சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

 • ஏப்ரல் 2009
  தி செ பு விய வெ ஞா
  « பிப்   மே »
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  27282930  
 • Top Posts

 • Top Clicks

  • எதுவுமில்லை
 • Please Don’t Copy

  Page copy protected against web site content infringement by Copyscape
 • Blog Stats

  • 47,289 hits
 • உலகம் சிறியது

 • Advertisements

Dualboot: Vista நிறுவிய பின்னர் XP நிறுவுதல்

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 6, 2009

மி்க்க நாட்களிற்குப்பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

எனது கணினியில் நீண்ட காலமாக  Vista பாவித்து வருகிறேன். இது 32பிட் இயங்குதளம். எனது கணனி 64பிட் இனை பூரணமாக ஆதரிக்கவல்லது. ஆனாலும் விண்டோசை 32 பிட் ல்தான் பாவிப்பது வழமை. ஏனெனில் 64பிட்டிற்கு ஒத்திசைவான மென்பொருட்கள் கிடைப்பது அரிது. நேற்று x86 Visual Studio .net 2008 ல் x86 ற்கு எழுதப்பட்ட VC++ மென்பொருளை x64 விண்டோஸ் பணித்தளத்திற்கு ஒத்திசைவாக மீண்டும் compile பண்ணினேன். அதனை பரீட்சித்துப்பார்க்க நேற்று Windows XP x64 எனப்படும் 64 பிட் இயங்குதளத்தை தரவிறக்கியிருந்தேன். பிடித்தது சனி.

வழைமையாக Vista நிறுவிய பின்னர் XP நிறுவினால், XP ஆனது Vista வின் boot loader இனை மாற்றி தனது boot loder இனை வைத்துவிடும். இதனால் XP மட்டுமே boot ஆகும். அதனை சரி செய்து Vista வினையும் சேர்த்து dual boot பண்ண வேண்டுமெனில் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் EasyBCD எனும் மென்பொருளை பயன்படுத்தி bootloder இனை புதிதாக வடிவமைக்கவேண்டும். XP போல boot.ini கோப்பொன்றை உருவாக்குவதன் மூலம் விஸ்டாவை boot பண்ண முடியாது. ஏனெனில் Vista வில் boot.ini எனும் கோப்பில்லை. இதெல்லாம் தெரிந்து எல்லாவற்றிற்கும் ஆயத்தமாகவே Windows x64 இனை நிறுவினேன். ஆனால் என் கஷ்ட காலம், அம் மென்பொருள் 64 பிட் இனை ஆதரிக்கவில்லை.( எல்லாம் செய்து முடித்த பின்னர் தான் vistabootpro எனும் மென்பொருள் பற்றி அறியக்கிடைத்தது. அது 64 பிட்டிற்கும் ஆதரவளிக்கும் )

இலகுவான ஒரே வழி, மீண்டும் Vista DVD இன் மூலம் Repair பண்ணுவதுதான். இதனால் XP ன் Boot loader அழிக்கப்பட்டுவிடும். ஆனாலும் பின்னர் மேலே சொன்ன மென்பொருள் மூலம் XP க்கும் சேர்த்து boot loader இனை புதுப்பித்து Dual Boot ற்கு வழிசமைத்துவிடலாம். அத்துடன் உங்கள் Vista வை மறுபடியும் Activate பண்ணியாக வேண்டும்.

சரி, தப்பித்தவறி உங்களிடம் Vista DVD இல்லாவிட்டால் ???

1. நீங்கள் இரண்டாவதாக நிறுவியது 32/64 bit XP இனில் Vista Boot Pro எனும் இலவச மென்பொருளை நிறுவுங்கள்.

2. “System Bootloader” எனும் பகுதிக்கு செல்லவும்.

3. “Windows Vista Bootloader” அனை தெரிவு செய்யவும்.

4. பின்னர் “All Drives” என்பதனை தெரிவு செய்து விடுங்கள்.

அவ்வளவுதான்.

ஆனால் என் நேரம், இந்த மென்பொருள் பற்றி எந்தவொரு பதிலும்  XP x64 ல் இருந்து தேடியபோது கிடைக்கவேயில்லை. 😦 lol.

இம் மென்பொருள் மூலம் நீங்கள் எல்லா விண்டோஸ் XP, Vista & Seven பணித்தளங்களையும் திருத்திவிடலாம்.

இந்த மென்பொருட்கள் மற்றும் செயற்பாட்டு முறைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் பெற இங்கு செல்லவும். பல தளங்களில் துண்டு துண்டாக கிடைக்கும்  பல விடைகளும் இங்கு ஒரேயிடத்தில் பெற்றுக்கொள்ளலாம். மிகவும் அருமையான Forum.

மற்றும் உடனுக்குடன் உதவிகள் பல புரிந்த சில forums,

http://forums.techguy.org/49-operating-systems/
http://forums.techguy.org/windows-vista-7/597318-xp-wont-boot-after-vista.html

http://www.msfn.org/board/index.php?showtopic=100672

EasyBCD எனும் 32பிட் மென்பொருள் பற்றி சொல்லியிருந்தேன். ஆனாலும் இந்த மென்பொருளை விட பின்னர் கூறிய மென்பொருளானது பயன்படுத்த மிக இலகுவானது. ஆனாலும் ஒரு ஆபத்திற்கு அதையும் தெரிந்து வைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்.

நீங்க இப்படி வேறு இயங்குதளங்களை நிறுவ முன்னரே இந்த மென்பொருட்களை தரவிறக்கி சேமித்து வைத்துவிடுங்கள். மறக்காமல் செயன்முறை விளக்கத்தையும் அதே கோப்புடன் சேமித்துவிடுங்கள். பின்னர் உதவியாகவிருக்கும். ( எனது ஸ்டைல் )

சரி, லினக்ஸ் நிறுவியிருந்தால் ????

கவலையே விடுங்க, லினக்ஸ் புத்திசாலி. ஏற்கனவேயொரு இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கிறதென அதுவே கண்டுபிடித்துவிடும்.

டிஸ்கிs-

அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.

தமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும்  உதவியாகவிருக்கும். நன்றி.

அன்புடன் சுபாஷ்.

Advertisements

7 பதில்கள் to “Dualboot: Vista நிறுவிய பின்னர் XP நிறுவுதல்”

 1. வந்தோமா.. இல்லையா…!? 🙂 🙂

  ரொம்ப நாளா எழுதாம இன்னைக்கு எழுதறீங்களா..? தொடர வாழ்த்துகள்!!! 🙂

 2. இங்கே குறிப்பிட்டுள்ள தகவல்கள் மிக அருமை.

  ஒரே ஒரு விண்ணப்பம். சுட்டிகளைக் கொடுக்கும்போது active link ஆகத் தாருங்களேன்.

  நன்றியுடன்
  த.நெ.

 3. bmmaran said

  Windows 7 என்ன மாதிரி? Linux மாதிரி புத்திசாலியோ? நான் தொடர்ந்து Linux’ஐயே பாவித்து வருவதால், இப்படியான பிரச்சனைகளுக்குள் மாட்டுப் படுவதில்லை. நல்ல பதிவு, சிலவேளை எனக்கு பிற்காலத்தில் உதவும்… 😉

 4. இன்னாப்பா??
  இவ்ளோ நாள் கழிச்சி வந்துன்னுக்கீற??

 5. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹாலிவுட் பாலா.
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் அண்ணா.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்.
  மன்னிக்கவும். லிங்க் குடுக்க மறந்துட்டேன். இப்பவே சரி பண்ணிவிடுகிறேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி bmmaran
  //Windows 7 என்ன மாதிரி? Linux மாதிரி புத்திசாலியோ?//
  வர வர லினக்ஸ் பாவிக்கறவங்களுக்கு விண்டோஸ்னாலே குசும்பு பண்ண தானா வருது. ம்ம்ம் ஹிஹி
  புதிதாக வந்த விண்டோஸ் 7 உம் லினக்ஸ் இயங்குதளமிருப்பதை கண்டுபிடிக்காது. ஆகவே வழமைபோல dual boot எனில் விண்டோஸ் 7 ற்குப்பிறகு தான் லினக்ஸ் நிறுவ வேண்டும். மற்றும்படி வழமையாகவே புதிய பதிப்பு விண்டோஸ் இருக்கும் போது பழைய பதிப்பை dual boot ஆக நிறுவினால் பதிவினில் சொன்ன சிக்கல் வந்தே தீரும். ஏனெனில் பழைய பதிப்பிற்கு புதிய பதிப்பினில் என்ன மாதிரியான boot செயற்பாடு நடக்கிறதென தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே?? ஆனால் பழைய பதிப்பு நிறுவப்பட்ட பின்னர் புதிய பதிப்பை பயப்படாமல் நிறுவலாம். ( அப்பாடா விண்டெச காப்பாத்தியாச்சு )

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி உருப்புடாதது_அணிமா.
  தல!!!!!!!!!!!!!!!!!
  என்ன மட்டும் சொல்றீங்களே?? உங்களுக்கு என்ன ஆச்சு ?

 6. மாற்றியதற்கு நன்றி தல.

 7. சுபாஷ் said

  Welcome தல 🙂

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: