சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Win XP – இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 16, 2009

இது ” எப்படி?” பதிவு போடும் சீசன் போலிருக்கு. அதான் நானும் ஜோதில ஐக்கியமாகலாமேனு ஒரு பதிவ போட்டேன். ( ஆக்சுவலி பதிவு பெயரைத்தான் மாற்றினேன் )

உங்களிடம் இருப்பது விண்டோஸ் XP எனில் இந்த முறையைப்பின்பற்றி உங்களின் இனைய இணைப்பின் வேகத்தை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம்.  முயன்று பார்த்து வித்தியாசமாகவிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே.

முதலில் அட்மினிஸ்ரேட்டர் அக்கவுண்ட் அல்லது அட்மினிஸ்ரேட்டருக்குரிய உரிமைகளனைத்துமிருக்கும் அக்கவுண்டில் நீங்க இருக்க வேண்டும்.

1. 1. Start – Run – type gpedit.msc

1

2. இடது பக்கத்தில் உள்ள Local Computer Policy என்பதை விரிவாக்கி கீழ்க்கண்ட ஒழுங்கில் செல்லவும்.
Administrative Templates / Network Branch வரை சென்று அங்கு QoS Packet Scheduler என்பதனை தெரிவு செய்யவும்.

3. பின்னர் வலது பக்கம் வரும் Limit reservable bandwidth என்பதனை இரட்டைச்சொடுக்கு மூலம் திறக்கவும்.

21

4. Setting tab இனில் Enable என்பதனை தெரிவு செய்யவும்.

5. Bandwidth limit % எனுமிடத்தில் 0 ( பூச்சியம்) என இட்டு OK பட்டனை அழுத்தவும்.

3

அவ்வளவுதான்.

XP யானது சாதாரணமாகவே இணைய இணைப்பில் சுமார் 20% இனை தனது தேவைக்கு ஒதுக்கி விடும்.  QoS இனை disable பண்ணியிருந்தாலும் இப்படித்தான் இருக்கும். QoS ஆனது நமது வீட்டுப்பாவனைக்கு  தேவையில்லாத ஒன்று. QoS பயன்படுத்தவில்லையெனில் XP யானது ஒதுக்கி வைத்த 20% த்தினை நாமாவது பயன்படுத்தலாம். அதற்குத்தான் இந்தப்பதிவு.  ஆனால் உங்களிடம் அதிவேக இணைய இணைப்பிருந்தால் இந்தப்பதிவில் சொல்லியபடி செய்தாலும் எந்த வித்தியாசமும் தெரியாது. டயல் அப் கனக்ஷன் வைத்திருப்பவர்களுக்கு வேகம் அதிகரிக்கும்.

உங்களுக்கும் வித்தியசம் தெரிகிறதாவென பின்னூட்டத்தில் சொல்லுங்க…

அன்புடன் சுபாஷ்.

Advertisements

11 பதில்கள் to “Win XP – இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?”

 1. அப்படியே விஸ்ட்டாவுக்கும் சொல்லிடுங்க..ப்ளீஸ்

 2. படம் காட்டிருக்கீங்க. சூப்பர் பாஸ். அப்படியே நான் காட்டிய படத்தையும் கொஞ்சம் பாருங்களேன். http://snipurl.com/g1vbd

 3. பெங்களூர் 2 சத்யம் சினிமாஸ், சென்னை

 4. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்.
  விஸ்டாவிற்கும் இதேபோலதான். வேறு மென்பொருளும் உபயோகிக்கலாமென படித்திருக்கிறேன். தேடிப்பிடித்து தந்துவிடுகிறேன்.

  இப்பதான் எங்க பதிவில் பின்னூட்டமிட்டு இங்கு வருகிறேன். நீங்க சொல்லும்வரையில் கூகிளின் இந்தச்சேவை பற்றி தெரியாது. வெளிநாட்லதான் இப்படியிருக்குனு நினைத்திருந்தேன். அமாபைல் போனுக்கு இதை வைத்து நிறைய அப்ளிகேசன் உருவாக்கலாம்.

  உங்க மினி லிங்கும் தான் 🙂

 5. ///தமிழ்நெஞ்சம் சொன்னார்
  ஏப்ரல் 17, 2009 இல் 2:14 மு.பகல்

  அப்படியே விஸ்ட்டாவுக்கும் சொல்லிடுங்க..ப்ளீஸ்////

  நானும் இதே கேள்வியை எனக்கும் கேட்க்கிறேன்…

 6. ஒரு நல்ல கும்மி பதிவு போடுமாறு அன்போடு( அருவாலோடு) அழைக்கிறேன்..

 7. mayooresan said

  நல்ல பதிவு. QOS எண்டா என்ன???

 8. சுபாஷ் said

  வாங்க மயு

  Quality of Service (QoS) எனப்படுவதென்னவெனில் நெட்வேர்க்கில் நெரிசலில்லாமல் வேகமாக தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் சில தொழில்நுட்பங்களின் தொகுப்பு. இதனுள் சில செட்வேர்க்கை கையாளும் protocols இருக்கின்றன. இவை சிஸ்கோவின் றவுட்டிய் protocols ( RIP. EIGRP, OSPF மாதிரி) போன்றவற்றுடன் விண்டோசை மிக இலகுவாக இசைவாக்கமடையச்செய்து வேகமான தகவல் மாற்றத்திற்கு உதவுகிறது.

 9. சுபாஷ் said

  தமிழ்நெஞ்சம், அணிமா,

  விஸ்டாவிற்கு டொரன்ட் மூலம் தரவிறக்கிய இம்மென்பொருளை பயன்படுத்துகிறேன்.
  இது ஒரே நேரத்தில் பேணக்கூடிய பரலல் கனெக்ஷன்களின் எண்ணிக்கையை அதிகூடிய பெறுமானத்திற்கு மாற்றிவிடும்.
  XP. vista and Win 7 க்கும் பாவிக்கலாம். அதை அப்படியே அப்லோட் செய்திருக்கேன்.

  சுட்டி நீக்கப்பட்டுவிட்டால் தெரிவிக்கவும்.

  http://rapidshare.com/files/224413719/Half-Open_Patch_-_For_Windows_VISTA__Windows_XP__Windows_7.zip.html
  MD5: 31D74EA7BEA2A012371B3EE165302F86

 10. முயற்சித்துப் பார்க்கிறேங்க….

 11. Subash said

  நன்றிகள் ஆதவா

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: