சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘லினக்ஸ்’

தமிழில் Fedora 10 ( x86 & x64 மற்றும் Gnome & KDE ) தொடர்

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 10, 2009

Fedora லினக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு இலவச கட்டற்ற இயங்குதளம். இந்த பெடோரா லினக்ஸ் பற்றிய உதவிக்குறிப்புகளாகத்தான் இந்த ”தமிழ் Fedora” அமையவிருக்கிறது. முதலிலேயே லினக்ஸ் பற்றி அதிகமாக எனக்கு ஒன்றும் தெரியாதென இங்கேயே கூறிவிடுகிறேன். வழமையாக உபுண்டு வைத்தான் பயன்படுத்தி வந்தேன். ஆனால் பெடோராவை கற்றிருப்பது கூடுதல் தகைமையாதலால் இப்போது அதனையும் சுயமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். பல இணையத்தளங்களும் Fedora வினது உத்தியோக பூர்வ இணையத்தளமும் பல உதவிக்குறிப்புகளை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றிகள். படிக்கும் தகவல்களை அப்படியே கணினியில் சேமிக்கும் வழக்கமுண்டு. அதனை பதிவிலும் இட்டு உங்களுடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களின் அனுபவத்திலுருந்தும் அறிவிலுமிருந்தும் இன்னும் புதிய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாமென நினைக்கிறேன். ஏனெனில் இங்கு பலர் சுளியோடி முத்துப்பெற்றவர்கள். அவர்களின் ஆதரவு எப்போதுமிருக்குமென நம்புகின்றேன்.

பல நிறுவனங்கள் தங்களின் சர்வர் மேலாண்மைக்கு அதிகம் Cent OS, Suse Linux மற்றும் RedHat Server போன்றவற்றைத்தான் பயன்படுத்துவார்கள். சிலர் Debian OS பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் ஒவ்வொரு வினக்ஸ் இயங்குதளங்கள்தான். Linux Flavors என குறிப்பிடுவார்கள். இவற்றில் Cent OS மற்றும் RedHat Server ஆகியவை Fedora வினை தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். உபுண்டுவிற்கு 98%ம் தான்.
Susi Linux மற்றும் Debian OS போன்றவை உபுண்டுவிற்கு தங்களின் client / workstation ஆக பணிபுரிய 100% ஆதரவினை வழங்கும். Fedora விற்கு 98%ம் தான். காரணம் Fedora ஆனது ஆரம்பகால RedHat இயங்குதள kernel இனை அடிப்படையாக வைத்து அதே கட்டமைப்புக்களுடன் உருவாக்கப்பட்டது. ஆனால் உபுண்டுவோ Debian OS இன் கட்டமைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையில் மேலோட்டமாகப் பார்த்தால் எந்த வேறுபாடுகளும் தெரியாது. ஆனால் மென்பொருள் நிறுவும் பொறிமுறையும் சில commands வித்தியாசமாக பாவிக்கப்படும். ( வேறுபாடுகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தரவும் )

சரி, இனி பெடோராவைப்பற்றி பார்க்கலாம். Fedora Core 4 விலிருந்து இதனை பயன்படுத்தி வருவதனால் மற்றய லினக்ஸிலிருந்து இது மிகவும் பிடித்தவொன்றாக மாறிவிட்டது. பெடோராவின் முழு வரலாறும் விக்கிப்பீடியாவின் பக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அதையெல்லாம் விட்டுவிட்டு விடயத்திற்கு வரலாம். தற்போது பெடோராவின் 10ம் பதிப்புதான் சந்தையில் இறுதியாக வெளிவந்திருக்கும் பதிப்பு. அடுத்த மாதம் 11ம் பதிப்வை வெளியிடுகிறார்கள். இப்போது வேண்டுமானால் பீட்டாவினை தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் இங்கு நாம் பார்க்கப்போவது Stable ஆகவிருக்கும் 10ம் பதிப்பைப்பற்றித்தான்.

பெடோரா 10 ஆனது x86 மற்றும் x64 பதிப்புகளாக கிடைக்கிறது. நமது கணினியின் வேகம் அதிகமாகவிருந்தால் x64 பதிப்பினை நிறுவிக்கொள்ளலாம். அதாவது உங்களிடம் 3GB க்கு மேலான அளவு ரேம், AMD x86_64 ரக அல்லது இன்டல் Dual Core/ Core 2 Due மற்றும் இவற்றிற்குப்பிந்திய processor இருக்குமானால் இந்த 64பிட் பதிப்பின் முழு வேகத்தையும் எங்களால் அனுபவிக்க முடியும். வேகம் என்றால் சும்மா இல்லை. மேலே கூறியதைவிட வேகம் குறைந்த எனது மேசைக்கணினியில் 64பிட் பதிப்பு நிறுவ எடுத்த கால அளவு வெறும் 5 நிமிடங்கள்தான். ( 32பிட் உபுண்டுவிற்கு 15 நிமிடம், 32பிட் விஸ்டாவிற்கு அல்டிமேட் 20-30 நிமிடம், 32 பிட் XP_sp2 க்கு 20-25 நிமிடம், 64பிட் XP_sp2 ற்கு 15 நிமிடங்களும் பிடித்தது). அவ்வாறில்லையெனில் 32பிட் பதிப்பான x86 இனையே நிறுவிக்கொள்ளலாம். நீங்கள் போலி இயங்குதள மென்பொருட்களை (  Vertual Box / VM Ware & Vertual PC  இனை தவிர்த்தல் நலம்) பாவிப்பதாயிக் 32பிட் இயங்குதளத்தையே நிறுவிக்கொள்ளவும்.

அடுத்து நமக்குத்தேவை எம்மாதிரியான வரைகலை இடைமுகப்பினை (Desktop Interface ) என்பதை வைத்து 2 வகையாக பிரிக்கலாம். சாதாரணமாக பிரபலமான Linux Desktop ஆக Gnome விளங்குகிறது. இது பாவிக்க சற்று இலகுவாகவிருப்பினும் பயனர்களிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வது கடினம். அதற்கேற்றாற்போல பயனர்தான் வளையவேண்டும். அடுத்தது KDE எனப்படும் பழைமைவாய்ந்த இடைமுகப்பு. இது ஆரம்ப காலத்தில் லினக்ஸ் முதன்முதலில் GUI ஆக வந்தபோதிலிருந்து பணன்படுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. தற்போது KDE 4.1 ஆனது மிகவும் வலிமைவாய்ந்த இலகுவானதொரு பயனர் இடைமுகப்பாக தெழிற்படுகின்றது. பயனர் தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பது இதன் சிறப்பம்சமாகும். இதனால் லிகன்ஸிற்கு மென்பொருள் தயாரிப்பவர்களின் முதற்தேர்வாகவும் KDE இருக்கின்றது.

நாம் இங்கு முதலில் 32பிட் Gnome உடைய பெடோராவைப்பற்றி பார்க்கலாம். 64பிட்டிற்கு வரவேற்பு எவ்வாறு கிடைக்குமென தெரியாது. அதனால் 64பிட் பற்றி பின்னர் பார்க்கலாம். ( தட்டச்சு செய்யும் நேரம் மிச்சம் ) மற்றும் சாதாரணமான Genome இலிருந்து படிப்பதும் நல்லது. நல்ல புலமை பெற்றபின்னர் மற்றயதை நாமே சுயமாக கற்றுக்கொள்ளலாம்.

=================================================================================================

இந்த தொடரினை http://fedoraintamil.blogspot.com எனும் புதிய பதிவினில் துவங்கியிருக்கிறேன். அனைவரினதும் ஆதரவும் உதவிகளும் வழமைபோல கிட்டுமென்ற நம்பிக்கையுடன்…

இது பற்றிய எங்களிற்குத்தெரிந்த விடயங்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

ஆரம்பத்தில் பிளாகர் தந்த லொள்ளுகளினால் வேர்ட்பிரஸ் தேடி வந்தேன். மற்றும் Cpanel மூலமாக நிறுவுவதும் இலகுவென்பதான் வேர்ட்பிரஸ்ஸே எனது ஏகோபித்த தெரிவாகவிருந்தது. இப்போது பல புதிய வசதிகள் பிளாகரிலும் இருப்பதனால் ஒரு முறை பரீட்சார்த்த முயற்சியாக பிளாகரில் பதிவு துவங்கியிருக்கிறேன். பார்க்கலாம்…

மிக்க நன்றிகளுடன் சுபாஷ்.

Posted in அறிமுகம், தகவல் தொழில்நுட்பம், லினக்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 8 Comments »

பிரிச்சு மேய நெருப்புநரி 3 இன் சூட்சுமங்கள்

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 8, 2008

ஆரம்பத்தில் நெருப்புநரி 2 டைத்தான் பயன்படுத்திற்று வந்தனான். தேவையான சகல அம்சங்களுடனும் மனம்நிறைந்த பயன்பாடு. முக்கியமாக அதன் வேகம். பிறகு ஏதோ றெக்கோட் வைக்க ஆசப்படுறாங்களேளள எண்டு நெருப்புநரி 3 ஐ அவங்க சொன்ன நாளிலேயே டவுண்லோட் பண்ணேன். ஹம்ம்ம் இப்ப 60 மில்லியன் டவுண்லோடாம்.

முந்தி நெருப்புநரி 2ட நல்லா ஒப்டிமைஸ் பண்ணி வச்சிரிந்தன். 3உக்கும் அப்படியே பண்ணலாமா எண்டு யேய்ச்சு நெட்ல பாக்க கொஞ்சம் ஐடியா கிடச்சிது.

ஆனா நெருப்புநரி 2டோட ஆட்ஈன் ஒண்டும் 3உக்கு ஒத்து வராதது கொஞ்சம் கஷ்டம்தான்,ஆன் கொஞ்ச நாள்ள வந்துடும் எண்டு நெனக்கிறேன். அலுப்படிக்கிற வேல என்னெண்டா எல்லா ஆட்டொன்னையும் திரும்பி இன்ஸ்டோல் பண்ணணும்.

சரி இப்ப நெருப்புநரி 3டில என்னென்ன செய்து நமக்கு தோதா வைக்கலாம்னு பாக்கலாம்.

முதல்ல உங்க எல்லா பாஸ்வேர்ட், புக் மார்க்கெல்லாத்தயும் பேக்கப் பண்ணி வைங்க.

டெஸ்ட் பண்ணிப்பார்க்க பயப்படமாட்டேன் எண்டு ஒரு சின்ன சபதத்தையும் மனசுக்குள்ள போடுங்க.

நாம பண்ணப்போற எல்லா வேலையும் அட்றஸ் பார்ல about:config
எண்டு அடிச்சித்தான் பண்ணப்போறோம்.

1. முதல்ல about:config ஐ அடிங்க

2. பிறகு சரியான இடத்த தேடி அந்த இடத்தில சொல்றமாதிரி சேஞ்ச் பண்ணுங்க. டெஸ்ட் பண்ணி பார்க்க பயப்படவேணா, யாமிருக்க பயமேன்ன்ன்ன் ??? ( அப்படி நா சொல்லலப்பா, கடவுள்தான் என்ன மாதிரி ஆளுங்கள காப்பாத்த இப்படி சொல்லி வச்சிருகடகாரு ஹிஹி )

——–

1. address bar ல வாற URLஐ Single Click மூலம் Select பண்ண

browser.urlbar.clickSelectsAll = True /// இது OK பண்ண
browser.urlbar.clickSelectsAll = False /// இது OK இல்லாம பண்ண
ஃஃஃஃஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்படி தமிங்லிஷ் அடிச்சா ரென்டு லாங்குவிச்சும் மூஞ்சில மூச்சா போகும்.
நா உலகப் பொது மொழிலேயே சொல்றேன். மன்னிச்சுக்கொள்ளுங்க.

2. To auto Complete URL while typing in the address Bar

browser.urlbar.autoFill=True

3. To set the number of auto complete URL in the address bar

browser.urlbar.maxRichResults = #
(# indicates the number of auto complete URLs shown. The default is 12)

4. To disabler Browser Toolbar Tip

browser.chrome.toolbar_tips = False

5. To paste copied content by clicking the center button on the mouse

middlemouse.paste = True

6. To disable blinking text
browser.blink_allowed = False

7. To create a single close button to for all Firefox Opened Tabs.
browser.tabs.closeButtons = 3

8. To increase number of recently closed tabs.
browser.sessionstore.max_tabs_undo=15

9. Right click view source in your editor

view_source.editor.external=True
view_source.editor.path= Path of Editor

10. To enable fast scrolling across tabs

toolkit.scrollbox.scrollIncrement =75

11. To stop displaying website icon in address bar and on the tabs

browser.chrome.site_icons = False

12. To enable spell check in text fields

layout.spellcheckDefault = 2

13. To speed up the browser

network.http.max-connections 30 to 96
network.http.max-connections-per-server 15 to 32
network.http.max-persistent-connections-per-server 6 to 8
network.http.pipelining false to true
network.http.proxy.pipelining false to true
network.http.pipelining.maxrequests 30 to 8
network.http.pipelining.ssl false to true
network.http.proxy.pipelining false to true

14. To disable annoying browser behavior

Change the following values to ‘false’
dom.disable_window_open_feature.titlebar

dom.disable_window_open_feature.menubar
dom.disable_window_move_resize
dom.disable_window_open_feature.toolbar

15. To show more tabs on single window

browser.tabs.tabMinWidth = 75

16. To display search results in new tab

browser.search.openintab=True.

———

நீங்க இந்த

Fine Tune Firefox 3 ஐயும் பயன்படுத்தி பாக்கலாம்.

Posted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், லினக்ஸ், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 10 Comments »