சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Windows Server 2008 – முதல் பார்வை ( First Look )

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 24, 2008

இந்த பதிவு Microsoft Windows Server 2008 க்கான முன்னோட்ட பதிவாகவும் அறிமுகப்பதிவாகவும் இருக்கும்.Microsoft ன் புதியதும் அதிநவீன பயன்பாடுகளைக்கொண்டதுமான Server வகை இயங்குதளம்தான் இந்த Windows Server 2008. இதில் புதிதாக என்ன உள்ளது மற்றும் எப்படி உபயோகப்படுத்துவது என வரிசையாக பார்க்கலாம்.

இந்த வெப்தளமூலம் சர்வரை டவுண்லோடு செய்து Virtual Machine மென்பொருள் எதையாகிலும் கொண்டு உபயோகிக்கலாம். கிட்டத்தட்ட 4GB அளவுள்ள Virtual Hard Disk Image ஐ Download பண்ண கண்டிப்பாக அகலப்பட்டை இணைய இணைப்பு அவசியம். இல்லவிடில் யுடொரண்டில் setup ISO வை download செய்யலம். 800MB அளவுதான் வரும். நான் அதிகமாக ISO format ல் download செய்து VM Ware ல் பயன்படுத்துகிறேன். பரீட்சார்த்தமாக பயன்படுத்த இது ஒரு நல்ல வழி.

”நாம் வெளியிட்டதில் மிகவும் மேம்படுத்தப்பட்டதும் பாதுகாப்பானதுமான சேவக மேலாண்மை வகை இயங்குதளமென”  Microsoft இந்த பதிப்பை விளம்பரப்படுத்தி வெளியிட்டுள்ளது. அது உண்மையும் கூட. பெரிய மற்றும் நடுத்தர வகுப்பு நிறுவனங்களின் தேவைகளை திருப்திசெய்யத் தேவையான அனைத்து விடயங்களையும் மிக இலகுவான முறையில் நிர்வாகித்திட இந்த புதிய பதிப்பு உதவிடும்.

சரி புதிய விடயங்கள் ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.

புதிய வடிவமைப்பு

முதலில் விண்டோசை ஆரம்பித்தவுடன் உணர்வது இதன் புதிய Start Menu தான். நீங்கள் Vista பாவிப்பவராயின் கிட்டத்தட்ட அதைப்போல இருப்பதை உணரலாம்.

பல புதிய மாற்றங்களை நாம் பாவிக்கும்போது உணரலாம். உதாரணமாக control panel ல் உள்ள add/remove programs நீக்கப்பட்டுள்ளது. மற்றும் Run Command ஐ Start Menu வில் நாம்தான் கொண்டுவர வேண்டும்.

இது நல்லதா இல்லை தேவையில்லாததா என்றால் ” வித்தியாசமாகவுள்ளது” என்பதே எனது கருத்தாகும்.

செம்மைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்.

”நாங்கள் வெளியிட்டதிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த இயங்குதளம் இதுதானென” மைக்றோஸொப்ட் மார்தட்டிக்கொண்டிருக்கிறது. சரி, அப்படி என்னதான் இருக்கிறதென பார்க்கலாம்.

 • Active Directory Federation Service – administrator ஆல் பல கூட்டிணைப்புக்களிடையே மிக நம்பகமான ஓர் உறவை இலகுவாக்க உருவாக்கலாம்.
 • Read-Only Domain Controllers – எபபோது நமக்கு domain controller பாவிக்க தேவைப்படுகிறதோ அந்தந்த இடங்களில் மாற்றங்கள் செய்யமுடியாத domain controllerஐ பாவிக்கலாம். அதனால் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் புறநிலை பாதிப்புகளுக்கு உத்தரவாதமில்லை.
 • Server Core Installation – இந்த 2008 சர்வரின் installation உடன் தேவையான Windows network infrastructure services ஆன DHCP, DNS, file sharing, and domain controller functions ஆகியவையும் சேர்த்தே Install பண்ணப்படுகிறது.
 • Password and account lockout policy improvements – single domain ல் பல கடவுச்சொற்களையும் account policies களையும் நிர்வகிக்கலாம்.
 • Windows BitLocker Drive Encryption – முழு வன்தட்டையுமே என்கிரிப்ட் செய்யும் வசதியிருக்கிறது. இதனால் சர்வரிலிருந்து வன்தட்டை கழற்றி வேறு கணனியில் பாவித்து தகவல் திருட முடியாது.

புதிய மேம்படுத்தப்பட்ட Server 2008 Web Server – IIS 7.0

பல புதிய சேவைகளும் மேம்படுத்தல்களும் சர்வர் 2008 ல் இடம்பெற்றுள்ளது. அதில் முக்கியமானதொன்றாக Internet Information Server உம் உள்ளது. Windows Server 2008 ல் IIS Version 7 இடம்பெற்றுள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட இடைமுகப்பும் பாவிக்க இலகுவாக்கப்பட்டிருக்கிறது.


WDS மூலம் Client கணினிகளை வேகமான தகவல் பகிர்வு

Windows Deployment Service (WDS) எனும் புதிய பயன்பாடானது வலையமைப்பில் இணைந்துள்ள கிளையன்ட் கணினிகளுக்கூடான  மிக விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு வழிசமைக்கிறது. இது TFTP எனும் தொழில்நுட்பத்தை பாவிப்பதனால் இந்த சிக்கலில்லாத வேகமான தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.

பாதுகாப்பில்லாத Client PC க்களிடமிருந்து வலையமைப்பை NAP மூலம் பாதுகாத்தல்

Microsoft’s Network Access Protection (NAP) எனப்படும் கோட்பாட்டிற்கிணங்க செயற்படுவதால் பாதுகாப்பில்லாத கணனிகள் வலையமைப்பிலிருந்து மற்றய கணினிகள் மற்றும் சர்வரின் செயற்பாட்டை பாதிக்கதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வலையமைப்பில் இணைக்கப்பட்ட கணினிகள் சர்வரை தொடர்புகொள்ள நிர்வாகியினால் வரையறுக்கப்பட்ட சில நிபந்தனைகளை புர்த்தி செய்ய வேண்டும். இது சர்வருக்கு மிகவும் பாதுகாப்பானதொன்றாகும்.

இதன் மூலம் LAN மட்டுமல்ல VPN இணைப்பிலுள்ள கணினிகளினுடாகவும் தகுந்த பாதுகாப்பு சர்வருக்கு கிடைக்கின்றது.

Windows Terminal Service மேம்படுத்தல்கள்.

Termilan Server மிகவும் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

 • RemoteApp – வலையமைப்பில் இனைந்துள்ள கணனிகளுடன் சர்வரில் நிறுவப்பட்டுள்ள மென்பொருளை பகிர்ந்து கொள்ளலாம். Client PC பாவிப்பவர் இதற்கான ஐகானை சொடுக்குவதன் மூலம் முழு மென்பொருளையும் பயன்படுத்தலாம்.
 • Terminal Services Gateway – VPN மூலமாக அலுவலக வலையமிப்பிலில்லாமல்(LAN) வெளி அல்லது வீட்டிலிருந்து அலுவலக வலைப்பின்னலுடன் இணைந்து அலுவலக வேலைகளை செய்ய இது வசதியளிக்கின்றது.
 • Terminal Services Web Access – நாம் எங்கிருந்தாலும் இணைய உலாவிமூலம் நம் அலுவலக வலைப்பின்னலுடன் இணைந்துகொள்ளலாம். ஆனால் இதற்கும் மேலே கூறியதற்கும் வித்தியாசமுண்டு.

மேலே கூறிய வசதிகள் Citrix Metaframe ன் வசதிகள் போல Microsoft வடிவமைத்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் நிர்வாகம்  ஒரே இடத்தில்!

சர்வரின் இயங்குதள நிர்வாகத்தை ஒரேயிடத்தில் அதாவது ஒரு விண்டோவிலேயே பார்த்து நிர்வாகிக்கக்கூடிய தன்மை.

Windows Server Virtualization அம்சம்

Windows Server Virtualization அம்சமானது ஒரு சர்வரிலேயே பல சர்வர்ளை மாயநிலையில் (Virtual ) பயன்படுத்தலாம். இந்த அம்சமானது பரீட்சார்த்த வேலைகளுக்காக தேவையற்ற மேலதிக வளங்களை பயன்படுத்தும் தேவையினை இல்லாதொழிக்கிறது. இதனால் பெருமளவு செலவு கட்டுப்படுத்தப்படுகிறது.

இறுதியாக…

Windows Server 2008ல் பல விடயங்களை மேம்படுத்தியும் புதிதாக சேர்த்துமுள்ளார்கள். சிலர் இந்த வசதிகளுடைய விண்டோசை விரும்பி பயன்படுத்துவார்கள். சிலர் இதனை ஏற்றுக்கொள்ள அல்லது இந்த இயங்குதளத்திற்கு மாற யோசிப்பார்கள். உண்மையில் கணக்கில்லாத புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் Windows Server 2008ல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக பார்க்கத்துவங்கினால் முடிவில்லாமல் போகும்.

ஆனாலும், பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட பல மேம்படுத்தல்கள் Windows Server 2003 பயனர்களை சிறிது எரிச்சலடைய வைக்கிறது. காரணம் 2003 பதிப்பிலிருந்து முற்றாக வேறுபடுவதுதான். ஆனாலும் புதிதாக பாவிப்பவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.

உண்மையிலேயே இது பாதுகாப்பான இயங்குதளம்தானா ???

சிஸ்டம் நிர்வாகிகளின் கருத்துப்படி இது உண்மைதானென தெரியவருகிறது. சான்றாக வழமையாக Microsoft புதிய பதிப்பு வெளியிட்டு 2 நாட்களுக்குள் ஹேக் பண்ணிவிட்டோம், உடைத்துவிட்டோமென வரும் ஹேக்கர்களின் சத்தம் இது வெளியாகி மாதக்கணக்காகியும் காணவில்லையென்பதை பார்க்கும்போது உண்மையிலேயே இது Microsoft வெளியீடுகளில் சிறந்ததொன்றாக ஏற்றுக்கொள்ளலாம்.

பிழைகளையும் உங்கள் கருத்துக்களையும் அறியத்தாருங்கள். எனது கற்றலுக்கும் அவை உதவியாகவிருக்கும்.

மேலதிக விபரங்களுக்கு

Microsoft: Windows Server 2008 Homepage
Microsoft: Windows Server 2008 Highlighted Features

நன்றி
சுபாஷ்.

Advertisements

12 பதில்கள் to “Windows Server 2008 – முதல் பார்வை ( First Look )”

 1. தமிழ் போலீஸ் said

  நன்றி.

 2. தமிழ் போலீஸ் said

  நண்பா… தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளே எழுதுங்கள்… கும்மி பிநூட்டங்களுக்கு அடிமையாகி வேறு பாதையில் சென்று விட வேண்டாம்.

 3. ILA said

  Thanks Subash..

 4. சுபாஷ்… சபாஷ்…

  தமிழ் போலிஸ் கூறியதை வழிமொழிகிறேன்…. சில நேரம் மொக்கையாக புன்னகைக்க வைப்பதை விட… அறிவியல், தொழில் நுட்ப புரிதலுக்கு உதவிடும் பதிவுகள் ஆயிரம் மடங்கு சிறந்தவை… பின்னூட்ட எண்களோ, அல்லது வருகை புள்ளிகளோ எந்த வகையிலும் முக்கியத்துவம் பெறாது…

  தொடர்ந்து எழுதுங்கள்… தொகுப்புகளை ஆசிரியர்கள் உபயோகிக்கும் வகையில் Powerpoint அல்லது word மென்பொருளாகவும் இணைத்தால் உதவியாக இருக்கலாம்.

  வளம் சிறக்க வாழ்த்துக்கள்.

 5. Great Post yaar.
  A post with good pictures in proper place. Good narrating style. I like this post.

  4GB – I can’t download. But in my Office they have the copy of VHD. So, I can get it from them. Thanks for your extraordinary effort for this post.

  Enjoy the world with full of happiness
  By
  TamilNenjam @ VBTC

 6. அமிர்தராஜ் said

  /*
  தமிழ் போலீஸ்:
  தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளே எழுதுங்கள்…
  நடராசன்:
  மொக்கையாக புன்னகைக்க வைப்பதை விட…
  அறிவியல், தொழில் நுட்ப புரிதலுக்கு உதவிடும் பதிவுகள் ஆயிரம் மடங்கு சிறந்தவை…
  */
  முற்றிலுமாக ஆமோதிக்கிறேன். நல்ல பதிவு இது. தொடர்ந்து எழுதுங்கள்.
  சுபாஷிற்கு சபாஷ்!

 7. மோகன் said

  மிக அருமையாக உள்ளது உங்கள் பதிவு

 8. சுபாஷ் said

  தமிழ் போலீஸ்
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க ILA
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க நடராசன்
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க Vijai Balaji
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க அமிர்தராஜ்
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க மோகன்
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

 9. சுபாஷ் said

  வாங்க தமிழ் போலீஸ்
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க ILA
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க நடராசன்
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க Vijai Balaji
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க அமிர்தராஜ்
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  வாங்க மோகன்
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

 10. சுபாஷ் said

  என்மீது அக்கறைகொண்ட யாவருக்கும் நன்றிகள்.
  சும்மா பொழுது போகாதபோது நண்பர்களுடன் சேர்ந்து தமிழில் டைப் செய்து ( உண்மையிலேயே இது ஒரு பெரிய வேலை ) விளையாட்டாக செய்வதுதான் மொக்கைப்பதிவுகள். அந்த நேரத்தில் சீரியசாக இருந்து இம்மாதிரி பதிவுகளை டைப் செய்ய வராது. 😦
  வீட்டிலிருக்கும்போது நித்திரை வராமலிருக்கும் நாட்களில்தான் இப்படி உருப்படியா பதிவு போட வருகிறது.
  நண்பராக இருந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
  என்றும் அன்புடன்
  சுபாஷ்

 11. Hi. VijayBalaji is my Son name.
  by
  TamilNenjam

  We can post some mokkais when we are in jolly mood. That is not completely omitted.
  Lots of Mokkai virumbigal are there in Tamil Blogger’s communities.

 12. சுபாஷ் said

  //We can post some mokkais when we are in jolly mood. That is not completely omitted.
  Lots of Mokkai virumbigal are there in Tamil Blogger’s communities.//

  mmm yeahh TamilNenjam ( OKva??? 🙂 )
  thx brof

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: