சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

விண்டோஸ் Vista விலிருந்து XP க்கு செலவில்லாமல் டவுண்கிறேட் பண்ணுவது எப்படி?

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 28, 2008

நீங்கள் புதிதாக கணனி (மடிக்கணினி) வாங்கினால் இப்போது அதனுடன் லைசன்ஸ் பெறப்பட்ட Vista Business அல்லது Vista Ultimate தருவார்கள். ஆனால் நமக்கு விஸ்டா வேண்டாம், XP  தான் வேண்டுமென நினைத்தால் துளி செலவில்லாமல் லைசன்ஸ் வேர்சனை நிறுவிக்கொள்ளலாம்.

நிறைய கணினி பயனர்கள் இன்னும் Vista பாவிக்க மறுக்கிறார்கள். காரணம் இதற்கு வந்த எதிர்மறையான கருத்துக்களே. பாவிக்க கடினம், கூடுதலான வன்பொருள் தேவை, நிலையான தன்மையின்மை, ஒத்திசைவின்மை மற்றும் விலை போன்ற காரணங்களை சர்வ சாதாரணமாக பல வலைத்தளங்கள் குறிப்பிட்டிருந்தன.

முன்னர் HP, Dell மற்றும் Lenovo போன்ற மடிக்கணினிகளில் Windows XP யை pre installed ஆக தந்தார்கள். இப்போது Windows Vista தருகிறார்கள். ஆனாலும் மேலே சொன்ன காரணங்களால் பயனாளர்கள் இனனும் XP தான் வேண்டுமென நினைக்கிறார்கள். Microsoft கூட இந்த நிலமையை உணர்ந்து Vista Business அல்லது Vista Ultimate உரிமம் வைத்திருப்பவர்கள் துளி செலவில்லாமல் தாராளமாக XP Professional ஐ நிறுவிக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது

சரி இவர்களுக்குதான் இந்தப்பதிவு!!! எப்படி நாம் விண்டோஸ் விஸ்டாவிலிருந்து எக்ஸ்பீக்கு உரிமத்துடன் மாறுவதென பார்க்கலாம்.

இதற்குமுன்னர் Microsoft Downgrade பற்றி என்ன சொல்லியிருக்கிறார்களென பாருங்கள்.

Desktop PC பாவனையாளர்கள் தங்களின் உரிமம் பெறப்பட்ட Vista Business அல்லது Vista Ultimate ஐ இதனது பயனர் வரைமுறையை மீறாதவண்ணம் டவுண்கிறேட் பண்ணலாம். ஆனால் Vista Business அல்லது Vista Ultimate உரிமம் வைத்திருப்பவர்கள் மாத்திரமே Windows XP Pro வுக்கு மாறலாம். இந்த டவுண்கிறேட் உரிமம் Windows XP Pro 32 bit, 64 bit மற்றும் XP Tablet PC Edition போன்றவற்றிற்கு செல்லுபடியாகும். தவிர Windows Vista Home Basic மற்றும் Windows Vista Home Premium உரிமம் வைத்திருப்பவர்க்கு இந்த சலுகை கிடையாது.

சரி, இனி இதனை எப்படி செயல்படுத்துவதென பார்க்கலாம்.

 1. தற்போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் விண்டோசுக்கான Product Key யை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக நிறைய மென்பொருட்கள் இணையத்தில் குவிந்திருக்கின்றன..
 2. இப்போது உங்களிடமுள்ள பைரேட் அல்லாத XP Setup CD/ DVD மூலமாக கணினியில் நிறுவவும். முன்னர் பதிவு செய்யப்பட்ட அல்லது பழைய கணினிகளுடன் வரும் CD கொண்டு நிறுவ வேண்டாம். முடிந்தால் Microsoft இலிருந்து தரவிறக்கி நிறுவுவதே நல்லது.
 3. நிறுவலின் பின்னர் புகுபதிகை செய்யவும் ( Log on செய்யவும் )
 4. விண்டோஸ் அக்டிவேஷன் பண்ணும்படி கேட்கும்போதோ அல்லது
  go to “Start” -> “All Programs” -> “System Tools” -> “Activate Windows”
  அல்லது
  right click on “Computer” and click “Click here to activate Windows”
  என்பதன் மூலமோ Activation Window வை திறந்து
  Yes, I want to telephone a customer service representative to active Windows now
  என்பதை சொடுக்கவும்.
 5. உங்கள் பிரதேசம் மற்றும் நாடு என்பவற்றை தெரிவுசெய்தபின்னர் அருகிலிருக்கும் Microsoft Customer Care தொலைபேசி இலக்கம் உங்களுக்கு வழங்கப்படும். அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவும். அனேகமாக இது கட்டணமற்ற அழைப்பாகவே இருக்கும்.
 6. அதில் சொல்லப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி நிஜ மனித பிரதானியை அழைக்கவும் (human customer care representative 🙂 ). இது கடினமாக இருக்குமானால், நீங்கள் அழைப்பை ஏற்படுத்தியவுடன் Installation ID கேட்கும்போது எதையாவது குடுத்தால் தவறான உள்ளீடென செய்தி வரும். இரண்டு மூன்றுதடவை இப்படியே செய்தால் customer care representative தானாக வழிக்கு வருவார்.
  படத்தில் 3ம் படிமுறையில் Installation ID இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது.
 7. இனி அவரிடம் நீங்கள் டவுண்கிரேட் செய்துள்ளதை தெரிவிக்கவும். அவர்கள் நீங்கள் நிறுவிய இயங்குவளத்திற்கான product key யை கேட்கும்போது Vista விற்கான product key யை தெரிவிக்கவும். அத்துடன் XP யின் விபரங்களையும் அவர்களிடம் தெரிவியுங்கள்.
 8. validation முடிந்ததும் Confirmation ID ஒன்று தருவார்கள். இதனை 6ஆவது படிமுறையில் காட்டப்பட்ட பட சாரளத்தில் Step 4 என்பதில் பதிவு செய்துவிட்டீர்களென்றால் அத்தோடு முற்றும் போட்லாம்.

ஆக்கம்,
சுபாஷ்,
https://hisubash.wordpress.com

உங்களின் கருத்துக்களை தயவுசெய்து அறியத்தாருங்கள். மற்றும் இப்பதிவு சம்பந்தமாகவுள்ள வேறு பதிவுகளிக் சுட்டி மற்றும் வேறு கூடுதலான தகவல்களை பின்னுட்டத்தில் அறியத்தரவும். அது எமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நல்ல தொகுப்பை உருவாக்கவும் உதவியாக அமையும்.

மற்றும் சரியான தமிழ் சொற்பிரயோகங்களையும் அறியத்தந்தால் பதிவின் தரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

=================================

டிஸ்கி – (பதிவில் பின்னுட்டமாக இட்டதையே இங்கு மீண்டும் பதிகிறேன்.)

வருகைக்கும் கருத்திற்கும் அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவு கண்டிப்பாக XP க்கு மாறவேண்டுமென போடப்பட்டதல்ல.

மாற விருப்பமாயின் எப்படியென்பதுதான் பதிவின் விடயம்.

சாதாரணமான வீட்டு மற்றும் அலுவலக பாவனைக்கும் இணைய பாவனைக்கும் Home Premium தாராளமாய்ப்போதும்.
தற்போதுள்ள பல மென்பொருட்களையும் நிறுவி உபயோகிக்கலாம்.

Vista Business and Ultimate போன்றவை திறன் கூடிய மடிக்கணனிகளுடன் தான் வருகிறது. வேகமும் அதிகம். ஆக XP க்கு மாற வேண்டியதில்லை. ஆனால் Dual Core மற்றும் AMD வகை கணனிகளில்தான் விஸ்டா வேகக்குறைவாக செயல்படும். அவர்கள் மாற்றினால் பயனுள்ளதாயிருக்கும்.
அல்லது உங்கள் கணனி வேகம் குறைவாகவிருந்தாலும் XP க்கு மாறுவது பரவாயில்லை.

நீங்கள் டெவலப்மன்ட் வேலைகள் மற்றும் பெரிய விஷேட மென்பொருட்களை (MS SQL Server based application and Network) உபயோகிக்கவேண்டி வந்தால் மட்டுமே Business and Ultimate அல்லது XP பயன்படுத்தலாம். ஏனெனில் சில மென்பொருட்களை Home Version ல் நிறுவ முடியாது.
உதா- சில கணக்கீட்டு மென்பொருட்கள், MS Sql Server2005

மற்றும் XP க்கு மாறுவது உங்கள் பழைய மென்பொருட்கள் Vista க்கு ஆதரவில்லையெனில் மட்டும் பயனளிக்கும்.
மற்றும் XP யின் உதவிகளையும் மைக்ரோசாப்ட் நிறுத்தும் இவ்வேளையில் XP யில் மினக்கடுவது அவ்வளவு நல்லதல்ல. ( முக்கியமான தேவை இருந்தாலன்றி )
மற்றயது புதிய தொழில்நுட்பங்களோடும் அப்டேட்டுகளோடும் தொடர்பில் நம்மை வைத்துக்கொள்வது ஐடி யில் இருக்கும் நமக்கு முக்கியம்.

ஆக முக்கியமான தேவைகளன்றி XP க்கு downgrade பண்ண வேண்டாம். புதியதை அதன் வித்தியாசங்களோடு வரவேற்று நமக்கேற்றபடி மாற்றுவோம்.

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி

Advertisements

45 பதில்கள் to “விண்டோஸ் Vista விலிருந்து XP க்கு செலவில்லாமல் டவுண்கிறேட் பண்ணுவது எப்படி?”

 1. Hi there,

  I looked over your blog and it looks really good. Do you ever do link exchanges on your blog roll? If you do, I’d like to exchange links with you.

  Let me know if you’re interested.

  Thanks..

 2. செந்தில் said

  மிகவும் பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.

  ஆனால் விஸ்டா ஹோம் எடிசன் இருந்த்தால் ஒன்றும் செய்ய வழி இல்லையா? ஏனெனில் பெரும்பாலான மடிக் கண்ணிகள் ஹோம் உடன் மட்டுமெ வருகின்றன.

 3. Very useful information.

 4. Hi.. Wonderful post.

  Sometime Degrading the OS is better than using the Latest one for some people.

 5. Loppu said

  தெய்வமே தெய்வமே…. நன்றி சொன்னேன் தெய்வமே….

 6. thanks………….

 7. S. Tamilselvan said

  Nice one. I just want to know whether we can degrade Windows Vist Home Premium to Windows XP

 8. Hai Subhash,

  How to publish my blog in Tamilmanam, I tried everything as explained in Tamilmanam, but could not succeed. I do not know where I am commissitng mistakes.

  Could you please explain to me with some snap shots. I am not a word press user but blogger.

  Thanks.

  R.Benjamin

 9. ila said

  என்ன பண்ணித்தொலைய, home basic வாங்கிட்டேன். மாரடிக்கிறேன்..

 10. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Dan Waldron

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி செந்தில்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சந்தோஷ்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ்நெஞ்சம் ( இப்ப ஓகேவா? 🙂 )

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Loppu

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி rajan karunanidhi

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி S. Tamilselvan

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி r.benjamin ponnaih

 11. சுபாஷ் said

  @ Dan Waldron :

  Yeah I am happy to exchange our links.
  thanks 🙂

 12. சுபாஷ் said

  @ செந்தில் :
  ஹோம் எடிஷன் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது செந்தில்.
  ஆனா விஸ்டா ஹோம் ல் பாவனைக்கு தேவையானஅனைத்தும் உள்ளது. XP ல் நெட்வேர்க் பயன்பாடுகள் அதிகம். அவ்வளவுதான்.
  சோ கவலைப்படவேண்டாம்.

  Centino 2 மற்றும் Core 2 Due மடிக்கணணிகளில் மட்டுமே Vista Business or Unlimate editions வருகிறது. மற்றயவற்றில் Home edition இருக்கும். ஆனால் கண்டிப்பாக மாறவேண்டுமென்பதில்லை.

  =================

  @ S. Tamilselvan :

  Sorry Tamilselvan, u cant downgrade from Home premium to XP pro.
  but i thing home premium is good enuf for all usual works.

  =================

  @ r.benjamin ponnaih :

  1st u hav to add ur blog.
  use this link http://www.tamilmanam.net/user_blog_submission.php

  and then they will send an email with other details. it will tk 4- 5 days,

  and u need at least 5 or more than 5 posts n ur blog.

  Gud luck bro.

  ============================

  @ ila :

  விஸ்டா ஹோம் ல் பாவனைக்கு தேவையானஅனைத்தும் உள்ளது. XP ல் நெட்வேர்க் பயன்பாடுகள் அதிகம். அவ்வளவுதான்.
  சோ கவலைப்படவேண்டாம். விரும்பினால் Home Premium க்கு அப்டேட் செய்துகொள்ளலாம்.

 13. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் அனைவருக்கும் நன்றி.

  இந்த பதிவு கண்டிப்பாக XP க்கு மாறவேண்டுமென போடப்பட்டதல்ல.

  மாற விருப்பமாயின் எப்படியென்பதுதான் பதிவின் விடயம்.

  சாதாரணமான வீட்டு மற்றும் அலுவலக பாவனைக்கும் இணைய பாவனைக்கும் Home Premium தாராளமாய்ப்போதும்.
  தற்போதுள்ள பல மென்பொருட்களையும் நிறுவி உபயோகிக்கலாம்.

  Vista Business and Ultimate போன்றவை திறன் கூடிய மடிக்கணனிகளுடன் தான் வருகிறது. வேகமும் அதிகம். ஆக XP க்கு மாற வேண்டியதில்லை. ஆனால் Dual Core மற்றும் AMD வகை கணனிகளில்தான் விஸ்டா வேகக்குறைவாக செயல்படும். அவர்கள் மாற்றினால் பயனுள்ளதாயிருக்கும்.
  அல்லது உங்கள் கணனி வேகம் குறைவாகவிருந்தாலும் XP க்கு மாறுவது பரவாயில்லை.

  நீங்கள் டெவலப்மன்ட் வேலைகள் மற்றும் பெரிய விஷேட மென்பொருட்களை (MS SQL Server based application and Network) உபயோகிக்கவேண்டி வந்தால் மட்டுமே Business and Ultimate அல்லது XP பயன்படுத்தலாம். ஏனெனில் சில மென்பொருட்களை Home Version ல் நிறுவ முடியாது.
  உதா- சில கணக்கீட்டு மென்பொருட்கள், MS Sql Server2005

  மற்றும் XP க்கு மாறுவது உங்கள் பழைய மென்பொருட்கள் Vista க்கு ஆதரவில்லையெனில் மட்டும் பயனளிக்கும்.
  மற்றும் XP யின் உதவிகளையும் மைக்ரோசாப்ட் நிறுத்தும் இவ்வேளையில் XP யில் மினக்கடுவது அவ்வளவு நல்லதல்ல. ( முக்கியமான தேவை இருந்தாலன்றி )
  மற்றயது புதிய தொழில்நுட்பங்களோடும் அப்டேட்டுகளோடும் தொடர்பில் நம்மை வைத்துக்கொள்வது ஐடி யில் இருக்கும் நமக்கு முக்கியம்.

  ஆக முக்கியமான தேவைகளன்றி XP க்கு downgrade பண்ண வேண்டாம்.

  ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி

 14. Hickson said

  Thanks for sharing the info…
  For people with better RAM Vista is not a Problem..
  But I have seen many people who want to downgrade but downgrading has its own complications.

 15. சுபாஷ் said

  Thanx for cuming Hickson.
  ya u r rit Hickson. i accept it
  vista Home premium is well enaf.
  but they dont like it.

 16. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…
  கலக்குற சுபாஷ்.. கலக்குற..

 17. அருமையான பதிவு..

  தொடர்ந்து எழுதுங்கள்

  அருமையான பதிவு ..

 18. மோகன் said

  இன்னாபா நீ, எப்ப பாரு அந்த விண்டோஸ் பத்தியே நியூஸ் போட்டுகினு கீற? லினக்ஸ் பத்தி எதுனா போடறது?

 19. மோகன் said

  //உருப்புடாதது _ அணிமா கூறுகிறார்:
  செப்டம்பர் 30, 2008 இல் 12:48 மு.பகல்

  அருமையான பதிவு..

  தொடர்ந்து எழுதுங்கள்

  அருமையான பதிவு ..//

  ஆஹா, இதை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே? அணிமா, காபி பேஸ்ட் தானா எல்லாருக்கும்?

 20. என் வழி தனி வழி….

 21. எங்கப்பா போய்ட்ட??
  நானே ரெம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன்,.,
  ஒரு மால மரியாத இல்லியா??

 22. மோகன் said

  //எங்கப்பா போய்ட்ட??
  நானே ரெம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன்,.,
  ஒரு மால மரியாத இல்லியா??//

  மறுபடி காபி பேஸ்ட்!

 23. சுபாஷ் said

  வாங்க அணிமா!!!
  எங்க போயிருந்தீங்க இவ்ளோ நாளா?
  பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள்!!!!!!!

 24. சுபாஷ் said

  வாங்க மோகன்.
  எப்படியிருக்கீங்க?
  லினக்ஸ் பத்தி நீங்கதா நிறைய சொல்லியிருக்கீங்களே!!!!

 25. சுபாஷ் said

  ஃஃஆஹா, இதை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே? அணிமா, காபி பேஸ்ட் தானா எல்லாருக்கும்?ஃஃ

  ஃஃஎன் வழி தனி வழி….ஃஃ

  :): ): )))))))))))))))))))))))))))))

  /////ஒரு மால மரியாத இல்லியா??////

  ஒரு பதிவு போட்டுப்பாருங்க. மால மரியாத எல்லாம் பேண்டோட வரும்
  ஹாஹா

 26. சுபாஷ் said

  ஃஃமறுபடி காபி பேஸ்ட்!ஃஃ
  :))))
  மோகன்
  இதல்லா பதிவுலகத்துல சகஜமப்பா!!!!1
  ஹிஹி

 27. மோகன் said

  //வாங்க மோகன்.
  எப்படியிருக்கீங்க?//

  சுபாஷ், நல்லா இருக்கேன்.

  //லினக்ஸ் பத்தி நீங்கதா நிறைய சொல்லியிருக்கீங்களே!!!!//

  நீங்க போடற பதிவு மாதிரி வருமா?

 28. காபி பேஸ்ட் எல்லாம் எனக்கு தெரியாது..

  யாரோ என் பேர யூஸ் பண்ணியிருக்காங்க ன்னு நோனைக்குறேன் ( ஸ்ஸ்ஹ் ,,,.)

 29. //எங்க போயிருந்தீங்க இவ்ளோ நாளா?
  பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள்!!!!!!!////

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல

 30. சுபாஷ் said

  //நீங்க போடற பதிவு மாதிரி வருமா?//
  அவ்வ்வ்

  //யாரோ என் பேர யூஸ் பண்ணியிருக்காங்க ன்னு நோனைக்குறேன் ( ஸ்ஸ்ஹ் ,,,.)//
  இத பார்றா!!

  //லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல//
  லேடஸ்டா வந்தாலுட் டோடல் டேமேஞ் ஆக்கிடுவோம்ல!!!
  🙂

 31. பயனுள்ள தகவல கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்

 32. லேடஸ்டா வந்தாலுட் டோடல் டேமேஞ் ஆக்கிடுவோம்ல!!!
  :)////////////

  யாருக்கு ???

 33. Let’s come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

  Let’s also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

 34. //யாரோ என் பேர யூஸ் பண்ணியிருக்காங்க ன்னு நோனைக்குறேன் ( ஸ்ஸ்ஹ் ,,,.)//
  இத பார்றா!!///////////

  அது தான் பாத்துட்டோம்ல.. அப்புறம் என்ன??

 35. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அல்லாபிச்சை

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Tamil Junction.
  தளத்தை பார்த்தேன். இன்றே இணைந்துவிடுகிறேன்

 36. ஃஃஉருப்புடாதது _ அணிமா கூறுகிறார்:
  லேடஸ்டா வந்தாலுட் டோடல் டேமேஞ் ஆக்கிடுவோம்ல!!!
  :)////////////

  யாருக்கு ???
  ஃஃஃஃ

  நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே!! எப்படி?
  🙂

 37. //அது தான் பாத்துட்டோம்ல.. அப்புறம் என்ன??//

  யாராவது என்னய காப்பாத்துங்களே……

  🙂

 38. […] மூலம் தகவல் தொழில்நுட்பம், விண்டோஸ்downgrade, Vista, windows, XP, விண்டோஸ் […]

 39. mathibala said

  அப்பாடா , இந்த விஸ்டாவை வச்சிக்கினு நான் படற கஷ்டம் யாருக்கு தெரியுது……உண்மையாவே ரொம்ப சந்தோஷமான விஷயமுங்கோ……!!!!!

  மொதல் வேலையா பண்ணனும்…பாதி நேரம் பூட்டிங்குக்கு தவமா தவமிருந்தே வாழ்க்கை கழியுது…

  ஒரு கொசுறு தகவல்….

  நீங்க விஸ்டாவை டிவிடி டிரைவ் / வெப்கேம்க்கு மட்டும் யூஸ் பண்ண ரெடின்னா , உடனே மெசிண்டோஸ்க்கு மாறுங்க……….எனக்கு தெரிஞ்சி அதான் பெஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம்…என்ன ஒரே பிரச்சினை சில டிரைவ் சப்போர்ட் ஆக மாட்டேங்குது…அவ்ளோதான்…ஆனா இண்டர்னெட் , ஆபிஸ் இதுக்கெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை..!!

 40. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி mathibala !!!

  வீட்டுப்பாவனைக்கு சந்தேகமில்லாமல் Mac மிகச்சிறந்த இயங்குதளம். ஆனால் அலுவலக பாவனைக்கும் வணிக தேவைகளுக்கு ஏற்றவாறு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

 41. சுபாஷ் said

  ஃஃ
  மொதல் வேலையா பண்ணனும்…பாதி நேரம் பூட்டிங்குக்கு தவமா தவமிருந்தே வாழ்க்கை கழியுது…
  ஃஃ

  எனக்கென்னமோ விஸ்டா வேகமாக பூட் ஆவதுபோல் தோன்றுகிறது.

 42. Prashanth said

  “இது கடினமாக இருக்குமானால், நீங்கள் அழைப்பை ஏற்படுத்தியவுடன் Installation ID கேட்கும்போது எதையாவது குடுத்தால் தவறான உள்ளீடென செய்தி வரும். இரண்டு மூன்றுதடவை இப்படியே செய்தால் customer care representative தானாக வழிக்கு வருவார்”

  இதான்யா நிஜ Customer Service 😉 just for joke only !!! அருமையான பதிவு !!! வாழ்த்துக்கள்.

 43. சுபாஷ் said

  வாங்க Prashanth.
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

  நீங்களும் Customer Service பற்றி சரியாகத்தான் புரிந்திருக்கிறீர்கள்.!!!

 44. Hi Subash,

  Thanks for your informative post. Downgrading to Win Xp Pro is best one for while struggling with pre installed Vista. The Vista is resource hog also. But the real problem is most of laptop manufauctures never provide drivers for Windows XP even the support website. They are only provide drivers for Win Vista 32 and 64 Bit. This is my recent encounter with such downgrading task. The laptop brand is Dell and XPS series. Did you any one face such problem?

  with care and love,

  Muhammad Ismail .H , PHD,

 45. சுபாஷ் said

  Muhammad Ismail .H , PHD,

  உங்களின் லேப்டாப் பற்றிய driver சிக்கல்களிற்கு http://forum.notebookreview.com எனும் forum இனை பாவிக்கவும். புக் மார்க் பண்ணிடுங்க.

  வழமையாக புதிய லேப்டாப்களில் XP நிறுவ முடியாததற்கு காரணம் உங்க laptop hard disk ன் driver xp இடம் இல்லாததுதான். எனது HP dv5 ற்கும். இதே பிரச்சனை. மேலே உள்ள தளத்தில்தான் தீர்வு பெற்றேன்.

  மற்றும் சில தளங்கள்.
  http://www.getpcmemory.com/drivers/download-dell-xps-m1330-notebook-windows-xp-drivers/

  http://blog.rkania.com/2009/03/19/installing-windows-xp-x64-on-a-dell-xps-or-windows-xp-32-bit-and-avoid-the-blue-screen-of-death/ ( இது 64 பிட் XP ஐ நிறுவுவது பற்றியது. Drivers களை பெற்றுக்கொள்ளலாம் )

  http://dell.driversdown.com/dell-drivers-list/s_674_1.shtml இது unofficial drivers தளம். இங்கேயும் முயன்று பாருங்களேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: