சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Tiny XP – ஓர் அறிமுகம் – குறைந்த வேக கணனிகளுக்காக!!!

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 30, 2008

சில சமயங்களில் ஒரிஜினலைவிட டூப்ளிகேட்டுகள் நன்றாக அமைவதுண்டு. அதற்கு மிகச்சிறந்த உதாரணந்தான் இந்த Tiny XP. விண்டோஸ் XP யில் பல விதமான பயன்பாடுகள் உள்ளன. ஆனால் இவற்றில் 30% தையாகிலும் நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை. ஏன், அவற்றை பற்றி அறிந்துகொள்ளக்கூட நமக்கு நேரமிருப்பதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படுவதில்லை. ஆக நமக்கு தேவையான ஓரிரு பயன்பாடுகளுக்காக முழு Windows XP யையே லோட் பண்ணி கணினியின் தலையில் சுமையேற்றி விடுகிறோம். இதனால் நம்ம பிஞ்சு கம்பியுட்டருக்கு நாக்கு வெளியே தள்ளி டவுசர் கிழிந்து போகும்.

இப்படி டவுசர் கிழியும் கணினிகளை பார்த்து சகிக்கமாட்டாத நம்மள மாதிரி இல்லாத நல்லவங்க கொஞ்சப்பேர் சேர்ந்து இதுக்கெல்லா காரணமான XP யோட டவுசரை கிளிக்க முயன்று வந்த வெற்றிகரமான முடிவுதான் இந்த Tiny XP.

Tiny XP யில் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்பாடுகளைத்தவிர மிச்சமுள்ளதெல்லாவற்றையும் கடாசிவிட்டார்கள். மிக முக்கியமானதென கருதுபவற்றை மாத்திரம் விட்டுவைத்திருக்காங்க.

இணைய இணைப்பு வசதி, பிரிண்டிங் வசதி, போன்ற முக்கியமாக செயற்பாடுகள் மாத்திரமே இதில் உள்ளன. இதனால் நமது கணினியின் சுமை குறைக்கப்படுகிறது. அதேவேளை கணினியை வேகமாக செயற்படவும் வைக்கிறது.

Tiny XP யை பல வேர்ஷனாக வெளியிட்டிருக்கிறார்கள். 55 MB முதல் 600 MB வரையிலான CD Image ISO கிடைக்கின்றன. 400MB Hard Disk space, 40 MB Ram இலேயே ஆகப்போக 8 – 15 நிமிட நேரத்திலேயே இன்ஸ்டால் பண்ணக்கூடியதான XP என்றால் ஆச்சரியமானதுதானே!!! அப்போ நம்ம சாதாரண கணனிகள் ச்சும்மா அதிருமே!!! ( வழமையாக XP Full Install ஆனது 1100MB Hard disk space எடுத்துக்கொள்ளும். குறைந்தது 256MB Ram ல்கூட இழுத்திழுத்து வேலை பண்ணும். இன்ஸ்டால் பண்ண 20-60 நிமிடங்கள் ஆகும்)

நமக்கு தோதான வெளியீட்டை தரவியக்கிக்கொள்ளலாம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இவையனைத்தும் Pirate  Versions!!!.

Tiny XP Rev 09 ஆனது லேட்டஸ்ட்டாக வந்தது. இதில இப்ப பிளாட்டினம் வேர்ஷனேல்லாம் வெளியிர்றாங்க!!!. SP3 யும் சேர்த்து குடுக்கறாங்க.

Torrents web site எதிலும் Tiny Xp என குடுத்து நீங்க டவுண்லோடு பண்ணலாம். eXperiance என்று இருக்கற Tiny XP நல்லது.

மேலும் http://tinyxp.com/ க்கும் ஒரு விசிட் அடிங்க. youtube லயும் இத பத்தி தேடி இது எப்படி வேலை செய்யுதுனு பார்க்கலாம். மேலும் என்ன டவுட்டு வந்தாலும் இந்த வெப்புக்கு போய் பாருங்க. ஹிஹிஹி

நீங்க ஒரிஜினல் லைசன்ஸ் வச்சிருந்தா எப்படி இம்மாதிரியான XP யை எப்படி உருவாக்கலாமென ஒரு பதிவு ரெடி பண்ணிட்டிருக்கேன். ( உங்க ஒரிஜினல் சீடி ய வச்சுத்தான். ) இப்பத்தா ஒரு வார காய்ச்சலிலிருந்து கொஞ்சம் வெளிய வந்திருக்கேன். கொஞசம் லேட்டா போடுகிறேன்.

( — இப்படியெல்லா போடணும்ணு இப்ப யார்யா அழுதா ?

— எல்லாமொரு பில்டப்புதானே!!! )

உருப்படாதண்ணா ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார். அதுவும் நான் மற்ற பதிவுகளில் மிக விரும்பி படிக்கும்  A for Appleக்கு. அவருக்கு நன்றி சொல்லும் இதேவேளை நா யார கூப்பிர்றதுனு தெரியல. யோசிக்கறேன். கூப்பிட்டா வருவாங்களானும் பயமாயிருக்கு. ஏன்னா நா தமிழ் பதிவுக்கு வந்து 3 வாரம்தா ஆகுது. உதவிக்கு வந்தீங்கனா மிகவும் சந்சோஷப்படுவேன்.

நன்றி.

Advertisements

17 பதில்கள் to “Tiny XP – ஓர் அறிமுகம் – குறைந்த வேக கணனிகளுக்காக!!!”

 1. தமிழ் போலீஸ் said

  எங்கயோ தொலைஞ்சு போயுட்டேங்கன்னு நினைச்சுட்டேன்.

  தொடர்ந்து கண்காணிச்சுகிட்டு தான் இருக்கேன்… கவனமா இருக்கவும்

 2. ///மேலும் என்ன டவுட்டு வந்தாலும் இந்த வெப்புக்கு போய் பாருங்க. ஹிஹிஹி////

  பேரே விவகாரமா இருக்கே ??
  எங்க? எப்போ? புடிச்சப்பா இந்த மாதிரி சைட் எல்லாம் ??
  ஹி ஹி ..
  நல்ல தான் வைக்கிறாங்கையா பேர ??

 3. ///இதனால் நம்ம பிஞ்சு கம்பியுட்டருக்கு நாக்கு வெளியே தள்ளி டவுசர் கிழிந்து போகும்.

  இப்படி டவுசர் கிழியும் கணினிகளை பார்த்து சகிக்கமாட்டாத நம்மள மாதிரி இல்லாத நல்லவங்க கொஞ்சப்பேர் சேர்ந்து இதுக்கெல்லா காரணமான XP யோட டவுசரை கிளிக்க முயன்று வந்த வெற்றிகரமான முடிவுதான் இந்த Tiny XP.///

  கிழிந்த டவுசர் எங்கே ???
  அதை பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

  ????
  ??????
  ?????????

 4. ///( — இப்படியெல்லா போடணும்ணு இப்ப யார்யா அழுதா ?

  – எல்லாமொரு பில்டப்புதானே!!! )///

  கேள்வியும் கேட்டு அதற்க்கு பதிலும் போட்ட உங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்..
  இனி இதுபோல் தவறு செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்ள படுகிறது ..

 5. உடம்பு சரியானவுடன் இரண்டு மொக்கை பதிவுகள் போடுவதாக வேண்டி கொண்டீர்களே..
  ஒஹ்.. இது தான் அந்த முதல் ஒண்ணா (பதிவ) ??

 6. ///யோசிக்கறேன். கூப்பிட்டா வருவாங்களானும் பயமாயிருக்கு. ஏன்னா நா தமிழ் பதிவுக்கு வந்து 3 வாரம்தா ஆகுது////

  கூப்பிட்டால் கண்டிப்பாக வருவார்கள் தம்பி..
  கவலை படாமல் கூப்பிட்டு பார்..
  மேலும் இது வரை யார் யார் இந்த தொடர் விளையாட்டை விளையாடி இருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்..

  http://microblog.ravidreams.net/a-for-apple/

  ((((((((((((((எனக்கு தெரிந்த புது பதிவர் இவர்.. வேண்டும் என்றால் இவர்களை அழைத்து பாரேன்..
  http://vapurdhaa.blogspot.com))))))))))))))))))

 7. சுபாஷ் said

  வாங்க போலீஸ்கார்.
  வந்திட்டாங்கய்யா…. வந்திட்டாங்கய்யா…. !!!!

 8. சுபாஷ் said

  வாங்க உருப்படாதண்ணா.
  உங்களாலதா என் பிளாக்கே வாழுது!!! 🙂

  ஃஃஃ
  கிழிந்த டவுசர் எங்கே ???
  அதை பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..ஃ
  ஃஃஃஃஃ
  ஹாஹா.
  மைக்றோசொப்டுக்கே அனுப்பலாம்!!!!!

  ஃஃஃ
  கேள்வியும் கேட்டு அதற்க்கு பதிலும் போட்ட உங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்..
  ஃஃஃஃ
  சரிங்கோ!!!. உறுதி உறுதியென உறுதியாய் கூறுகிறேன்.!!!
  (எத்தினி நாளுக்கு??? )

 9. சுபாஷ் said

  ஃஃஃ
  உடம்பு சரியானவுடன் இரண்டு மொக்கை பதிவுகள் போடுவதாக வேண்டி கொண்டீர்களே..
  ஒஹ்.. இது தான் அந்த முதல் ஒண்ணா (பதிவ) ??
  ஃஃஃஃ

  இது முன்னாடியே பாதி டைப்படிச்சு சேவ் பண்ணது. நேத்துதா உங்க பின்னுட்டம் வர மறுபடியும் பிளாக்குகளுக்கு ஒரு விசிட் அடிச்சேன்

 10. ///கேள்வியும் கேட்டு அதற்க்கு பதிலும் போட்ட உங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்..
  ஃஃஃஃ
  சரிங்கோ!!!. உறுதி உறுதியென உறுதியாய் கூறுகிறேன்.!!!
  (எத்தினி நாளுக்கு??? )///
  மீண்டும் இப்பொழுது பதில சொல்லிவிட்டு மறுபடியும் கேள்வி கேட்டு உள்ளீர்கள்..
  இதையும் நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்.

 11. சுபாஷ் said

  ஆஆஆஹாஹாஹாஹா
  கிளம்பிட்டபாங்கய்ய்ய்ய்யாயாயாயாயாயாயாயா

 12. Vishnu said

  பல பயனுள்ள தகவல்கள் …

  நன்றிகளுடன்
  விஷ்ணு …

 13. சுபாஷ் said

  நன்றி விஷ்ணு.
  மீண்டும் வாங்க.

 14. Thanks dear dude

 15. சுபாஷ் said

  U r welcome Vijay

 16. sumi said

  Thanks.. Does anyone know where to download Tiny XP???

 17. சுபாஷ் said

  @sumi:
  u can download it from any torrent sites
  http://www.mininova.org/tor/1446524
  please read user’s comments b4 download

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: