சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘தகவல் தொழில்நுட்பம்’

எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்

Posted by சுபாஷ் மேல் ஜூன் 29, 2009

வகுப்பில் உள்ள கணினியில் பென் டிரைவை உபயோகித்துவிட்டு பின்னர் வீட்டிலோ வேறு கணினியிலோ இணைத்து திறந்து பார்த்தால் சில சமயம் உள்ளே ஒன்னும் இருக்காது. Shoe hidden Files இனை ஆக்டிவ் பண்ணியிருப்பினும் வேலைக்காவாது. சில malicious களின் வேலையிது. இதிலிருந்து format பண்ணமுதலில் கோப்புகளை மீளப்பெறவேண்டுமல்லவா? அதற்கத்தான் இந்த வழிமுறை.

எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்

எனது பதிவினை நான் http://tblog.hisubash.com எனும் முகவரிக்கு மாற்றிவிட்டேன். ஆதலால் உங்களின் புக்மார்க்குகளை அப்டேட் செய்துகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிள்றேன்.

நன்றி
சுபாஷ்.

Advertisements

Posted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , | எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

Win XP – இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 16, 2009

இது ” எப்படி?” பதிவு போடும் சீசன் போலிருக்கு. அதான் நானும் ஜோதில ஐக்கியமாகலாமேனு ஒரு பதிவ போட்டேன். ( ஆக்சுவலி பதிவு பெயரைத்தான் மாற்றினேன் )

உங்களிடம் இருப்பது விண்டோஸ் XP எனில் இந்த முறையைப்பின்பற்றி உங்களின் இனைய இணைப்பின் வேகத்தை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம்.  முயன்று பார்த்து வித்தியாசமாகவிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே.

முதலில் அட்மினிஸ்ரேட்டர் அக்கவுண்ட் அல்லது அட்மினிஸ்ரேட்டருக்குரிய உரிமைகளனைத்துமிருக்கும் அக்கவுண்டில் நீங்க இருக்க வேண்டும்.

1. 1. Start – Run – type gpedit.msc

1

2. இடது பக்கத்தில் உள்ள Local Computer Policy என்பதை விரிவாக்கி கீழ்க்கண்ட ஒழுங்கில் செல்லவும்.
Administrative Templates / Network Branch வரை சென்று அங்கு QoS Packet Scheduler என்பதனை தெரிவு செய்யவும்.

3. பின்னர் வலது பக்கம் வரும் Limit reservable bandwidth என்பதனை இரட்டைச்சொடுக்கு மூலம் திறக்கவும்.

21

4. Setting tab இனில் Enable என்பதனை தெரிவு செய்யவும்.

5. Bandwidth limit % எனுமிடத்தில் 0 ( பூச்சியம்) என இட்டு OK பட்டனை அழுத்தவும்.

3

அவ்வளவுதான்.

XP யானது சாதாரணமாகவே இணைய இணைப்பில் சுமார் 20% இனை தனது தேவைக்கு ஒதுக்கி விடும்.  QoS இனை disable பண்ணியிருந்தாலும் இப்படித்தான் இருக்கும். QoS ஆனது நமது வீட்டுப்பாவனைக்கு  தேவையில்லாத ஒன்று. QoS பயன்படுத்தவில்லையெனில் XP யானது ஒதுக்கி வைத்த 20% த்தினை நாமாவது பயன்படுத்தலாம். அதற்குத்தான் இந்தப்பதிவு.  ஆனால் உங்களிடம் அதிவேக இணைய இணைப்பிருந்தால் இந்தப்பதிவில் சொல்லியபடி செய்தாலும் எந்த வித்தியாசமும் தெரியாது. டயல் அப் கனக்ஷன் வைத்திருப்பவர்களுக்கு வேகம் அதிகரிக்கும்.

உங்களுக்கும் வித்தியசம் தெரிகிறதாவென பின்னூட்டத்தில் சொல்லுங்க…

அன்புடன் சுபாஷ்.

Posted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 11 Comments »

Dualboot: Vista நிறுவிய பின்னர் XP நிறுவுதல்

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 6, 2009

மி்க்க நாட்களிற்குப்பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

எனது கணினியில் நீண்ட காலமாக  Vista பாவித்து வருகிறேன். இது 32பிட் இயங்குதளம். எனது கணனி 64பிட் இனை பூரணமாக ஆதரிக்கவல்லது. ஆனாலும் விண்டோசை 32 பிட் ல்தான் பாவிப்பது வழமை. ஏனெனில் 64பிட்டிற்கு ஒத்திசைவான மென்பொருட்கள் கிடைப்பது அரிது. நேற்று x86 Visual Studio .net 2008 ல் x86 ற்கு எழுதப்பட்ட VC++ மென்பொருளை x64 விண்டோஸ் பணித்தளத்திற்கு ஒத்திசைவாக மீண்டும் compile பண்ணினேன். அதனை பரீட்சித்துப்பார்க்க நேற்று Windows XP x64 எனப்படும் 64 பிட் இயங்குதளத்தை தரவிறக்கியிருந்தேன். பிடித்தது சனி.

வழைமையாக Vista நிறுவிய பின்னர் XP நிறுவினால், XP ஆனது Vista வின் boot loader இனை மாற்றி தனது boot loder இனை வைத்துவிடும். இதனால் XP மட்டுமே boot ஆகும். அதனை சரி செய்து Vista வினையும் சேர்த்து dual boot பண்ண வேண்டுமெனில் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் EasyBCD எனும் மென்பொருளை பயன்படுத்தி bootloder இனை புதிதாக வடிவமைக்கவேண்டும். XP போல boot.ini கோப்பொன்றை உருவாக்குவதன் மூலம் விஸ்டாவை boot பண்ண முடியாது. ஏனெனில் Vista வில் boot.ini எனும் கோப்பில்லை. இதெல்லாம் தெரிந்து எல்லாவற்றிற்கும் ஆயத்தமாகவே Windows x64 இனை நிறுவினேன். ஆனால் என் கஷ்ட காலம், அம் மென்பொருள் 64 பிட் இனை ஆதரிக்கவில்லை.( எல்லாம் செய்து முடித்த பின்னர் தான் vistabootpro எனும் மென்பொருள் பற்றி அறியக்கிடைத்தது. அது 64 பிட்டிற்கும் ஆதரவளிக்கும் )

இலகுவான ஒரே வழி, மீண்டும் Vista DVD இன் மூலம் Repair பண்ணுவதுதான். இதனால் XP ன் Boot loader அழிக்கப்பட்டுவிடும். ஆனாலும் பின்னர் மேலே சொன்ன மென்பொருள் மூலம் XP க்கும் சேர்த்து boot loader இனை புதுப்பித்து Dual Boot ற்கு வழிசமைத்துவிடலாம். அத்துடன் உங்கள் Vista வை மறுபடியும் Activate பண்ணியாக வேண்டும்.

சரி, தப்பித்தவறி உங்களிடம் Vista DVD இல்லாவிட்டால் ???

1. நீங்கள் இரண்டாவதாக நிறுவியது 32/64 bit XP இனில் Vista Boot Pro எனும் இலவச மென்பொருளை நிறுவுங்கள்.

2. “System Bootloader” எனும் பகுதிக்கு செல்லவும்.

3. “Windows Vista Bootloader” அனை தெரிவு செய்யவும்.

4. பின்னர் “All Drives” என்பதனை தெரிவு செய்து விடுங்கள்.

அவ்வளவுதான்.

ஆனால் என் நேரம், இந்த மென்பொருள் பற்றி எந்தவொரு பதிலும்  XP x64 ல் இருந்து தேடியபோது கிடைக்கவேயில்லை. 😦 lol.

இம் மென்பொருள் மூலம் நீங்கள் எல்லா விண்டோஸ் XP, Vista & Seven பணித்தளங்களையும் திருத்திவிடலாம்.

இந்த மென்பொருட்கள் மற்றும் செயற்பாட்டு முறைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் பெற இங்கு செல்லவும். பல தளங்களில் துண்டு துண்டாக கிடைக்கும்  பல விடைகளும் இங்கு ஒரேயிடத்தில் பெற்றுக்கொள்ளலாம். மிகவும் அருமையான Forum.

மற்றும் உடனுக்குடன் உதவிகள் பல புரிந்த சில forums,

http://forums.techguy.org/49-operating-systems/
http://forums.techguy.org/windows-vista-7/597318-xp-wont-boot-after-vista.html

http://www.msfn.org/board/index.php?showtopic=100672

EasyBCD எனும் 32பிட் மென்பொருள் பற்றி சொல்லியிருந்தேன். ஆனாலும் இந்த மென்பொருளை விட பின்னர் கூறிய மென்பொருளானது பயன்படுத்த மிக இலகுவானது. ஆனாலும் ஒரு ஆபத்திற்கு அதையும் தெரிந்து வைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்.

நீங்க இப்படி வேறு இயங்குதளங்களை நிறுவ முன்னரே இந்த மென்பொருட்களை தரவிறக்கி சேமித்து வைத்துவிடுங்கள். மறக்காமல் செயன்முறை விளக்கத்தையும் அதே கோப்புடன் சேமித்துவிடுங்கள். பின்னர் உதவியாகவிருக்கும். ( எனது ஸ்டைல் )

சரி, லினக்ஸ் நிறுவியிருந்தால் ????

கவலையே விடுங்க, லினக்ஸ் புத்திசாலி. ஏற்கனவேயொரு இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கிறதென அதுவே கண்டுபிடித்துவிடும்.

டிஸ்கிs-

அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.

தமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும்  உதவியாகவிருக்கும். நன்றி.

அன்புடன் சுபாஷ்.

Posted in ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 7 Comments »

என்னோடு எப்போதும்…. மென்பொருட்களுக்கான தொடர்விளையாட்டு

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 27, 2008

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!

பதிவர் மாயா அவர்கள் இந்த புதிய தொடர் விளையாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார். நானும் நான் பணன்படுத்தும் மென்பொருட்கள் பற்றி ஒரு பதிவெழுதவேணும் என நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் இந்த தொடரிற்கான அழைப்பும் வந்ததால் உடனே Draft ல் இருந்ததை சில மாற்றங்களுக்குட்படுத்தி பதிவு தயார் ! இத்தெடர் பதிவை ஆரம்பித்த ஊரோடி பகி அவர்களுக்கும் நன்றிகள்.

————————————————————————————-

7-Zip

மிக வேகமான compressing Software. இதில் சுருக்குவதற்கென சில வித்தியாசமான Algorithms பயன்படுகிறது. சந்தையில் உள்ள கட்டணம் செலுத்தவேண்டிய மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் இதன் தரமும் வேகமும் மிகச்சிறந்தவை. இது ஒரு open source மென்பொருளாகும்.

A-squared Anti-Malware

இணையத்தில் பயமில்லாமல் மேய இந்த மென்பொருள்தான் காரணம். Trojans, Warms, Spywares, Rootkits போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது. ஒருதரம் Internet Security நிறுவினேன். அத்தோடு கணனியே வெறுத்தது. பின்னர்தான் இவற்றுக்கென மாத்திரம் இந்த மென்பொருள் பயன்படுத்துகிறேன். இலவச பதிப்பும் கிடைக்கிறது.

Bit Che

என்னவிதமான போப்புகளோ, பாடல்களோ, படங்களோ அத்தனையையும் அனைத்து பிரபலமான டொரன்ட் இணையத்தளங்களிலும் தேடி முடிவுகளை கண நேரத்தில் தருகிறது. இதன் முழு பதிப்பை இதன் மூலமாகவே தேடி பயன்படுத்தலாம்!!!!

Blog Jet

மிக வேகமாக பதிவுகளை எழுதி வெளியிட இந்த மென்பொருள்தான் உதவி. பிரபலமான நிறைய இணைய பதிவு வெளியிட்டாளர்களின் பயனர் கணக்குகளுக்கு அதரவு தருகிறது. ஆனால் இன்னும் தமிழில் எழுத முடியாதது வருத்தமே!!! விரைவில் யுனிகோட்டிற்கும் ஆதரவு கிடைக்குமென நினைக்கிறேன்.

Coffee Cup Software

இணைய வடிவமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த மென்பொருள் தொகுப்புகள்.

CyberLink Power DVD

இதனைப்பறிறிய அறிமுகம் தேவையில்லாதபடியினால் அடுத்ததற்கு செல்வொம். முக்கியமாக ஒரிஜினல் டிவிடிகளில் 5.1 சரவுண்ட் சவன்டுக்காக பயன்படுத்துகிறேன்.

Feed Demon

RSS திரட்டியாக நான் மிக விரும்புவது இதனைத்தான். இலவசமாக கிடைக்கிறது. பல பதிவுகளில் பின்னுட்டாமைக்கு இதுவம் ஒரு காரணம்.

Folder Locker

இது எனது கோப்புகளை திருட்டுத்தனமாக யாரும் எடுக்காமல் பாதுகாக்கிறது. ஒரு முழு போல்டரையே என்கிரிப்ட் பண்ணி கடவுச்சொல் குடுத்து பாதுகாக்கலாம். அல்லது முழுதாக பார்வையிலிருந்து மறைத்துவிடலாம். முக்கியமாக வேறு கணனியில் இணைத்தால் கூட இந்த கோப்புகளை சரியான கடவுச்சொல்லால் மட்டுமே பார்க்கலாம். அதற்கு இதே மென்பொருளை அக்கணனியில் நிறுவி இதே கடவுச்சொல்லை தரவேண்டும்.

IDM – Internet Download Manager

மிகவும் வசதியான இணைய தரவிறக்கி. Streaming links, You tube, என எதுவாயினும் தரவிறக்கலாம்.

Kaspersky Antivirus

இதைப்பற்றியும் அறிமுகம் தேவையில்லை. எனது மிகவிருப்ப அன்டிவைரஸ். கிட்டத்தட்ட 2 வருடங்களாக. அதற்கு முன்னர் 3 வருடங்களாக பண்டாவை பயன்படுத்தினேன்.

Krypton Suit

.Net  Desktop Application develop பண்ணுவதற்கு இந்த மென்பொருளை பயன்படுத்துகிறேன். Office 2007 போன்ற முகப்பைப்பெற்றுக்கொள்ள இது உதவும். பணன்படுத்தவும் மிக எழிது

Dream Viewer

இணையப்பக்க வடிவமைப்பிற்கு எத்தனையோ  மென்பொருட்கள் இருந்தாலும் இது மாதிரி எதுவும் இல்லை.

MS Visual Studio 2005 / 2008

அதிகமாக டெக்ஸ்டாப் மென்பொருள் உருவாக்கத்திற்கு இந்த மென்பொருள்தான் கண்கண்ட தெய்வம். மைக்றோசாப்ட் வெளியீடு.

MS Office 2007

இதைப்பற்றியும் எந்த அறிமுகமும் தேவையில்லையென நினைக்கிறேன்.

MS SQL Server 2005

Database பணிகளுக்கு இந்த சர்வரினை பயன்படுத்தி வருகிறேன். ஆனாலும் இப்போது Postgre SQL தான் பிடித்திருக்கிறது. விண்டோசில் மாத்திரமே வேலைசெய்யுமென்பது இதன் குறை.

Mono for Windows

.Net ல் உருவாக்கிய விண்டோஸ் மென்பொருட்களை லினக்ஸ் தளத்தில் வேலைசெய்யக்கூடியவாறு மாற்ற இது பயன்படும். பாவிக்க சற்று கடினமாயிருக்கும்.

NetBeans

ஜாவா மொழி பயன்பாட்டுக்காகவே இதை பயன்படுத்தவேன். ஆனால் இம்மொழியில் அவ்வளவு பரிச்சயமில்லை.

NHM Writer

தமிழில் எழுத இதுவல்லாமல் என்னால் முடியாது.

NSS

Nokia  and SonyEricson  மொபைலில் Life Time இனை பூச்சியமாக்க பயன்படுத்துவதுண்டு. பயன்படுத்தும் முறை பற்றி நிச்சயம் ஒரு பதிவு போடுவேன்.

Packet Tracer

Cisco Lab பயிற்சிகளை பெறுவதற்கு இந்த மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறேன். இப்போது டைனோபிஸ் இற்கு மாறிவிட்டேன். ஆனாலும் பிடித்த்து இம்மென்பொருள்தான்.

Power ISO

போலி இறுவட்டு மென்டபொருள்( ???? ) Virtual CD யாக எந்த ISO வையும் பயன்படுத்த. VM Ware போன்ற மெனடபொருட்களில் சர்வர்2008 பொன்றவற்றை நிறுவ இதுதான் உதவும். Demon Tools இனையும் இதற்காகவே பயன்படுத்துகிறேன்.

Tune Up Utilities 2008

கணனியியை சரியாக பராமரிக்கும் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. Registry சிக்கல்கள் போன்றவற்றிடமிருந்து விடுதலை.

V Buzzer Messanger

VoIP அழைப்பினை ஏற்படுத்த இந்த மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறேன். Skypee இனை விட செலவு குறைவானது. இடையிடையே Voice Cheap ஐயும் பயன்படுத்துவேன். வாடிக்கையாளர்களுடன் பேச இது இலகு. சில சமயம் கட்டணமின்றி இலவசமாகவே பேசலாம்.

VLC Media Player

டொரண்டில் இறங்கிக்கொண்டிருக்கும் வீடியோ கோப்புகளை முழுதாக இறங்கி முடியுமுன்னரே பார்க்கலாம். போர்டபிளாகவும் கிடைக்கிறது.

Wamp Server

பிச்பி கோப்புகளை இணையத்தில் பதிவேற்ற முன்னர் வெள்ளோட்டம் பார்க்க இந்த சர்வரைத்தான் பயன்படுத்துகிறேன்.

VM ware

பல இயங்குதளங்களை ஒரே நேரத்தில் இயங்கவிட்டு பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்துபார்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவிடும். சர்வர் 2008 பதிவுகள் தர முக்கிறகாரணமே இந்த மென்டபொருள்தான்.

HHD Hex Editor

பல கோப்புகளை உள்ளே கட்டுமானம் எப்படியிருக்கிறதென பார்ப்பதற்கு இதை பயன்படுத்துவேன். மற்றும் security களை உடைக்கவும் கற்றுக்கொள்ளவும் இது பேருதவி புரியும்.

Active Partition Recovery

இம்மென்பொருளிற்கு வாழ்நாள் முளுவதும் நன்றியுடையவனாக இருப்பேன். எப்படித்தான் வன்தட்டை துவம்சம் செய்தாலும் எவ்வளவு முடியுமோ இவ்வளவு தகவல்களையும் மீட்டுத் தந்துவிடும்.

uTorrent

இதுக்கு ஒரு விளக்கம் தேவையா என்ன ??????

Aircrack-2.3

Wireless Network களில் WIFI  WEP மற்றும் WAP Key களை சுட்டுத்தர உதவும்.

CommView

WiFi வலைப்பின்னல்களை அறிய உதவும் மென்பொருள்

Oli Debuger

Reverse Engineering படிக்கவும் செயற்படுத்தவும் பயனுள்ள மென்பொருள். அன்டிவைரசிடமிருந்து நாம் உருவாக்கும் ட்ரோஜான்கள் மாட்டிவிடாமலிருக்க இதனை பாவித்துதான் ஹெடர் பைல்களை எடிட் செய்யலாம். இதன் பயன்பாடுகள் பல.

ம்ம்ம்ம்ம்ம்ம்மற்றும் இன்னும் பல…….. அவ்வப்போது அப்டேட் பண்ணுவேன்.

முக்கியமாக லினக்சில் மற்றும் மொபைலில் பயன்படுத்தும் மென்பொருட்கள் பட்டியலையும் விரைவில் தருகிறேன்.

——————

இத்தெடரை தெடர இவர்களை அழைக்கிறேன்.

தமிழ்நெஞ்சம் அவர்கள் – பதிவுலக கணனிச்சிங்கம். நேரம் கிடைத்து பதிவிட்டால் பல பிரயோசனமான லிஸ்ட் கிடைக்கும்.

கூடுதுறை அவர்கள் – திரும்பி கேள்வியெல்லாம் கேட்ட முடியாதென்பது முதல் றூள்ஸ்ஸாக்கும்!!! 🙂

மோகன் அவர்கள் -இவரது ஆங்கிலப்பதிவில் லினக்ஸ் பற்றி சொல்லியிருக்கிறார்

அணிமா அவர்கள் – நைஜீரியாவில் எந்த மென்பொருட்களை பயன்படுத்துகிறார்களென பார்க்கலாம்!!! 🙂 கும்மிக்கு விசேட மென்பொருள் இருக்கா??? ஹிஹி

கணித்துளி அமிர்தராஜ் அவர்கள் – கணனி பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.

விஷ்னு அவர்கள் – உங்கள் கவிதைகள் போல நாங்களும் எழுத மென்பொருள் இருக்குமா?

இதை வாசிக்கும் நீங்கள் – கட்டாயமாக இந்த தொடர் வெற்றியளிக்க உதவுங்கள். எத்தனையோ ஜிஜிபி தொடர்களுக்கு ஆதரவளித்த நீங்கள் இப்படியொரு ஆக்கபூர்வமான தொடருக்கும் ஆதரவளிப்பீர்களென கினைக்கிறேன். தெரிந்தது சில. தெரியாதது பல. கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் அழைப்பு வேண்டுமா என்ன ?

பதிவிட்டவர்கள் பதிவு சுட்டியினை தயவுசெய்து பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

மிக்க நன்றி.

Posted in தகவல் தொழில்நுட்பம், தொடர் பதிவு | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | 39 Comments »

Windows Server 2008 – BitLocker மறைக்குறியீடாக்கம்

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 25, 2008

BitLocker Drive Encryption எனும் அம்சமானது ஒரு Drive ஐயே முழுவதுமாக encrypt பண்ண வசதியளிக்கிறது. இது விண்டோசுடனேயே வரும் ஒரு உள்ளிணைந்த வசதியாகும். ஆரம்பத்தில் விண்டோஸ் விஸ்டா Ultimate and Enterprise பதிப்புகளில் மட்டும் வந்த இந்த வசதி இப்போது சர்வர் 2008இன் எல்லா பதிப்புகளிலும் வருகிறது.

Windows Server 2008 இன் எந்தப்பதிப்பில் எம்மாதிரியாக வன்பொருள் ஒத்திசைவுள்ளதென்பதை பொறுத்து BitLocker இன் தொழிற்பாடுகளின் எண்ணிக்கை இருக்கும். ( Number of Functions )

அடிப்படையில் BitLocker ஆனது முழு வன்தட்டையுமே என்கிரிப்ட் செய்துவிடுவதனால் உங்கள் கணனியிலிருக்கும் வன்தட்டை பிற கணனியில் இணைத்தோ அல்லது வன்தட்டு நகலெடுக்கும் சாதனங்கள் மூலமாகவோ அணுகமுடியாது.

இதேபோன்று சந்தையில் பல மென்பொருட்கள் இருக்கின்றபோது இதனில் மட்டும் அப்படியென்ன புதுமையை மைக்ரோசாப்ட் செய்திருக்கிறதென பார்த்தால், இந்த மென்பொருள் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள வன்தட்டையும் என்கிரிப்ட் செய்யப்பட்டதாகவே வைத்திருக்கிறது. மற்றய எந்த மென்பொருட்களிலும் இயங்குதளம் நிறுவப்பட்ட வன்தட்டு பாகத்தை என்கிரிப்ட் செய்ய முடியாது. என்கிரிப்ட் செய்யப்பட்ட வன்தட்டு பாகத்தில் இயங்குதளத்தை நிறுவவும் முடியாது. ஆனால் விண்டோஸ் சர்வர் 2008 உடன் உள்ளிணைந்த வசதியாகவரும் BitLocker  மூலமாக இவையனைத்தும் சாத்தியமாகிறது.

மேலும், BitLocker இனை நிறுவி இயக்க முற்படும்போது என்கிரிப்ட் பண்ண மிக மிக முக்கியமான கீயை (Encrypt Key ) USB Drive ஒன்றில் சேமித்துவிடுகிறது. ஒவ்வொரு தடவை விண்டோஸ் பூட் ஆகும்போதும் அந்த USB Drive இனை கணனியில் இணைக்கவேண்டும். இது பாஸ்வேர்ட் முறையைவிட பாதுகாப்பு அதிகமானது. ( லாகின் கடவுச்சொற்களை மாற்றும் அல்லது செயலிழக்கச்செய்யும் மென்பொருட்கள் நிறைய இணையத்தில் கிடைப்பதனால் இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகும். )

BitLocker  ற்கு தேவையானவை

–          குறைந்த்து 1.5Gb வன்தட்டில் இடம்

–          கணனி BIOS ஆனது கணனியை ரீபூட் செய்யும்போது RAM நினைவகத்திலுள்ள தகவல்களனைத்தையும் முற்றுமுழுதாக நீக்கக்கூடியதாகவிருக்கவேண்டும்.

BitLocker இன் முழுமையான பயன்பாடுகளை பெற மேலதிகமாக தேவைப்படுபவை –

–          கணனி BIOS ஆனது Trusted Platform Module (TPM) எனும் தரமுறையை ஏற்பதாக இருக்க வேண்டும்.

–          Trusted Computing Group BIOS

–          (http://en.wikipedia.org/wiki/Trusted_Platform_Module)

BitLocker இனை செயற்படுத்துதல்

Start மெனுவில் Server manager இனை செயற்படுத்தவும்.

இடப்பக்கத்தில் வரும் சாளரபக்கத்தில் Features என்பதனை தெரிவுசெய்யவும். இப்போது என்னென்ன வசதிகள் உள்ளன. எவற்றையெல்லாம் நிறுவியிருக்கிறோம் என்பதனை காணலாம். தற்போது எந்த வசதியும் நிறுவப்படவில்லையெனில் படத்தில் காட்டியவாறு காணப்படும்.

படம் 1

அடுத்து BitLocker இனை நிறுவுவதற்கு Add New Features என்பதனை சொடுக்கவும். இப்போது கீழே படத்தில் வருவது போன்று New Features Wizard தோன்றும்.

படம் 2

BitLocker Drive Encryption என்பதனை தெரிவுசெய்து Next பட்டனை அழுத்தி தொடரவும். அடுத்து வரும் சாரளங்களினை கடந்து நிறுவுதல் கட்டத்திற்கு வந்து நிறுவுதல் பணியினை தொடரவும்.

இயங்குதள இயக்கம் மற்றும் கணனியின் செயற்றிறன் போன்றவற்றில் இதன் வேகம் தங்கியுள்ளது. என்னவென்ன வேலைகள் நடக்கிறதென Process screen மூலமாக நாம் அறியலாம்.

முழுவதுமாக நிறுவுதல் முடிந்தபின்னர் கணனியை reboot செய்தாக வேண்டும்.

மீண்டும் கணனி செயற்பட்டதும் Add Features Wizard ஆனது நிறுவுதல் மடிந்த்து பற்றிய செய்தியினை அறிவிக்கும். இனி இந்த சாளரத்தை மூடிவிடலாம்.

மறைக்குறியீடாக்கத்திற்காக வன்தட்டு பிரிவினைகளை உருவாக்குதல்
(Creating Partitions for Drive Encryption 🙂 )

BitLocker Drive Encryption ற்கு இரண்டு வன்தட்டு பிரிவினைகள் வேண்டும். ஒன்று கணனியின் Boot கோப்புகளைக்கொண்ட Encrypt செய்யப்படாத பாகம்(system volume). மற்றயது இயங்குதள கோப்புகள் மற்றும் பயனர் கோப்புகள். system volume ற்கு குறைந்தது 1.5 GB யாவது தேவை. இதற்கான இடத்தை மற்றய வன்தட்டு பிரிவினைகளிலிருந்தோ அல்லது முதன்மை பிரிவினையிலிருந்தோ விண்டோஸ் தானாகவே பெற்றுக்கொள்ளும். அல்லது BOOT கோப்புகள் வன்தட்டில் Encrypt செய்யப்படாத பாகம் ஏதோவொன்றில் சேமிக்கப்படும்.

இந்த முறை சற்று கடினமாகவோ அல்லது நம்பிக்கையில்லாமலோ இருக்குமாயின் மைக்ரோசாப்ட் நிறுவன இணையத்தளத்தில் இதற்கென பிரத்தியோகமாயுள்ள BitLocker Driver Preparation Tool எனும் கோப்பை தரவிறக்கி நிறுவலாம். நிறுவியதும் Start->Accessories->System Tools->BitLocker->BitLocker Drive Preparation Tool இலிருந்து இக்கலாம். இந்த மென்பொருளானது graphical Interface மற்றும் Command Line Interface என இரண்டிலும் செயல்படுமாறு வருகிறது.

graphical Interface  இலகுவாக பார்த்த்தும் புரிந்துகொள்ளக்கூடியவாறு இருக்கும். ஆகவே நாம் முந்தய பதிவினில் பார்த்த command-line ல் சற்று விளையாடலாம்.

command-line இனில் உள்ள கட்டளைகளை நிரற்படுத்த -? எனும் குறியீட்டை உபயோகிக்கலாம்.

உதாரணம்-

bdehdcfg -?

ஏற்கனவேயுள்ள வன்தட்டு பிரிவினைகளின் configuration இனை அறிந்துகொள்ள BdeHdCfg.exe இனை -driveinfo எனும் கட்டளையுடன் இணைத்து செயற்படுத்தலாம்.

உதாரணம்-

bdehdcfg -driveinfo

முடிவு-

bdehdcfg -driveinfo
BitLocker Drive Preparation Tool
Copyright (C) 2006-2007 Microsoft Corporation.

Initializing, please wait…

VALID TARGETS  SIZE (MB)     COMMANDS      MAX SHRINK  TARGET DETAILS
————-  ———  ————  ———-  —————–
C:                            16381    shrink                      8140   Vista OS

என வரும்.

விளக்கம்-
-C Drive ற்கு உள்ள ஒரேயொரு கட்டளைத்தெரிவு  “shrink” என்பதே.
-மற்றும் ஆகக்கூடியளவு தெரிவுசெய்யப்படக்கூடிய வன்தட்டு இடம்.
(அதாவது shrink the C: volume and the maximum amount by which it may be shrunk )

அடுத்து இனி, 1.5Gb அளவான unallocated space இனை ‘S:’ எனும் Drive Letter மூலம் குறிக்கும்படியாக கீழ்க்கண்ணவாறு கட்டளை தரவும்.

bdehdcfg -target unallocated -newdriveletter s: -size 1500

அல்லாதுவிடில், ஏற்கனவேயுள்ள drive volume மிலிருந்தும் இந்த பிரிவினையை உருவாக்கலாம். ஆனால் எனது வன்தட்டில் ஒரேயொரு பிரிவினைமாத்திரம் இருப்பதனால் அதை முயன்றுபார்க்க முடியவில்லை. ஆகவே மீண்டும் C: யையே பார்க்கலாம்.

C: Drive இலிருந்துதான் 1.5GB இடம் பெறப்படவேண்டுமென நாம் நினைத்தால் அதற்கான கட்டளையை இப்படி தரவேண்டும்.

bdehdcfg -target c: shrink -newdriveletter s: -size 1500

இப்போது C: Drive யிருந்து 1.5 GB அளவுள்ள S: Partition உருவாக்கப்பட்டுவிடும்.

முடிவு-

bdehdcfg -target c: shrink -newdriveletter s: -size 1500
BitLocker Drive Preparation Tool
Copyright (C) 2006-2007 Microsoft Corporation.

Initializing, please wait…

New active drive S: will be created from 1500 MB of free space on drive C:
Do you want to continue? (Y/N):

Shrinking drive C: – Done.

Creating new active drive S: – Done.

Preparing drive for BitLocker – Done.

You must restart your computer to apply these changes.

Before restarting, save any open files and close all programs.

மிக முக்கியமாக நாம் எந்த வன்தட்டு பிரிவினையை தெரிவுசெய்கிறோமோ அந்த பிரிவினையில் 1.5GB இடம் எடுக்கப்பட்ட பின்னர் கண்டிப்பாக 10% மீதியிடம் இருக்கவேண்டும். அல்லாதுவிடில் இந்த பிரிவினையிலிருந்து இடத்தைப்பெற முடியாது.

இறுதியாக, BOOT கோப்புகள் வேறு ஒரு Drive ல் இருக்குமானால் அந்த Drive ஆனது Active Partition ஆக இருக்கவேண்டும். அபோதுதான் கணனி இயங்கத்துவங்கியதும் தானாக அங்கு சென்று இயங்குதளம் பற்றிய தகவல்களை பெற்று விண்டோசை இயக்கமுடியும்.

அதற்கு – உதாரணமாக D: Drive ல் அக்கோப்புகளை வைத்து செய்வதற்கு –

bdehdcfg -target d: merge

இந்த System Volume உருவாக்கப்பட்டபின்னர் அவை நடைமுறைக்கு வர கண்டிப்பாக restart பண்ணவேண்டும்.

BitLocker Drive Encryption  இனை இயக்க.

system volume உருவாக்கப்பட்ட கணனியும் மீளஇயங்கத்துவங்கியதும் இனி அடுத்தபடியாக BitLocker இனை இயக்கத்திற்கு கொண்டுவரவேண்டும். Start->Control Panel ற்குச்சென்று BitLocker control panel இனை இயக்கவேண்டும். இதன் சாளரம் கீழே படத்தில் காட்டியவாறு இருக்கும்.

படம் 3

உங்கள் கணனி BIOS ஆனது TPM முறைமைக்கு ஆதரவாயிருந்தால் encryption இனை செயற்படுத்த வன்தட்டு பிரிவினைகளின் பட்டியல் இருக்கும். இங்கு ஒரேயொரு வன்தட்டென்பதனால் C: மட்டும் இருக்கும்.

கணனி BIOS ஆனது TPM முறைமைக்கு ஆதரவாயில்லாவிட்டால் கீழே உள்ளவாறு பிழைச்செய்தி காண்பிக்கப்படும்.

A TPM was not found. A TPM is required to turn on BitLocker. If your computer has a TPM, then contact the computer manufacturer for a BitLocker-compatible BIOS.

சிலசமயம் கணனி BIOS இனில் TPM முறைமை ஆனது Disabled ஆகவிருக்கலாம். அப்படியாயின் அதனை Enable செய்யவேண்டும்.

TPM முறைமை இல்லாதுவிடில் அடுத்த முறையை முயற்சிக்கலாம்.

Group Policy இனில் சில மாற்றங்கள்.

BitLocker ற்கான group policy setting குகளை Local Group Policy மூலமாகவோ இல்லது Active Directory Group Policy மூலமாகவோ மாற்றியமைக்கலாம். இந்த policy setting குகள் TPM இல்லாமலேயே BitLocker இனை பயன்படுத்த அனுமதிக்கின்றன. அத்துடன் TPM இருந்தாலும் இந்த policy settingகுகளை நாம் பயன்படுத்தலாம்.

Local Computer Policy க்கான BitLocker policy setting குகளை எப்படி பண்ணலாமென பார்ப்போம். Local Group Policy Editor இனை துவங்க Start menuவில் உள்ள Search text box இனில் gpedit.msc உன தட்டச்சு செய்யவும். Local Group Policy Editor இயங்கத்துவங்கும். அதில் Local Computer Policy -> Computer Configuration -> Administrative Templates -> Windows Components -> BitLocker Drive Encryption எனும் தடத்தில் செல்வதன் மூலமாக BitLocker settings இனை துவக்கவும். வரும் சாளரத்தில் Control Panel Setup: Enable Advanced startup options என்பதனை இரட்டைச்சொடுக்கு செய்வதன் மூலம் கீழேயுள்ள சாளரத்தை பெறலாம்.

படம் 4

TPM இல்லாமல் BitLocker இனை துவங்க Enabled என்பதனை தெரிவுசெய்து அதன் கீழேயுள்ள Allow BitLocker without Compatible TPM என்பதனையும் தெரிவு செய்ய வேண்டும்.

உங்களிடம் TPM முறைமைக்கு ஆதரவிருந்தால் TPM startup keys அல்லது startup PIN இனை உருவாக்குதல் பற்றிய setting குகள் இருக்கும். முக்கியமாக TPM startup keys மற்றும் startup PIN ஆகிய இரண்டும் ஒன்றிற்கொன்று எந்தத்தெடர்பும் அற்றவை.

Encryption உம் Keys  உருவாக்கமும்.

தேவைப்பட்ட சகல தேவைகளை பூர்த்திசெய்துவிட்டால் நாம் encryption செய்ய துவங்கலாம். BitLocker control panel இனை மேலே ஆரம்பத்தில் கூறியவாறு இயக்க வரும் சாளரத்தில் Turn on BitLocker எனும் லிங்க் மீது சொடுக்கவும்.

அப்போது இந்த BitLocker செயற்பாடானது “உங்களின் கணனி இயக்கவேகத்தை பாதிக்கும்” என வரும் ஓர் எச்சரிக்கைச்செய்தி வரும். அதைத்தொடர்ந்து Set BitLocker startup preferences எனும் பக்கத்திற்கு வரும். இங்கு நமது கணனி TPM முறைமைக்கு ஆதரவா இல்லையாவென்பதைப்பற்றிய தகவல் இருக்கும்.

போலி இயங்குதள மென்பொருள் மூலம் ( VM Ware / Virtual PC / Virtual Box ) சர்வர் 2008 இனை நிறுவியிருப்பதனால் எனக்கு TPM முறைமைக்கு ஆதரவில்லை. எனவே TPM முறைமைக்கு ஆதரவில்லாத கணனிக்குரிய படிமுறைகளையே படங்கள் காட்டுகிறது. மற்றும் USB startup key முறையை மட்டும் இங்கு படங்கள் மூலம் செயற்படுத்திக்காட்டுகிறேன்.

TPM முறைமையுள்ள கணனிகளில் எந்த வித்தியாசமும் வராதெனவே தோன்றுகிறது. சில படிமுறைகள் அதில் இல்லாமல் இன்னும் இலகுவாகவிருக்குமெனவே எண்ணுகிறேன்.

படம் 5

USB startup key முறையை தெரிவுசெய்ய அடுத்த பக்கம் வரும். USB memory device இனை செருகச்சொல்லி கேட்டதும் அதை செருகிவிடுங்கள். சாதாரணமாக சந்தையில் 128MB USB Drive கள் மிக மிக மலிவாக கிடைக்கும். Save என்பதனை அழுத்துவதன் மூலம் Key ஆனது USB memory device இனில் சேமிக்கப்பட்டுவிடும். இங்கு நீங்கள் ஆரம்பத்தில் USB memory device இனை எந்த USB Port ல் செருகினீர்களோ தொடர்ந்தும் கணனியை இயக்க அதே Port இனை மட்டும் உபயோகியுங்கள். முக்கியமாக இதற்கு USB Hubகளை உபயோகிக்க வேண்டாம்.

அடுத்து recovery key இனை சேமிக்கும்படி வரும். கண்டிப்பாக இந்த படிமுறை மிக முக்கியமானது.

படம் 6

recovery password இனை நீங்கள் முன்னர் பாவித்த அதே USB Drive இனில் சேமிக்க வேண்டாம். அந்த டிரைவிற்கு ஏதாவதானால்தான் இந்த recovery password. ஆகவே இதனை வேறொரு சேமிப்பகத்தில் சேமித்து வைத்துவிடுங்கள். மற்றும் ஒவ்வொரு தடவை இந்த USB Drive இனை செலுத்தி கணனியை ஆரம்பிக்கும்போதும் கணனியானது USB Drive இலுள்ள Key இனை மாற்றிவிடுகிறது. எனவே கணனியை முறையாக அணைக்கவில்லையாயின் இந்த USB Drive மூலம் மறுபடி Boot செய்ய இயலாது. இதற்காகத்தான் இந்த recovery password. மற்றும் Key உள்ள USB Drive இனை பாதுகாப்பிற்கு BackUp எடுக்கும் எண்ணம் இருந்தாலும் அதுவும் உதவாது காரணம் மேலே கூறியதுதான்.

recovery password இனை சேமித்ததும் இறுதிப்பக்கத்திற்கு செல்லலாம். Run BitLocker system check எனும் செயல் தெரிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டு Continue என்பதை சொடுக்கி நாம் இவ்வளவு நேரம் பார்த்த BitLocker encryptionஇனை கோலாகலமாக ஆரம்பிக்கலாம். கணனியானது ஒருமுறை ReBoot செய்து தானாகவே இச்செயற்பாட்டை துவங்கும். எவ்வளவு தூரம் வேலை நடந்துகொண்டிருக்கிறதென்பதை வரைபு மூலமாக பார்க்கலாம். எல்லாம் முடிந்து அடுத்த தடவை கணனி செயற்பட ஆரம்பிக்கும்போது USB Drive இனை கேட்கும். ( அல்லது தெரிவு செய்யப்பட்ட வேறு ஏதாவது வரைமுறையை கேட்கும் உதா – PIN )

BitLocker Drive Encryption இனை செயலிழக்கச்செய்தல்.

இதனை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தி வைக்கலாம்.

தற்காலிகமாக நிறுத்தி வைக்க –

Start -> Control Panel -> Security -> BitLocker Drive Encryption ற்குச் சென்று Manage BitLocker Keys என்பதனை சொடுக்கவும். Turn off BitLocker Drive Encryption என்பதை தெரிவு செய்து தொடர்ந்து வரும் படிமுறைகளை செயற்படுத்துவதன் மூலம் செய்யலாம்.

நிரந்தரமாக நிறுத்த-

Decrypt the volume எனும் ஆப்சனை செயற்படுத்தலாம்.

ஆக்கம்- பா.ஆ.சுபாஷ்

——————————————————————-

டிஸ்கிs-

அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.

தமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும்  உதவியாகவிருக்கும். நன்றி.

ஊசாத்துணை-

http://en.wikipedia.org/wiki/BitLocker_Drive_Encryption

http://technet.microsoft.com/en-us/windows/aa905065.aspx

( Please Check this link )
http://technet2.microsoft.com/WindowsVista/en/library/c61f2a12-8ae6-4957-b031-97b4d762cf311033.mspx?mfr=true

படங்கள்-

==========================================================

இனி வரவிருக்கும் பதிவுகள். ( Draft ல் பாதி தட்டச்சு செய்தவாறு உள்ளவை. மிக விரைவில் முடித்துவிடுவேன் )

– Windows Server 2008 இனில் Remote Desktop Administration

– Windows Server 2008 இனில் GPT மற்றும் MBR வன்தட்டு பொறிமுறைகள் (3 பாகங்கள் 😦 😦  )

– Windows Server 2008 இனில் RAID செயலாக்கம் ( 3 பாகங்கள் 😦 😦  )

– Windows Server 2008 இனில் Terminal Services

இன்னும் Windows Server 2008 ற்காக கிட்டத்தட்ட 30-35 பதிவுகள் வரை வருமென நினைக்கிறேன் ( எனக்குத்தெரிந்த விடயங்களை மட்டும் கணக்கில் எடுத்தால். படிக்க படிக்க எவ்வளவு வருமென தெரியாது ). அத்தனையையும் டைப் செய்வதில் கிழவனானாலும் ஆகலாம் !!!

மற்றும் Wireless Network, Linux பற்றி ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கும் 3 பதிவுகளும் Draft ல் இருக்கு. இதையெல்லாம் நினைத்தால் பதிவு பக்கம் வரவே கண்ணைக்கட்ர மாதிரி இருக்கு !!!

மீண்டும் சந்திக்கிறேன்.

Posted in தகவல் தொழில்நுட்பம், விண்டோஸ் சர்வர் 2008 | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 9 Comments »