சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘கூகிள்’

கூகிளின் Android இயங்குதள SDK 1.0

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 25, 2008

கூகுள் நிறுவனம் செல்லிடப்பேசிகளுக்கென பிரத்தியோகமான இயங்குதளத்தை அறிமுகம் செய்து வைத்தது. Android என பெயரிடப்பட்ட இந்த இயங்குதளம் Microsoft Windows Mobile இயங்குதளத்திற்கும் Apple iPhone Mac X இயங்குதளத்திற்கும் பெரும் சவாலாக இருக்குமென கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு. அடிப்படை கட்டமைப்பிலும்சரி மென்பொருள் கட்டமைப்பிலும் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு.

ஒரு மாதத்திற்கு முன்னர் கூகிள் Android க்கான SDK 0.9 வெளியிடப்பட்டு மென்பொருள் உருவாக்க போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசு US $275000, 2ம் பரிசு US $100000. முதல் பரிசு 20 பேருக்கும் 2ம் பரிசு 40 பேருக்கும் அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற மென்பொருள் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

இப்போது SDK 1.0 முழுப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Java மொழி மூலமாக மென்பொருளை உருவாக்கவேண்டும். தற்போது Java மொழிக்கு மட்டுமே ஆதரவு. விரைவில் C/C++ மொழிகளுக்கும் ஆதரவு தரும்படி SDK வெளியிடப்படும். இதற்கான சகல உதவிகளும் Android community மூலம் பெறலாம். இதற்கு Android செல்லிடப்பேசி அவசியமில்லை. Software emulator மூலம் பரீட்சித்துப்பார்க்கலாம்.

உங்களிடம் Nokia N 810 Internet Tablet இருக்குமானால் நீங்களாகவே Androidஐ அதில் நிறுவி பார்க்கலாம். இதற்கான சகல உதவிகளும் இங்கேயுள்ளன மற்றும் இங்கேயும். மற்றய செல்லிடப்பேசிகளில் நாமாக நிறுவும் அனுமதியை கூகிள் அளிக்கவில்லை.

மற்றய இயங்குதளத்திற்கும் இதற்குமிடையிலான வித்தியாசங்களையும் இதன் சிறப்பம்சங்களையும் வைத்துப்பார்க்கும்மோது இது வெறும் செல்லிடப்பேசி இயங்குதளம் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சகல கணினி செயல்களையும் செய்யவல்ல ஓர் பணித்தளமாக இது விளங்கும் என்பதில் ஐயமில்லை.

முதல் ஆச்சரியம் இது அடிப்படையில் Linix Kernel ஐ அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் Motorola நிறுவனம்தான் Linux Mobile Version இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அத்திட்டம் வெற்றிபெறவில்லை. ஆனால் கூகிள் இந்த திட்டத்தை கையாண்ட விதத்திலும் வியாபாரப்படுத்திய விதத்திலும் பெருவெற்றிபெற்றுள்ளது.

அடுத்து இவ்வியங்குதளம் 2D மற்றும் 3DGraphics க்கு OpenGL ES 1.0 ன் வரையறைக்கு ஏற்றாற்போலவும் OpenGL ESக்கு முழு ஆதரவு தருமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிதுல்லியமான படங்களும் Animation உம் சாத்தியம். விளையாட்டு வடிவமைப்பாளர்களுக்கு இது ஓர் கூடுதல் உற்சாகம்.

மற்றயது SQLlite எனும் Opensource தகவல்தள மென்பொருளானது இதனுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உருவாக்குபவர்கள் இதற்கு ஒத்திசைவாக இலகுவான மென்பொருட்களை உருவாக்கமுடியும். இது MySQL ன் கட்டமைப்பை ஒத்திருந்தாலும் இதைவிட வேகமானதும் அதிக தகவல்களை சிக்கலில்லாமல் கையாளக்கூடியது.

MPEG4, H.264, MP3, AAC, AMR, JPG, PNG, GIF போன்ற இன்றய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் Media Format களை ஆதரிக்கின்றது.

Bluetooth, EDGE, 3G, and WiFi போன்ற தெலைத்தொடர்பு தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கின்றது.

மொத்தத்தில் மற்றய போட்டியாளர்களான Windows Mobile Apple, iPhone Mac மற்றும் Symbion போன்றவர்களுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் கூகிளின் Android செயல்படும்.

இப்போது உத்தியோகபுர்வ வியாபார வெளியீடாக HTC நிறுவன PDA க்களில்  அமரிக்காவின் AT&T நிறுவனத்தில் வலையமைப்பில் உள்ள செல்லிடப்பேசிகளில் மட்டுமே கூகிளின் Android நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் மற்றய இடங்களிலும் இது விஸ்தரிக்கபடும்.

எப்படியோ, இவர்களின் போட்டி நமக்கு நன்மைதான்.

மேலும் உதவிகளுக்கு
http://androidcommunity.com/
http://www.talkandroid.com

Sunsung Android Plateform Mobile
http://www.itechnews.net/2008/02/20/samsung-google-branded-android-phone-coming/

மேலும் தமிழ்நெஞ்சம் அவர்களின் பதிவு.
http://tamizh2000.blogspot.com/2008/09/blog-post_8580.html

அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.

நன்றி
சுபாஷ்.

டிஸ்கி –
தவறுகளையும் தமிழ்ப்பிழைகளையும் உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் எழுத உதவியாகவிருக்கும். நன்றி.

இவர்களுக்கும் நன்றிகள்ஆங்கிலம்-தமிழ் அகராதி

Posted in அறிமுகம், செல்பேசி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 18 Comments »