சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

சில Forums – 1

Posted by சுபாஷ் மேல் பிப்ரவரி 22, 2009

மிகமிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சில பல காரணங்களினால் பதிவு பக்கமே தலைவைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஆனாலும் நண்பர்களின் பதிவுகளை Feeds மூலம் பெற்று படித்துக்கொண்டுதானிருந்தேன். உலகத்தின் ஒரு மூலையில், விஷேடமாக இலங்கையில் உயிரோடு வாழ்ந்து வருவதை அத்தாட்சிப்படுத்த  ஒரு பதிவு போடலாமென இந்த பதிவு 🙂 . உண்மையில் 4 மாதங்களுக்கு முன்னர் எழுதி draft ல் இருந்ததை அப்படியே வெளியே விட்டிருக்கிறேன்.

பதிவிட ஆரம்பித்து 3 மாதங்களில் 15000 Hits கிடைத்தது. பிறகு வந்த 4 மாதங்களாக ஒரு பதிவும் இடவில்லை. பின்னுட்டங்களுக்கு பதிலும் இடைவில்லை. இந்த 4 மாதங்களில் வெறும் 2000 hits மாத்திரம்தான். அன்போடும் அக்கறையோடும் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நன்றிகள். நன்றிகள். நன்றிகள். நன்றிகள். நன்றிகள். நன்றிகள். நன்றிகள். நன்றிகள்!!!

சில வெப்சைட்டுகளைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன். எனக்கு கணனி வேலைகளில் அலுப்பாகவோ இல்லை சும்மா இருந்தால் அதிகமாக போவது சில Forum களுக்குத்தான். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த்தை பகிர்ந்து கொள்வார்கள். சந்தேகங்களை கேட்டுக்கொள்வார்கள். சில நாட்களிலேயே ஒரு குடும்பம் போல பழகிவிடுவார்கள். நன்றி சொல்வது வாழ்த்துச்சொல்வதென எல்லாம் இனிமையாக இருக்கும். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்னர் Forum மற்றும் Blog என்பவற்றைப்பற்றி தெரியாது. பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இது Forum கட்டமைப்பென தெரியாது. ஏதோ வெப்சைட் என்றுதான் பயன்படுத்தியிருக்கிறேன். பின்னர்தான் இவைபற்றி தெரிந்து கொண்டேன்.

சரி வழமையாக நான் சென்றுவரும் சில Forum களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

http://www.smarthackerz.com/forums இந்த forum ல் பல கணனி சிக்கல்களுக்கும் நெட்வேர்க் சிக்கல்களுக்கும் அத்துறை வல்லுனர்களாகவுள்ள உறுப்பினர்களிடம் கேட்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம். மற்றும் வன்பொருள் சிக்கல்களுக்கும் தீர்வு தருகிறார்கள். இவையாவும் Computer Zone ல் இருக்கும். கணனி விளையாட்டுப்பிரியர்களுக்கு இணையத்தில் இணைந்து பெரிய விளையாட்டுகளை விளையாட சர்வர்களின் அனுமதியையும் ஒரிஜினல் Product Key போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். இவை Game zone ல் கிடைக்கும்.

இதேபோல் டவுண்லோட் Zone, Adult Zone மற்றும் Satellite TV க்கும் ஒரு category வைத்திருக்கிறார்கள்.

அடுத்து http://www.worldwide-forum.be/forum/index.php எனும் Forum. இந்த தளத்தில் உறுப்பினரானதும் உங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை குடுத்துவைத்தால் எல்லாரும் வரவேற்பதுடன் நல்ல நட்பு வட்டம் சதுரம் போன்றவற்றையும் உருவாக்கிக்கொள்ளலாம். இந்த தளத்தில் அதிகம் பயன்படுத்துவது Download Zone தான். தேவையானவற்றை தேடி மினக்கடாமல் Request Zone ல் தேவையென குறிப்பிட்டால் உடனடி சுட்டி கிடைக்கும். அதிகபட்சமாக 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும். மற்றும் வெப் செக்ஷனில் இணையத்தள வடிவமைப்பிற்கான பல உதவி scripts கிடைக்கும்.

The Media Site எனும் Forum இப்போதுதான் பயன்படுத்த துவங்கியிருக்கிறேன். பல படங்கள் இருக்கின்றன. முக்கியமாக பழைய படங்கள். அப்பாவிடம் கேட்டு அவருக்கு பிடித்த்தை தரவிறக்கம் செய்யலாம். நேற்று அங்கிருந்து வாரணம் ஆயிரம் பாடல் 1140Khz ல் Encode பண்ணி torrent தந்திருந்த்தை கண்டு தரவிறக்கினேன். ஒரேயொரு புண்ணியவான் மட்டுமே ஸீட்ஸ் தருகிறார். எப்படியும் 2 நாள் பிடிக்குமென தெரிகிறது.

http://www.scienceforums.net/forum/ எனும் தளத்தில் பல விஞ்ஞான விடயங்களை தருகிறார்கள். அத்தனை பேரும் பெரிய மண்டைக்காய்கள். பௌதிகவியல், கணிதம், இசாயனவியல், உயிரியல், மருத்துவம் மற்றும் Amateur Science போன்றவற்றை பற்றிய விளக்கங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

அசைன்மன்டு மற்றும் புரொஜக்ட் என்பவற்றிற்கு உதவிகளும் பெறலாம். ஆனால் நேரடியாக விடைகளை தாருங்கள் என கேட்டால் ஒரு பயலுகளும் உதவ மாட்டார்கள். சொந்த அனுபவம்.

http://www.sitepoint.com/forums எனும் தளமானது இணையத்தள உருவாக்க ஆரம்ப மற்றும் இடைநிலை வல்லுனர்களுக்கு ஓர் வலதுகையாக தொழிற்படுகிறது. PHP, ASP, Ajax மற்றும் XML என எதையெடுத்தாலும் உடனுக்குடன் விளக்கம் தருவார்கள். Coding சம்பந்தமாக எந்தவித சந்தேகத்தையும் நிவர்த்தி செய்யலாம். கண்டிப்பாக புக்மார்க்கில் வைக்கவேண்டிய தளம்.

http://www.phpfreaks.com எனும் தளம். பெயருக்கேற்றவாறு PHP க்கே நேந்துவிட்ட தளம். எல்லாவிதமான PHP,SQL மற்றும் சர்வர் மேலாண்மை விடயங்களுக்கும் இங்கே வல்லுனர்கள் உண்டு. வேண்டுதல்களுக்கு பார்த்திருக்க உடனடி பதில்களை தருவார்கள். டெவலப்பர்கள் கண்டிப்பாக புக்மார்க்கில் வைக்கவேண்டிய இன்னொரு தளம்.

http://forums.devshed.com/ எனும் நான் மிக விரும்பும் தளமானது முழுக்க முழுக்க மென்பொருள் வல்லுனர்களுக்காகவே நேந்து விட்டிருக்கிறார்கள். டெவலப்பர்கள் கண்டிப்பாக புக்மார்க்கில் வைக்கவேண்டிய இன்னொரு தளம். இணைய வடிவமைப்பு மற்றும் Desktop Application சம்பந்தமாக அனைத்து வகையறா சந்தேகங்களையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

தொடரும்…

மீண்டும் சந்திக்கிறேன்.

அன்புடன் சுபாஷ்.

21 பதில்கள் to “சில Forums – 1”

 1. Sasidaran said

  Thanx buddy.

 2. Asfar said

  Thanks a lot for your introduciton about the forums. I too try to keep connection with them in future.

  have a nice day with regards..

 3. ராஜா said

  first forum doesn’t have any news that is a entertainment forum

 4. surya said

  நல்ல அறிமுகம்.

  நன்றிகள் பல..

  வாழ்த்துகள்.

 5. Subash said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Sasidaran

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Asfar

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜா.
  yep, thats an entertainment forum, U can get some online game server invitations.
  Net ல் டவுண்லோட் பண்ணும் pirated Games ஐ Server மூலம் Online ல் விளையாட முடியாது. அதற்குத்தான் அந்த தளத்தை பயன்படுத்துவேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிsurya

 6. Subash said

  @ Sasidaran, ராஜா,
  உங்க பதிவோட சுட்டியையும் சேர்த்து பின்னுட்டுங்க. மத்தவங்க மாதிரி ஒண்ணும் சொல்ல மாட்டேன்.
  வேர்ட்பிரஸ் ID மூலம் நீங்க லாகின் பண்ணா உங்க பெயர் மட்டும்தான் வரும். ஆகவே பின்னுட்டத்தில் உங்க பதிவு சுட்டியையும் சேத்து பதிந்துவிடுங்கள்.
  நன்றி.

 7. Subash,
  I am not getting the whole post in reader. I think this is something to do with the site setting. Is it intentional or will you be able to fix it?

 8. subhash said

  yen name la yaruppa athu . motha nallulaye arampichchaa?

 9. Kelvi.Net said

  உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

  கேள்வி. நெட்

 10. jeevanbennie said

  Give me the full address for ‘The media site’.

 11. Subash said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சந்தோஷ்
  RSS Feeds களில் முளு பதிவையும் பிரசுரிப்பதை நான்தான் பட்டுப்படுத்தியிருந்தேன். விளக்கப்படங்கள் காரணமாக விண்டோஸ் சர்வர் பதிவுகளிள் அளவு பெரியதென்பதனால் PDA கருவிகளின் மெமெரி பிரச்சனைகளுக்காக அவ்வாறு செய்திருந்தேன். பின்னுட்டங்களை செக் செய்யும்போது Memory buffer out என செய்தி வருகிறது. அதனால்தான் இந்த ஏற்பாடு. விரைவில் மறு ஏற்பாடு செய்துவிடுகிறேன் ( இ மெயிலில் முழு பதிவும் வருவது போல )
  —————————————-

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி subhash.
  நான் முதல் நாளா இல்லப்பா, பிறந்ததிலேர்ந்து இந்தப்பெயர்தான் பாவிக்கிறேன். தமிழ் பதிவுலகில்கூட 6 மாதங்களாகவும் ஆங்கில பதிவில் 2 வருடங்களாகவும் இந்தப்பெயர்தான் 🙂
  —————————————————————–

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி jeevanbennie.
  http://themediasite.net/forums/index.php
  முதலில் இலவசமாக பதிவு செய்தபின்னர் குறைந்தது 10 posts or replies ஆவது பண்ணுங்க. அப்பதான் அக்கவுண்ட் அக்டீவ் ஆகும் !!

 12. வடுவூர் குமார் said

  அருமையான தொகுப்பு.
  ஒவ்வொரு Forum ஐயும் புக் மார்க் செய்வதற்கு பதில் உங்கள் பக்கத்தையே குறித்துவைத்துக்கொண்டு விட்டேன்.

 13. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்
  🙂 🙂

 14. ashok said

  hai subash,
  Thanks for giving new information.I need the book “Reliability Assessment Of Electric Power System Using Monte Carlo Methods by Billinton, R. and Li, ”
  which is available in downloadaccess.us. But i am not a member ,would you please download for me. thankyou

  =

 15. வாழ்க வளமுடன்.

  நீண்ட நாட்களுக்குப் பிறகாவது வந்தீர்களே. உங்கள் பதிவைப் படித்ததில் மகிழ்ச்சி.

  இந்தச் சுட்டிகள் தங்கம் போன்றவை. தந்தமைக்கு நன்றிகள்.

 16. மிக முக்கியமான தளங்கள் இவை அனைத்தும் ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறிர்கள் நீங்கள் நன்றாக இருப்பது எங்களுக்கும் எங்கள் இனத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

  வருகிறேன்.

 17. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்.

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வடிவேலன்.

 18. We are expecting more posts like this from Subash..

  Thanks
  TN

 19. நண்பர் மூலம் இப்போதுதான்உங்கள் தளத்தை பார்த்தேன். அருமையான தகவல்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

 20. சுபாஷ் said

  ஃஃWe are expecting more posts like this from Subash..ஃஃ

  நிறைய இடுகைகள் draft ல் பாதி டைப் பண்ணியவாறு இருக்கு. அதை நினைச்சாலே பதிவு பக்கம் வர கண்ணக் கட்டுதே

 21. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேலன்.

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: