சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

கூகிளின் Android இயங்குதள SDK 1.0

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 25, 2008

கூகுள் நிறுவனம் செல்லிடப்பேசிகளுக்கென பிரத்தியோகமான இயங்குதளத்தை அறிமுகம் செய்து வைத்தது. Android என பெயரிடப்பட்ட இந்த இயங்குதளம் Microsoft Windows Mobile இயங்குதளத்திற்கும் Apple iPhone Mac X இயங்குதளத்திற்கும் பெரும் சவாலாக இருக்குமென கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு. அடிப்படை கட்டமைப்பிலும்சரி மென்பொருள் கட்டமைப்பிலும் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு.

ஒரு மாதத்திற்கு முன்னர் கூகிள் Android க்கான SDK 0.9 வெளியிடப்பட்டு மென்பொருள் உருவாக்க போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசு US $275000, 2ம் பரிசு US $100000. முதல் பரிசு 20 பேருக்கும் 2ம் பரிசு 40 பேருக்கும் அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற மென்பொருள் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

இப்போது SDK 1.0 முழுப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Java மொழி மூலமாக மென்பொருளை உருவாக்கவேண்டும். தற்போது Java மொழிக்கு மட்டுமே ஆதரவு. விரைவில் C/C++ மொழிகளுக்கும் ஆதரவு தரும்படி SDK வெளியிடப்படும். இதற்கான சகல உதவிகளும் Android community மூலம் பெறலாம். இதற்கு Android செல்லிடப்பேசி அவசியமில்லை. Software emulator மூலம் பரீட்சித்துப்பார்க்கலாம்.

உங்களிடம் Nokia N 810 Internet Tablet இருக்குமானால் நீங்களாகவே Androidஐ அதில் நிறுவி பார்க்கலாம். இதற்கான சகல உதவிகளும் இங்கேயுள்ளன மற்றும் இங்கேயும். மற்றய செல்லிடப்பேசிகளில் நாமாக நிறுவும் அனுமதியை கூகிள் அளிக்கவில்லை.

மற்றய இயங்குதளத்திற்கும் இதற்குமிடையிலான வித்தியாசங்களையும் இதன் சிறப்பம்சங்களையும் வைத்துப்பார்க்கும்மோது இது வெறும் செல்லிடப்பேசி இயங்குதளம் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சகல கணினி செயல்களையும் செய்யவல்ல ஓர் பணித்தளமாக இது விளங்கும் என்பதில் ஐயமில்லை.

முதல் ஆச்சரியம் இது அடிப்படையில் Linix Kernel ஐ அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் Motorola நிறுவனம்தான் Linux Mobile Version இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அத்திட்டம் வெற்றிபெறவில்லை. ஆனால் கூகிள் இந்த திட்டத்தை கையாண்ட விதத்திலும் வியாபாரப்படுத்திய விதத்திலும் பெருவெற்றிபெற்றுள்ளது.

அடுத்து இவ்வியங்குதளம் 2D மற்றும் 3DGraphics க்கு OpenGL ES 1.0 ன் வரையறைக்கு ஏற்றாற்போலவும் OpenGL ESக்கு முழு ஆதரவு தருமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிதுல்லியமான படங்களும் Animation உம் சாத்தியம். விளையாட்டு வடிவமைப்பாளர்களுக்கு இது ஓர் கூடுதல் உற்சாகம்.

மற்றயது SQLlite எனும் Opensource தகவல்தள மென்பொருளானது இதனுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உருவாக்குபவர்கள் இதற்கு ஒத்திசைவாக இலகுவான மென்பொருட்களை உருவாக்கமுடியும். இது MySQL ன் கட்டமைப்பை ஒத்திருந்தாலும் இதைவிட வேகமானதும் அதிக தகவல்களை சிக்கலில்லாமல் கையாளக்கூடியது.

MPEG4, H.264, MP3, AAC, AMR, JPG, PNG, GIF போன்ற இன்றய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் Media Format களை ஆதரிக்கின்றது.

Bluetooth, EDGE, 3G, and WiFi போன்ற தெலைத்தொடர்பு தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கின்றது.

மொத்தத்தில் மற்றய போட்டியாளர்களான Windows Mobile Apple, iPhone Mac மற்றும் Symbion போன்றவர்களுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் கூகிளின் Android செயல்படும்.

இப்போது உத்தியோகபுர்வ வியாபார வெளியீடாக HTC நிறுவன PDA க்களில்  அமரிக்காவின் AT&T நிறுவனத்தில் வலையமைப்பில் உள்ள செல்லிடப்பேசிகளில் மட்டுமே கூகிளின் Android நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் மற்றய இடங்களிலும் இது விஸ்தரிக்கபடும்.

எப்படியோ, இவர்களின் போட்டி நமக்கு நன்மைதான்.

மேலும் உதவிகளுக்கு
http://androidcommunity.com/
http://www.talkandroid.com

Sunsung Android Plateform Mobile
http://www.itechnews.net/2008/02/20/samsung-google-branded-android-phone-coming/

மேலும் தமிழ்நெஞ்சம் அவர்களின் பதிவு.
http://tamizh2000.blogspot.com/2008/09/blog-post_8580.html

அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.

நன்றி
சுபாஷ்.

டிஸ்கி –
தவறுகளையும் தமிழ்ப்பிழைகளையும் உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் எழுத உதவியாகவிருக்கும். நன்றி.

இவர்களுக்கும் நன்றிகள்ஆங்கிலம்-தமிழ் அகராதி

Advertisements

18 பதில்கள் to “கூகிளின் Android இயங்குதள SDK 1.0”

 1. தமிழ்போலீஸ் said

  நன்றி …..

  /அனைத்து சுட்டிகளும் புதிய சாரளத்தில் திறக்கப்படும்.//

  சாரளமா இல்லை சாளரமா?

  I am not sure

 2. சுபாஷ் said

  வாங்க போலீஸ்கார்.
  ஃஃசாரளமா இல்லை சாளரமா?

  I am not sureஃஃஃஃ

  ஐயையோ, எனக்கும் சரிவர தெரியாது. வேறு பதிவுகளில் செக் பண்ணிவிட்டு சொல்கிறேன்.

 3. சுபாஷ் said

  சாளரம் தான் சரி.
  சுட்டிக்காடடியதற்கு நன்றி த.போ!!!
  உடனே மாற்றிவிடுகிறேன்

 4. Thanks dear dude. I am new to this SDK. I learned many things from this post.

  Great Man.

 5. சுபாஷ் said

  Thx thmilnenjam..

 6. scssundar said

  என்னமோ சொல்ல வர்றிங்க என்பது தெரிகிறது… ஆனா ஒன்னுமே புரியல தல..

 7. Hickson said

  Even though Android has been launched..I feel its no competition to Symbian OS…Specially Asian Markets thrive in Symbian mainly thanks to Nokia,,,

 8. SQLite டேட்டாபேஸ் தானே ? தகவல் தளம் என்றால் புரியல…

  இதே மேட்டர் “LiMo” விலும் நடக்குது… (Googleit : LiMo Foundation)

  இன்னும் கொஞ்சம் காலத்தில் விண்டோஸ் மொபைல், ஆப்பிள் ஓஎஸ் எக்ஸ், சிம்பியான் ஆகியவை எகிறிடும்..

  ஆண்ராய்டு மற்றும் லிமோ தான் எதிர்காலத்துக்கான ஓஎஸ்கள்..

  இதுல ஒரு மேட்டர் என்னன்னான் லிமோ மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டும் உபுண்டுவை உபயோகப்படுத்துவது…லினக்ஸ் கெர்னலை உபுண்டுவை தவிற வேற யாரால அருமையா பாவிக்கமுடியும் ?

  நான் இப்போ மீட்டர் ஓட்டுவது லிமோவில்…

 9. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுந்தர்,
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Hickson
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி செந்தழல் ரவி

  //என்னமோ சொல்ல வர்றிங்க என்பது தெரிகிறது… ஆனா ஒன்னுமே புரியல தல..//
  அப்பாடா!! அப்ப நா நல்ல பதிவதா போட்டிருக்கிறேன்!! ஹிஹி

  //I feel its no competition to Symbian OS…//
  தற்போது சிம்பியனும் நிறய வசதிகழுடன் வந்துவிட்டது!! உதா- புதிய Nokia N series, ( S 60 3rd and S90)
  mm lets see!! 🙂

 10. சுபாஷ் said

  LiMo பற்றி தெரிவித்ததற்கு நன்றி செந்தழல் ரவி.
  இதுவரைக்கும் இதைப்பற்றி தெரியாது. இப்பதா பார்த்தேன்.
  நிறைய பண்ணியிருக்கிறார்கள்.
  ஃஃநான் இப்போ மீட்டர் ஓட்டுவது லிமோவில்…ஃஃ

  இது பற்றிய உங்களின் உதவிச்சுட்டிகளை தரமுடியுமா?
  கூகிளில் நிறைய வருகிறது. ஆனால் உல்லாமே hi tec articles 😦
  thanks in advance

 11. மோகன் said

  இன்னாபா, சிம்பியன் லினக்ஸ் மொபைல் போன் க்கு உபயோகப் படாதுன்னு சொல்லிகீதே? இத பத்தி உன் கருத்து இன்னா?

 12. மோகன் said

  //முதல் பரிசு US $275000, 2ம் பரிசு US $100000. முதல் பரிசு 20 பேருக்கும் 2ம் பரிசு 40 பேருக்கும் அளிக்கப்பட்டது.//

  அடடா 275000$ மிஸ் ஆயிடுச்சே

 13. மோகன் said

  //ஆரம்பத்தில் Motorola நிறுவனம்தான் Linux Mobile Version இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அத்திட்டம் வெற்றிபெறவில்லை. ஆனால் கூகிள் இந்த திட்டத்தை கையாண்ட விதத்திலும் வியாபாரப்படுத்திய விதத்திலும் பெருவெற்றிபெற்றுள்ளது.//

  True, google has set standards. SO people started believing that if google does some thing, its good.

 14. சுபாஷ் said

  ஃஃசிம்பியன் லினக்ஸ் மொபைல் போன் க்கு உபயோகப் படாதுன்னு சொல்லிகீதே? இத பத்தி உன் கருத்து இன்னா?ஃஃ

  ஆஆ மெய்யாலுமா?
  எங்க? எப்ப?
  எனக்கு தெரியாதே!!!
  இருங்க தேடிப்பாத்துட்டு வாரன்

 15. சுபாஷ் said

  வருகைக்கு நன்றி மோகன். எப்படியிருக்கீங்க.?
  ( சத்தியமா காப்பி பண்ணாம டைப் செய்தன்!!! ஹிஹி)

 16. சுபாஷ் said

  //google has set standards//

  true !!!!!!!

 17. மோகன் said

  //ஆஆ மெய்யாலுமா?
  எங்க? எப்ப?
  எனக்கு தெரியாதே!!!
  இருங்க தேடிப்பாத்துட்டு வாரன்//

  http://www.theregister.co.uk/2008/09/18/symbian_on_linux/

 18. சுபாஷ் said

  Thanks Mohan

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: