சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘தொடர்பதிவு’

சினிமா சினிமா – தொடர்பதிவு

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 17, 2008

என்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட அணிமாவிற்கு என் முதற்க்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? கொஞ்சம் ஓவரா அலட்டியிருக்கேன். பொறுத்தருளுவீர்களாக.

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஆறு வயதில் என ஞாபகம். முதன்முதலில் பார்த்த்து சூப்பர் ஸ்டாரின் ராஜா சின்ன ரோஜா. அதுவும் தியேட்டரிலேயே பார்த்தேன். அப்போது வீட்டில் நான் மட்டும் ஒரே பிள்ளை!!!

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

முதன்முதலில் பார்த்த்து சூப்பர் ஸ்டாரின் ராஜா சின்ன ரோஜா. அதுவும் தியேட்டரிலேயே பார்த்தேன். அப்பாவின் நண்பரெருவரின் குடும்பத்தினருடன் சென்று பார்த்தோம்.

அடுத்தும் தியேட்டரில் ரஜினியின் தர்மதுரை. அதுக்கு பிறகுதான் கறுப்பு ஜேக்கீன் வாங்கி வியர்க்க வியர்க்க போட்டு அலைந்தேன். ( கறுப்பு ஜேக்கீனுக்கு நைட் ரைடரும் அதின் ஹீரோ மைக்கலும் இன்னொரு காரணம்.)

இந்த 2ம் தரம் படம் பார்ப்பதற்கு இடையில் வேறு எந்த படமும் பார்தம்த்தாக நினைவிலில்லை. அன்று பாடசாலை பரீட்சை முடிந்த பின்னர் அப்பாவோடு சென்று பார்த்தேன்.

அடுத்து தியாகராஜனின் ஒரு படம்.அவருக்கு தலையில் அவரது அம்மா ஒரு குடுமி கட்டிவிடுவார். இவர் பழி வாங்கியபின்னர் தான் அதை அவிழ்ப்பாராம். பெயர் ஞாபகம் இல்லை. ஆனால் வெறுத்துப்பொய் தூங்கிய படம்.

அடுத்து பாலச்சந்தரின் ஒரு படம். பாடல்கள் சூப்பர் ஹிட். பெயர் ஞாபகமில்லை. பிரபல பாடகர் வீட்டை விட்டு ஓடி வந்து விடுவார். அதுதான் கதை.

அதன் பின்னர் நிறைய்ய்ய்ய்ய வருடங்களிற்கு பிறகு முதல்வன் பார்த்தேன். 11ம் வகுப்பு பரீட்சை முடிந்த நேரமது. பிறகு இன்றுமட்டும் ஜாலியாக தொடர்கிறது.

இ. என்ன உணர்ந்தீர்கள்?

அந்த வயதில் உணர என்ன இருக்கு. முதல்முதலா தியேட்டரில் பெரிதாக படம் பார்க்க பிரமிப்பாக இருந்திருக்குமென இண்ணுகிறேன். இன்றும் அதில் வரும் ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் சென்றானாம் எனும் பாடல் பிடிக்கும். அதற்கு தியேட்டர் சென்று பார்த்த்துதான் ஒரே காரணமாக இருக்குமென எண்ணுகிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஜெயம் கொண்டான்.

முதல் காட்சி. நான்கைந்து இடைவேளை விட்டார்கள். ரீலில் ஏதோ சிக்கலாம்.ஹிஹி

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குசேலன் !!!

தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டு தாம்தூம் போட்டுவிட்டார்கள். அதற்குமுன்னரும் தியேட்டர் போகும் எண்ணமிருக்கவில்லை.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாட்சா !!!

2 வாரத்துக்கு அந்த எஃபெக்ட் இருந்த்து. நடக்கும்போது, திரும்பும்போது என எல்லா நேரத்திலேயும்.

அடுத்து ந ந்தா.

எதிர்பாராத கிளைமாக்ஸ்

அடுத்து சந்திரமுகி. படம் நைட்சோ பார்த்து தூங்கி கனவு கண்டு பக்கத்தில் படுத்திருந்த நண்பரையும் சேர்த்து கட்டிலிலிருந்து கீழேஇறக்கி பதுங்கியிருந்தேன். காரணம் வெளியில் யாரோ தகர கேட்டில் கல்லால் எறிந்திருக்கிறார்கள். நாய் ஓயாமல் குலைத்துக்கொண்டிருந்த்து. ஹிஹி

மற்றயவை ஞாபகம் இல்லை.

இப்போதெல்லாம் படம் பாத்து முடிச்சு டைட்டில் போகும்போது எல்லாமே போய்டும். கதய கேட்டா கூட சொல்ல வருதில்ல. ஞானம் கூடினா இப்படித்தனோ???? ஹிஹி

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நத்திங்!!!

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

சின்ன வயதில் அப்பா இராடாயண கதையென சம்புர்ண இதைமாயணம் படம் கொண்டு வந்தார். வீசிஆர் பிளேயரில் பார்த்தேன். அதில் வரும் இறுதி போர்க்காட்சிகள் வியக்க வைத்தன. கும்பகர்ண்ணுக்கு மேலே பலர் ஏறி அவரை எழுப்பும் காட்சி, அம்புகளுக்கு பதிலம்பு விட்டு அவை மோதும் காட்சிகள், இப்படி நிறைய காட்சிகள். அப்போது உண்மையில் இப்படித்தான் மனிதர்கள் இருந்திருப்பார்களென எண்ணுமளவிற்கு கலக்கலாய் இருந்த்து.

அடுத்து சிவாஜிகணேசன் நடித்த நவராத்திரி. அடுத்து விக்கிரமாதித்தன் படமும் பார்த்து வியந்தேன் அப்போது. இப்ப வரும் கிறாபிக்ஸ் எல்லாம் சும்மா ஜிஜிப்பி!!!

அடுத்த்து DTS !!! பாய்ஸ் படம் பார்க்கும்போது நாய் குரைக்கும் சீனில் சட்டென பின்னால் திரும்பி பார்க்க வைத்த்து.

அன்னியனில் எண்ணைச்சட்டிக்குள் ஒருவரை வீசிவிட்டு தட்டால் வீசி மூடுவார். அது ஸ்லோ மோசனில் பறந்து வரும். அப்ப எனக்கு முன்னால் இருந்த இருவரும் இடம் வலமாக பிரிந்து சாய்ந்தார்கள். அப்ப எனக்கு இந்த தட்டு என்ன நோக்கி வருவது போலிருந்த்து. எல்லாம் சவுண்ட் எஃபெக்ட்!!

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தட்ஸ்தமிழில் தலைப்புகளை வாசிப்பதுண்டு

7.தமிழ்ச்சினிமா இசை?

ஏ ஆர் ரகுமாகேதான் ஸ்டார்.

ஏ ஆர் மனைவி மாதிரி.எப்பவும் வீட்டிலிருந்து கூடவே பயணிக்கும் இசை.

ஹரீஸ் பஸ்சில் ஒரு ஹால்ட்டில் ஏறி அடுத்த ஹால்டில் இறங்கும் அழகான பெண் போல. அவ்வளவுதான்.

யுவன் ஒரு பஸ் ஹால்ட்டில் நிற்கும் பெண்கள் கூட்டம் போல. நான்கைந்து பேர் நின்றால் ஒன்று தேறும்.

இப்போது புதிதாக ஜி வி பிரகாஷி, ரமேஷ் வினாயகம், ஜோஸ்வா சிறீதர், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையில் சில பாடல்கள் பிடிக்கிறது. காரணம் பிரஷ்ஷான இசை!!! இவர்களெல்லாம் பஸ்சில் வேகமாக போகும்போது சட்டென எதிர்த்திசையில் வீதியோரமாக நடந்து போகும் பெண்கள் போல!!!

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

வேறு இந்தியமொழயென்றால் ஹிந்தி மட்டுமெ!!! ஆங்கில சப்டைட்டிலோடு பார்த்திருக்கிறென். 2 படங்கள் மாத்திரம். ஒன்று ஷாருக்கின் டான். எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத படங்களில் இதுவும் ஒன்று.

அடுத்து ஒரேயொருமுறை தியேட்டரில் பார்த்த ஜோதா அக்பர்.

மற்றும் aXXo வின் சகல படங்களும். இப்பகூட Jrny 2 da center of da earth டவுண்லோடு முடிந்திருக்க இறக்கி பார்த்துவிட்டுதான் மோகனின் பதிவில்  பின்னுட்டமிட்டேன்!!!

மற்றும் சார்லி சாப்ளின் படங்கள் பிடிக்கும்.

நிறைய படம் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை மறந்து கண் கலங்கிய படம் வில் ஸ்மித்தின் Prst of happyness  (happiness இல்லை ) மற்றபடி படம் பார்க்கும்போது எதுவிதமாயும் இருப்பதில்லை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆம்!!!!

சிவாஜி படத்துக்குக்கூட அதன் தயானிப்பாளருக்கு என்னாலான உதவி 750ரூபாய் குடுத்தேன். ஐ மீன் தியேட்டரில் 3 தரம் பார்த்தேன். ஹிஹி

இப்ப சொல்லுங்க தமிழ் சினிமா மேம்படும்தானே?????

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நினைக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நினைக்கற மாதிரி அவய்க படம் எடுக்கறதில்ல.

ஆனா வாழ்த்துக்கள் சொல்ல்லாம்.

வாழ்த்துக்கள்!!!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ம்ம்ம் பெரிசா ஒன்னும் ஆகாது. ஏன்னா உடனே அடுத்த என்டர்டெயின்மன நாமளே உருவாக்கிடுவோம். இல்ல இதுக்கேத்தமாதிரி மாறிவிடுவோம்.

இதுக்காக யோசிச்சு கிடக்குறது வேஜ்ட். இத விட நம்ம வாழ்க்கைக்கு நிறைய யோசிக்கணும்.

நடைமுறையில் இப்படி நடக்காது. நடக்கவும் முடியாது. இதுவே தொழிலென இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.

அடுத்து அரசிற்கும் வரவாய் குறையும்.

இப்பொழுது நான் சிலரை கோர்த்து விட வேண்டும்.

1. அவார்டா குடுக்கறாங்க – ஆர்வி மற்றும் Bags அவர்கள்

தமிழ் சினிமா பற்றி ஒரு களஞ்சியமே இவர்கள் பதிவுகளில் இருக்கிறது. முதலில் இவர்களை அழைப்பதன் மூலம் சுவையான பல விடங்களை அறிந்துகொள்ளலாமென நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருவர் சேர்ந்து பதிவுகள் எழுதுகிறார்களென தெரியாது. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஆக நமக்கு இரு சுவையான பதிவுகள் கிடைக்கவிருக்கின்றன.

3. தமிழ்நெஞ்சம் அவர்கள்

கணனி பற்றிய சுவையான பதிவுகள் பலவற்றை சளைக்காமல் போட்டுத்தள்ளுவார். சினிமா பற்றியும் சொல்வாரென எதிர்பார்க்கிறேன்.

4. வபூர்தா அவர்கள்

நல்ல கதைகள், நல்ல கவிதைகள் மற்றும் மொக்கை கதைகள் என நேரம் கிடைக்கும்போது போடுவார். ரொம்ப அப்பாவி என நினைக்கிறேன். 2ம் முறை மாட்டுகிறார். ( நா என்ன பண்ண !!! )

5. கூடுதுறை அவர்கள்

நல்ல பதிவர், பல பதிவுகளில் உபயோகமான பதிவுகளை புதியவர்களுக்காக திரும்ப தருகிறார். கணனி பற்றிய பல உபயோகமான பதிவுகள் மிகவும் பிடித்தவை.

மற்றய நண்பர்கள் பலரையும் அணிமா அண்ணனே கோர்த்துவிட்டதால் அவங்க தப்பிச்சாங்க!!!

உங்க அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!!

Posted in சினிமா, தொடர் பதிவு, பொது | குறிச்சொல்லிடப்பட்டது: , | 42 Comments »