிக்காமல் பார்த்துக்கொள்ளும். செய்யும் வேலையைப்பொறுத்தோ அல்லது வேறு விதமான அளவீடுகளை வைத்தோ அவர்களின் வேலைக்கெற்ப விளம்பரத்தளமானது விளம்பரதாரரிடமிருந்து  இவர்களிற்கு கட்டணம் பெற்றுக்கொடுக்க வேண்டும். நேரடியாக வடிவமைப்பாளர்கள் விளம்பரதாரர்களிடம் கட்டணம் வசூலிப்பது நல்லதல்ல. விளம்பரதாரரை நம்பி ஆரம்பிக்கும் இவ்விடயத்தில் அவர்களை யோசிக்கவோ பயப்படவோ வைக்கக்கூடாது. ஆகவே பணம் சம்பந்தமான விடயங்கள் யாவும் ஒரே இடத்தில் இருத்தல் நலம். இதனால் விளம்பரத்தள அமைப்பாளர்களே இதை பொறுப்பேற்க வேண்டும். அதனால் விளம்பரதாரர்கள் கேட்கும் தொகையையும் நம்பிக்கையோடு தருவார்கள். அல்லாதுவிடின் பேரம்பேசி நமது வேலையின் மதிப்பையே குறைத்துவிடுவார்கள்.

அதிகமான வியாபாரிகளிடம் தனியான வெப் தளமில்லை. அதனால் banner இருந்தாலும் லிங்க தர முடியாது. அதற்கு banner லியே விளம்பரதாரரை தொடர்பு கொள்ளவென தெலைபேசி எண் தரலாம். அதைவிட அந்த banner இனை கிளிக் பண்ணியதும் ஒரு இணையத்தளத்திற்கு செல்வதுபோல வைத்தால் இன்னும் சிறந்தது. பெரிதாக ஒன்றும் வேண்டாம். வெறும் ஒரு பக்கத்தில் மாத்திரம் லிங்குகளைக்கொண்டு (in line links ) அருமையாக வடிவமைத்துவிடலாம். அல்லது ஒரு பதிவையே உருவாக்கிவிட்டு front Page Banner இனை மட்டும் வடிவமைத்து போட்டுவிடலாம்.  தமிழில் அதிக பதிவுகளுருவானதாகவுமிருக்கும். விரும்பினால் அப்பதிவினில் Add on களை இணைத்து இணையத்தில் விற்பதுபோலவோ அல்லது முன்பதிவு செய்துகொள்வதுபோலவோ செய்து தரலாம். இதற்கு அதிகமாக 4 மணித்தியாலங்களே எடுக்கும் ( Template customization + Banner design + Add on setups + SEO ).

அதிகமான வியாபாரிகளிடம் தனியான வெப் தளமில்லை. இதனால்தான் இங்கு கிளிக்குகளிற்கு பணம் செலுத்தும் முறை பெரிதான உடுபடாமல் போகும். கிளிக்குகளிற்கு பணம் அல்லது இம்ப்ரஷனுக்கு பணம் என்பது இணையவணிகத்தில் நீண்டகால திட்டத்துடனிருக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமு நன்மை பயக்கும். இதனால்தான் மாதாந்த கட்டணமே சிறந்தது என கூறினேன்

இந்த வேலைகளிற்கு Part Time ஆக வெப் வடிவமைப்பு செய்பவர்களின் தேவை அதிகம். குறைந்த விலையில் நல்ல தரத்தில் பல வசதிகள் கொண்ட ஒரு தளத்தை உருவாக்கிவிடலாம். முடிந்தளவிற்கு ஆரம்பத்தில் விளம்பரதாரரை அதிகமாக கவரும்வரையில் முடிந்தளவிற்கு செலவுகளை குறைக்க முயலவேண்டும். ஆனால் தரமாகவும் இருக்கவேண்டும். இதற்கு part time ஆக freelance தள வடிவமைப்பாளர்கள் நல்ல தேர்வு.அவர்களிற்கும் வருமானமும் பெருகும். Profile உம் அதிகமாகும்.

அடுத்து இம்மாதிரி வடிவமைத்த தளங்களையோ பிளாக்கையோ இலவச டொமைன் பெயரில் வைப்பது நல்லதல்ல. ஆகவே இதற்கு ஒரு தனி டொமைன் பேரை பதிவு செய்துவிட்டால் இன்னும் சிறந்தது.  இந்த டொமைனை பதிவின் முகவரிக்கு forward பண்ணிவிட்டால் போதும். தனித்தளமாக விளம்பரதாரரின் தளம் காட்சியளிக்கும். இதற்கு இப்போது USD 9 தான் ஆகிறது.

அடுத்து பிளாகில் இணைய வணிக பயன்பாடுகளையும் சேர்த்துக்கொள்வதாயின் கண்டிப்பாக தனியான சொந்த host இருக்க வேண்டும். இதற்கு இணையத்தில் சாதாரணமாக வருடத்திற்கு USD$ 50 செலவாகும். இது சிலவேளைகளில் அதிகமாக தோன்றலாம். இதற்கும் வளியிருக்கிறது. அனேக வெப்தள வடிவமைப்பாளர்கள் மற்றும் freelancers தங்களுக்கென சொந்த reseller host account வைத்திருப்பார்கள். ( அடியேனும்தான் ). அதன் மூலமாக வெறும் 100MB அளவேயுள்ள பல shared host accounts உருவாக்கலாம். அதற்கு அவர்கள் வருடம் USD $10 வசூலித்தாலே போதும் ( இலாபம் ) . விளம்பரத்தளமானது இவர்களை தொடர்புகொண்டு அச்சேவையினை விளம்பரதாரருக்கு பெற்றுத்தர வேண்டும். இச்சேவையை வளங்க விரும்பும் நபர்களும் இத்தளத்துடன் தொடர்பு கொண்டு எங்களிடமும் host space வாங்கலாமென தெரிவிக்கவேண்டும். இதற்கான செலவை இன்னமும் குறைக்க விளம்பர இணையத்தளமே இவர்களிற்கு ஒரு விளம்பரத்தை இலவசமாக அவர்கள் வெப்சைட்டில் வைத்துவிடுவதனால் கணிசமான தொகையை hosting செய்பவர்களிடமிருந்து கழிவாக பெறலாம். hosting செய்பவரிற்கும் நல்ல விளம்பரமாக இது அமைந்துவிடுகிறது. இந்த 100எம்பி அளவானது தாராளமாக போதும். மற்றயது இவ்விணைய வணிகத்திற்கு வேர்ட்பிரஸ் பிளாக் மிக சிறந்தது. நிறுவுவதும் எளிது. fantastic o மூலமாக ஒரு சொடுக்கிலேயே பதிவு தயார். ஆக இம்மாதிரி ஹோஸ்டிங் செய்பவர்களிற்கும் இது நல்ல வருமானத்தை ஈட்டித்தரவல்லது. யாராவது இவ்வாறு reseller hosting agent ஆக விரும்பினால் கூகுளில் தேடினால் நிறையத்தளங்களிருக்கின்றன. அதிகமாக வருடத்திற்கு USD $150 (10-15 GB space / 5000GB Bandwidth) வரும்.

கிட்டத்தட்ட 6 வகையினருக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரவுள்ள இம்முறைக்கு ஆரம்பத்திலிருந்து செலவு எப்படியிருக்கும்??? எவ்வளவு வருமானம் வரும் ???  என் அனுபவத்தைக்கொண்டு தோராயமாக ஒரு கணக்கு சொல்கிறேன்.

1. விளம்பரத்தளம் நிறுவும் பணியும் அதை சந்தைப்படுத்தலும் முதலீடும் செலவுகளும்
———————————————————————————————————————————

Domain : $10 ( Annual )
Hosting : $50 ( 30-50 GB space / 2000GB Bandwidth) ( Annual )
complete Web site development + Script : usually $750 -$1500 + Maintenance ( Depends ) ( இது வெப்தளத்தைப்பொறுத்து. நாங்கள் செய்ததை வைத்து சொல்கிறேன் ) + Complete copyrights and Unique design

complete Web site development + Script :  $25 -$150 ( Without Copyrights + without maintenance, Can use 3rd Parties Script  )
web site administrator / assistance : $100 – $250/month ( depends )
Google ad-words credit – minimum $50

Initial Investment ( Depends on Web Development cost )  :  $250 ( without copyrights )
or
Initial Investment ( Depends on Web Development cost )  : $2000 ( with Copyrights + Unique Design )
Annual Expenses : Domain+ Hosting $ 60 + Assistance Salary

2. விளம்பரத்தளத்தின் தோராயமான வருமானம்.
—————————————————————————

ஒரு Ad Slot ற்கான விளம்பரத்தினை பிளாக் உரிமையாளருக்கு பெற்றுக்கொடுக்க : 2% – 5% ( $0.1 – $0.6 /month)
அதாவது $1.2 – $ 7.2 / Annual.
ஒரு பிளாக் உரிமையாளர் 2×4 அளவான 125pxad slot ( 8 பெட்டிகள்)+ 480x60px  banner ad slot 2 + Skybar type ad slot 1 என தோராயமாக 11 ad slots வைத்திருப்பாரென கொள்வோம். அப்படியாயின்,
1 பிளாகர் மூலமாக  1 வருட வருமானம் : $13.2 – $79
தமிழ்மணத்திலுள்ள 4000 பதிவர்களில் வாரம் 2 பதிவுகளிற்கு குறையாமல் பதிவிடுவோர் 2000 பேரென வைத்தால், அவர்களில் 500 பேர் இவ் விளம்பரதள banners வைக்க இடம் தருவார்களாயின்,
தோராயமான 1 வருட மிகக்குறைந்த வருமானம்  : $6600
1 வருட அதிகபட்ச வருமானம் : $ 39500

( தலை சுற்றுகிறதா ????? )

சரி வெறும் 100 பதிவர்கள் மட்டுமே ad slot தர  ஒத்துக்கொண்டால் ?
குறைந்தது $1320
அதிகமாக $7900


3. Graphic Designer க்கு கிடைக்க்கூடிய வருமானம்
——————————————————————-

125×125 ad immage : $25 – $75

480×60 Banner : $50-$150

webpage / Blog Heder Image design – $50 – $ 250

webpage / Blog logo design – $ 50 – $200

other misc icons :$20 – $100

Altogether $100 – $250 per advertiser (  4 ad banner design )
ஒரு மாதத்திற்கு குறைந்தது 4 advertiser கிடைத்தால் : $400 – $1000 / month

3. Part time freelancer / Web Designer க்கு கிடைக்க்கூடிய வருமானம்
————————————————————————————————

Installation + Customize a Blog : $5 – $15
Installation + Customize a Blog ( Self hosted ) : $5 – $25
Template Customization – $20 – $150
E commerce customization : $50 – $250
SEO : $5 – $250

ஒரு தளத்தினை அமைத்திட :$50 – $250
1 மாதத்திற்கு 4 தளங்கள் அமைக்கவேண்டி வந்தால் குறைந்தபட்சம் $200-$1000

4. Hosting Providers க்கு கிடைக்க்கூடிய வருமானம்
—————————————————————————

100 MB space : $5-$15 – per advertiser.

5. Blogger s க்கு கிடைக்க்கூடிய வருமானம்
————————————————————–

One 125×125 ad slot : $5-$30/month ( இத்தெகையை பதிவர்தான் நிர்ணயிக்கவுண்டும். உங்களிற்கான வாசகர் வருகையை அடிப்படையாகவைத்து இது மாறுபடும் )
or
One 125×125 ad slot : $20-$90/3 month

so, 2×2 Ad slot : 4 x ($20-$90/3 month) = $80 – $360 /month

3×2 Ad slot : 6 x ($20-$90/3 month) = $120 – $540 / 3months

Altogether $ 500 – $5000 ( 3×2 என்றால் 6 ad slot. ஆனால் நீங்கள் விரும்பினால் 3×4 ஆக 12 ad slot வைத்திடலாம். அல்லது எவ்வளவாயினும்) + 480x60px  banner ற்கான வருமானம் சேர்க்கப்படவில்லை. இதையும் அதிகபட்சமாக 2 வைக்கலாம். அடுத்து மேலிருந்து கீழாக Skybar. இது 1 வைத்திடலாம். உங்களின் வருமானத்தை நீங்களே கணக்குப்பார்த்துவிடுங்கள்.

( 3×2 means 3column and 2 rows,  if u wish u can place maximum 4 rows. இதைவிட அதிகமானால் தளம் பார்க்க ஒரு மாதிரியாகவிருக்கும். லோட் ஆகவும் நேரமாகும்.)

6. தரகர்களிற்குக் கிடைக்க்கூடிய வருமானம்
————————————————————–

Commission per advertiser : 5% – 15%

7. விளம்பரதாரருக்கு ஏற்படும் செலவுகள்
———————————————————-

இது எந்த தளத்தில் விளம்பரம் செய்யப்போகிறார், மற்றும் எவ்வனை விளம்பரம், எவ்வளவு காலம் , வடிவமைப்பின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டால் வருடம் $60 – $300 .

—————————————————

இந்த விடயத்தை 2வருடங்களிற்கு முன்னர் நன்றாக அத்தனை ஆயத்தங்களையும் செய்து வேலையையும் ஆரம்பித்தேன். தமிழனென்பதனால் சிக்கல்தான் வந்தது. தொடர்ந்து செய்ய முடியவில்லை. இவ்வாறு நிறைய்ய்ய்ய வேலைகள் நண்பர்களுடனும் தனியாகவும் செய்தோம். கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட வேலைகள். இன்றும் இனிய நினைவாகவிருப்பது இணைய வானொலி ஆரம்பித்ததுதான். 3 மாதங்களிலேயே பெரிய வருமானம் கிடைத்து.  கடைசியில் அதுவும் நின்றுபோனது. அத்தனை கஷ்டங்களும்  தமிழனென்ற ஒரே காரணத்தினால்தான் வந்தது. என்னதான் செய்வது. இருக்கும் இடம் அப்படி. வேறு  ஒன்றும் செய்யவியலாது. ஆனாலும் பார்க்கலாம்.

என்றும் அன்புடன்
சுபாஷ்.

—————————————-

டிஸ்கி-

சில நண்பர்களின் இடுகைகள்.

http://kricons.blogspot.com/2008/07/blog-post_10.html

http://kricons.blogspot.com/2009/04/adsence.html

http://oorodi.com/ மற்றும் இங்கே இங்கே , இங்கே ( மிக விளக்கமான உதவிக்குறிப்புக்கள். )

தமிழ்நெஞ்சம் அவர்களும் இதையொத்ததொடு பதிவினை நீண்ட காலத்திற்கு முன்னர் தந்திருந்தார். ஆனால் அவர் பதிவில் பழைய பதிவுகளுக்கு செல்ல முடியவில்லை. ( தல, Archive இனை போட்டுவிடுங்களேன். please !!! வருடம் மாதமென பதிவுகளை இலகுவில் தேடிப்பெறலாம். )

உங்களிற்கு வேறு இணைப்புகள் பற்றி தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள். பலருக்கு உதவியாக இருக்கும்.

நான் ஏதோ சும்மா போட்ட பழைய பதிவிற்கு எத்தனை ஹிட்டுக்கள் ???? யப்பா!!!! இதில் பாதியளவாவது வினக்ஸ் பதிவிற்கோ அல்லது விண்டோஸ் சர்வர் 2008 பதிவுகளுக்கோ வந்திருப்பின் எவ்வளவு சந்தோஷமாகவிருக்கும்!!!! ம்ம்ம்.  பரவாயில்லை. வேடிக்கையென்னவெனில் வந்த அனைத்து பின்னூட்டங்களும் நண்பர்களிடமிருந்துதான். ஆனால் அதைவிட அதிகமாக பலரிடமிருந்து தனி இ மெயில்கள் வந்தன. எதுவானாலும் பப்ளிக்காகவே கேட்கலாமே. மற்றவருக்கும் உபயோகமாகவிருக்குமே!!!.

உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

Advertisements

28 பதில்கள் to “இணையத்தில் பணம் 2 – ஐடீ மாணவர்கள், சுயதொழில் ஆர்வலருக்கு”

 1. KRICONS said

  என்னோட இந்த லிங்கை விட்டுடீங்க http://kricons.blogspot.com/2009/04/adsence.html

 2. கலக்கறீங்க சுபாஷ்..!! 🙂

  உங்களை.. அதே இரண்டு வருடத்துக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்சிருந்தா… இன்னேரம்.. ரெண்டு பேரும் செட்டில் ஆகியிருக்கலாம் போலிருக்கே..!! 🙂 🙂

  என்னோட கஸின்.. இது மாதிரி SEO பிஸினஸ் ஆரம்பிச்சி… (பெங்களூர்) சமீபத்தில் ஊத்திகிச்சி..! ஆழம் தெரியாம காலை விட்டதுதான் பிரச்சனை. மத்தபடி.. நல்ல காசு வந்திருக்குன்னுதான் நினைக்கிறேன்.

 3. வடுவூர் குமார் said

  இவ்வளவு விஷயம் இருக்கா?? படிக்க படிக்க தலையை சுத்துது.
  தகவலுக்கு நன்றி.

 4. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் KRICONS.
  இந்த இணைப்பையும் சேர்த்துவிடுகிறேன். அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

 5. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஹாலிவுட் பாலா.
  //இன்னேரம்.. ரெண்டு பேரும் செட்டில் ஆகியிருக்கலாம் போலிருக்கே..!! //

  ஆஆஆஹா மிஸ்பண்ணிட்டமோ?????

 6. சுபாஷ் said

  ஃஃ இது மாதிரி SEO பிஸினஸ் ஆரம்பிச்சி… (பெங்களூர்) சமீபத்தில் ஊத்திகிச்சி..! ஆழம் தெரியாம காலை விட்டதுதான் பிரச்சனை. ஃஃ

  சிக்கல் நம்மிடமில்லை பாலாண்ணா. நாம நம்மோட பொருட்களிற்கான தேவையை நுகர்வோருக்கு தெளிவுபடுத்தணும்.
  SEO வின் பயனைப்பற்றி நமது நுகர்வோருக்கு தெரியாததால்தான் அப்படியாகியிருக்கும். இங்கு யாரும் மார்க்கட்டிங் மற்றும் விளம்பரத்திற்கென அதிகமாக முதலீடு செய்வதில்லை. இதுதான் ஐடீ காரங்களுக்கு சிக்கல். வியாபாரிகள் தம்மை விளம்பரப்படுத்த முன்வந்தால்தானே நமக்கும் கொஞ்சம் வெப்சைட் செய்யவும் சாப்ட்வேர் செய்யவும் ஓர்டர்ஸ் வரும்.

 7. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வடுவூர் குமார்.
  ஃஃபடிக்க படிக்க தலையை சுத்துது.ஃஃ

  ஐயய்யோ. அவ்வளவு மோசமாவா எழுதிருக்கேன்!!!
  🙂

 8. kugan said

  thank you for your information. Long time I am looking for like this service.continue…. tamil people need to improve the income and life in this world.. thanks.

 9. சுபாஷ்…

  நல்ல கட்டுரை…

  சிறிது வேலை…

  பிறகு வந்து படித்து பின்னூட்டமிடுகிறேன்…

 10. வடுவூர் குமார் said

  நம்ம தொழில் வேற பாருங்க அதான் தலையை சுத்துது என்று சொன்னேன்.
  இதில் இறங்கி சம்பாதிக்கனும் என்ற நிலை வந்தால் இதையே புரிகிற வரைக்கும் படிப்பேன் மற்றும் உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி தொந்தரவு செய்வேன். 🙂

 11. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் kugan

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வேத்தியன்

 12. சுபாஷ் said

  @வடுவூர் குமார்
  //
  மற்றும் உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி தொந்தரவு செய்வேன்.
  //

  ஹாஹா தாராளமாக.
  நான் மின்னஞ்சலல் பற்றி சொன்னது பின்னூட்டத்தில் கேட்கக்கூடியவற்றை மின்னஞ்சலில் வேண்டாமென்றுதான் சொன்னேன். மற்றப்படி இங்கு அளவளாவ விரும்பாதவற்றை தாராளமாக மின்னஞ்சலாம். எல்லாம் நாமதானே தல 🙂

 13. //சிக்கல் நம்மிடமில்லை பாலாண்ணா. நாம நம்மோட பொருட்களிற்கான தேவையை நுகர்வோருக்கு தெளிவுபடுத்தணும். SEO வின் பயனைப்பற்றி நமது நுகர்வோருக்கு தெரியாததால்தான் அப்படியாகியிருக்கும்.//

  இல்லை… சுபாஷ். நான் சொல்ல வந்தது.. செலவுகளை! நிறைய பணம் வந்துகிட்டு இருந்ததா.. சொன்னான். லோக்கல் கஸ்டமர்ஸ் எல்லாம் ஒன்னும் இல்லை. அவங்களாவே. பாப்பப்/பாப்டவுன் ஜெனரேட், ட்ராஃபிக் இன்ஜக்ஸன்னு பண்ணி.. நிறைய சம்பாதிச்சிருக்காங்க. ஆனா.. காசு வர்றதுக்குள்ள.. கார்… 20 பேருக்கு சம்பளம் (மினிமம் 20,000-மாம்), பெரிய வாடகையிடம்ன்னு கொஞ்சம் ‘தாம்தூம்’ பண்ணிட்டாங்க. மார்க்கட் ஸ்லோ ஆகும்போது… சமாளிக்க காசில்லாம போயிருச்சி. அதனால் நட்பு/பார்ட்னர்சிப் நட்டுகிச்சி.

  சரியா ப்ளான் பண்ணியிருந்தாங்கன்னா… இது நடந்திருக்காது. நான் முதல்லயே எச்சரிச்சேன். கேக்கலை!!

 14. சுபாஷ் said

  //கொஞ்சம் ‘தாம்தூம்’ பண்ணிட்டாங்க. மார்க்கட் ஸ்லோ ஆகும்போது… சமாளிக்க காசில்லாம போயிருச்சி.//

  ஐயோ!!!, அந்த செலவெல்லாம் கொஞ்ச காலத்துக்கு பிறகே பண்ணிருக்கலாம் ஆனாலும் நோ கமன்ட்ஸ்.
  ஏனெனில் நானும் இதே டைப்தான். இப்ப கொஞ்சம் திருந்திட்டேன். வேலை செய்யத்துவங்கிய ஆரம்பத்தில் காசு வரப்போகுதென்ற நம்பிக்கையில் பெரிய செல்போனெல்லாம் வாங்கி, பின்னர் அதையெல்லாம் 1 மாசத்திலேயே பாதி விலைக்கு வித்து….. யப்பா.. விட்ரலாம் 🙂 சேமிப்பின் பயனை லேட்டாத்தான் உணர்ந்தேன்.

 15. பதிவு பயனுடையதாக இருந்தது…

 16. Subash said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் முனைவர்.இரா.குணசீலன் ஐயா

 17. Senthazal Ravi said

  இதுபோன்ற யூக அடிப்படையிலான உடான்ஸ் பதிவுகளை தவிர்க்கலாம். இதனால் பலர் ஏமாற வாய்ப்பு உண்டு

 18. நல்ல பதிவு…

 19. KRICONS said

  Congrats Now your Post displayed in Youthful Vikatan Home page

 20. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் Senthazal Ravi
  நிஜமாக இது ஊகத்தினடிப்படையில் சொல்லவில்லை. எனது இடத்தில் இம்மாதிரி செய்ய முயற்சித்து கிட்டத்தட்ட 1 மாதத்திலேயே 80+ விளம்பரதாரர்களையும் பெற்றுவிட்டேன். பின்னர் வந்த சில பிரச்சனைகளால் காப்பிரைட்ஸ்ஓடு விற்றுவிட்டேன். இது நான் நிறுவனமாக பதிவுசெய்து வெப்டெவலப்பிங் பண்ணிய ஆரம்பத்தில் செய்தது. பின்னர் இங்கு எந்த வியாபார வேலையையும் செய்யவில்லை. ( உண்மையில் செய்ய மனது வரவில்லை ) வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஓடர்களையும் freelancer வேலையையும் உதவிக்கு சிலரை வைத்துக்கொண்டு செய்து வருகிறேன். சென்ற ஏப்பிரலோடு 3வருட நிறைவையும் கொண்டாடினேன். 🙂
  இப்படி நாலு இடத்தில் இந்த வெப்பைப்பற்றி சொல்லித்தான் ஓடர்ஸ் எடுக்கலாம். அதைத்தான் இப்பாதும் செய்திருக்கிறேன். 🙂

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அணிமா

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் KRICONS

 21. சுபாஷ் said

  @KRICONS
  நீங்க சொன்ன பிறகுதான் நான் அங்கே அனுப்பினேன்.
  உங்களிற்குத்தான் நன்றிகள் உரித்தாகட்டும்.

 22. மிக உபயோகமாக உள்ளது.

 23. தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் – அன்னையர் தின வாழ்த்துகள் – 2009

 24. Blog Archive போட்டுட்டேன். ஆனால் நீங்க எந்தப் பதிவைச் சொல்றீங்கன்னு தெரியல.
  site search வைச்சுருக்கேன். முடிஞ்சா search பண்ணி பாருங்க.
  ஆனால் உங்க மேட்டர் சூப்பருங்கோ.

  //தமிழ்நெஞ்சம் அவர்களும் இதையொத்ததொடு பதிவினை நீண்ட காலத்திற்கு முன்னர் தந்திருந்தார். ஆனால் அவர் பதிவில் பழைய பதிவுகளுக்கு செல்ல முடியவில்லை. ( தல, Archive இனை போட்டுவிடுங்களேன். please !!! வருடம் மாதமென பதிவுகளை இலகுவில் தேடிப்பெறலாம்.

 25. nalla kaddurai

 26. pavanam said

  nalla kaddurai

 27. murali said

  அடேயப்பா. இந்த கணக்கைத்தான் அடியேனும் போட்டு அவற்றை சரி யாக செய்ய முடியாததால் அப்படியே இருக்கிறது. முதலில் நேர மேலாண்மையை வகுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறப்பாக செய்ய முடியும்.

  சிறப்பாக செய்ய முயலும்

 28. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சுந்தர்

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் tamilnenjam
  கிட்டத்தட்ட 6 – 7 மாசத்துக்கு முன்னர் வாசித்த ஞாபகம். தேடிவிடுகிறேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் http://www.tamil.com.nu

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் pavanam

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் murali
  வெற்றிகரமாக 1 மாதத்திலேயே 80 வெப்தளங்களை செய்யும் ஆர்டர் பெற்று வேலையை துவங்கினோம். ஆனா விதி வேறு வளியில் வந்து விளையாடிவிட்டது. பின்னர் அத்தளத்தினை காப்பிரைட்டுடன் விற்றுவிட்டேன். 😦

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: