சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

ஜிமெயிலின் மெருகேற்றப்பட்ட பயர்பாக்ஸ் தோல் நீட்சி

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 11, 2008

தலைப்பிலுள்ள எனது தமிழை நீங்கள் எப்படி விளங்கினீர்களோ தெரியாது. எதுக்கும் கீழே குடுக்கப்பட்டுள்ள படங்களை ஒருமுறை பார்த்துவிட்டீர்களென்றால் நான் எதை சொல்லப்போகிறேன் என்பது விளங்கிவிடும். Skin Extension ஐ எப்படி தமிழில் சொல்வது ????

சரி, விடுங்க, ஒரேமாதிரியான ஜிமெயிலை பார்த்து பார்த்து போரடிக்கிறதா உங்களுக்கு? ஒருமாதிரியுமில்லாத புதுமாதிரியாய் இருந்தால் நல்லதென்று நினைப்பவரா நீங்கள் ?  அப்படியென்றால் முதலில் கீழே உள்ள சுட்டியில் உள்ள நெருப்புநரி நீட்சியை சுட்டுக்கொள்ளவும்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2108

சரி. நிறுவிவிட்டீர்களென்றால் http://userstyles.org/ எனும் தளத்திற்குச்சென்று உங்களுக்கு பிடித்தமான  Skin ஐ தரவிறக்கி நீட்சியில் சேர்த்துக்கொள்ளவும். பல பயனாளர்கள் தாங்கள் சொந்தமாக உருவாக்கிய பல  Skins  இங்கே கிடைக்கும். நமக்கு தேவையானது இங்கே கிடைக்கும்.
http://userstyles.org/styles/8835.html

CSS ஐ இம்போர்ட் செய்தபின்னர் நீங்கள் எப்போது ஜிமெயில் சென்றாலும் கீழேயுள்ள படத்திலுள்ளவாறுதான் காட்சியளிக்கும்.

====================================================

இந்த நீட்சி  CSS கோப்பு மூலமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறது.  CSS பற்றி தெரிந்திருக்கவேண்டுமென எந்த அவசியமுமில்லை. ஆனால் தெரியுமென்றால் உங்கள் விருப்பம் போல  Skin ஐ மாற்றியமைக்கலாம். CSS பற்றிய இலவச புத்தகம் சக பதிவாளர் பகி அவர்களால்  இலவசமாக வழங்கப்படுகிறது.

http://oorodi.com/?p=510

நன்றி :  ஊரோடி பகி.

====================================================

எல்லா பயர்பாக்ஸ் வேர்ஷன்களுக்கும் ஒத்திசைவாக  புதிய skin நீட்சியை மீளாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக ஜிமெயில், ஜி காலண்டர் பாவனையாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். புதிய skin கண்ணைக்கவரும் விதத்தில் அழகாக செய்யப்பட்டுள்ளது.

CSS ல் பரிட்சயமுள்ளவர்கள் தாங்களாகவே இதில் பல மாற்றங்களை செய்ய முடியுமென்பது கூடுதல் சிறப்பு. கீழேயுள்ள படங்களை பார்த்த பின்னர் எப்படியென்று கூறுங்கள்.

இது ஜிமெயிலுக்கானது.

இது ஜி காலண்டருக்கானது,

இதேபோல youtube, Google என பல பிரபலமான தளங்களுக்கும் நீங்கள் செய்யலாம்.

உதாரணமாக

நான் இன்ஸ்டோல் செய்து பார்த்துவிட்டு பின்னர் நீக்கிவிட்டேன். ஜிமெயிலுக்கு நான் தண்டர்பேர்ட் பயன்னடுத்துவதால் இதனால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் ஜி காலண்டரின்  Skin  எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதை பாவித்த நண்பர் தனது பயர்பாக்ஸ் ஜிமெயிலை மெதுவாக லோட் பண்ணுகிறது என்றார். ஆனால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.நீங்களும் பயன்படுத்தி பார்த்துவிட்டு எப்படியென்று ஒரு கருத்து தெரிவிக்கலாமே ??

————–

டிஸ்கி –
கூகுள் நிறுவனத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Advertisements

15 பதில்கள் to “ஜிமெயிலின் மெருகேற்றப்பட்ட பயர்பாக்ஸ் தோல் நீட்சி”

 1. Z said

  Thanks for info.. Will try to use that :))

 2. மொத போனி ஆஜர் ஐயா

  கருத்து எல்லாம் எங்கிட்ட எதிர் பார்க்காதீங்க..
  சும்மா உள்ளேன் ஐயா போட தான் வந்தேன்..
  மன்னிச்சுக்குங்க…
  அப்புறம் இந்த நெருப்பு நரிய விட மாட்டீங்களா??

 3. அப்புறம் இந்த நெருப்பு நரில கூகுள் தமிழ் (http://www.google.com/transliterate/indic/Tamil#) எனக்கு வருவது இல்லை.
  அதற்கு என்ன காரணம் ??

 4. சுபாஷ் said

  //அப்புறம் இந்த நெருப்பு நரில கூகுள் தமிழ் (http://www.google.com/transliterate/indic/Tamil#) எனக்கு வருவது இல்லை.
  அதற்கு என்ன காரணம் ??//
  நீங்க விண்டோஸ் பாவிச்சா இப்படி பண்ணி பாருங்க. லினக்ஸ்க்கு இந்த பிரச்சனைக்கு Language ஐ add பண்ணா போதும். திரும்பவும் சிக்கல் வந்தா சொல்லுங்க, நெருப்புநரி 3 ல் இந்த பிரச்சனை இல்லையென்று நினைக்கிறேன்.

  Viewing Indic text

  1. Go to Start > Control Panel.
  2. If you are in “Category View” select the icon that says “Date, Time, Language and Regional Options” and then select “Regional and Language Options”.
  3. If you are in Classic View select the icon that says “Regional and Language Options”.
  4. Select the “Languages” tab and make sure you select the option saying “Install files for complex script and right-to-left languages (including Thai)”. A confirmation message should now appear – press “OK” on this confirmation message.
  5. Allow the OS to install necessary files from the Windows XP CD and then reboot if prompted.

  More :::: http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

  அவ்வளவே!!!!!!

 5. சுபாஷ் said

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி உ.ப நண்பரே!!!

  //அப்புறம் இந்த நெருப்பு நரிய விட மாட்டீங்களா??//

  எனக்கும் உங்கள மாதிரி COOL ஆன டீமில ஏதாச்சுமொரு வேல கிடச்சா நா ஏன் நெருப்புநரியோட HOT ல வேகணும் ???? ம்ம்ம்ம் எல்லாத்துக்குமொரு நேரம் வருமுனுட்டு இருக்கேன். ஹாஹா

 6. சுபாஷ் said

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஜி!!!

 7. எனக்கு Error காட்டுகிறது என்ன செய்யலாம் . . .

  இதனை நெருப்புநரி அனைத்து பதிப்புக்களிலும் நிறுவலாம் தானே ????

 8. சுபாஷ் said

  வாங்க மாயா,

  /////
  இதனை நெருப்புநரி அனைத்து பதிப்புக்களிலும் நிறுவலாம் தானே ????
  /////

  ஆம். 1.5 இலிருந்து 3.**** க்கெல்லாம் ஒத்திசைவானது.

  //எனக்கு Error காட்டுகிறது என்ன செய்யலாம் . . .////

  என்ன error என்பதை அறியத்தாருங்களேன்,
  வேறெதாவது skin extensions install பண்ணியிருந்தா அதை disable பண்ணி இதை மீண்டும் install பண்ணியும் பாருங்களேன்.
  முடிவிற்கு வெயிட்டிங்…

 9. நானும் இதை இன்ஸ்டால் செய்துவிட்டு அவஸ்தைப்பட்டுவருகிறேன்.

  மிகவும் வேகம் குறைவானது. இதை எப்படி எடுப்பது எனத்தெரியாமல் பேசிக் கூகுலில் மெயில் பார்க்கிறேன்.

  தெரிந்தால் கூறுங்கள்

 10. சுபாஷ் said

  வாங்க கூடுதுறை.
  //இதை எப்படி எடுப்பது //

  Open Firefox > Tools ( Menu Bar ) > and click Add Ons

  வரும் விண்டோவில் உங்களுக்கு உதவாதவற்றை நீக்கலாம் அல்லது இடைநிறுத்தலாம்.
  பின்னர் கட்டாயமாக firefoxஐ restart பண்ணவும்.

  எனது நண்பர்களும் இது சரி slow னுதா சொல்றாங்க

  தண்டர்பேர்ட் பயன்படுத்தலாமே!!!!!
  போர்ட்டபிள் வேர்சன் கிடைப்பதால் பென் டரைவில் எங்கு சென்றும் மெயில் பார்க்கலாம்.

 11. mathu said

  what is thunderbird?

 12. சுபாஷ் said

  Thank u for ur visit Mathu.
  //what is thunderbird?//

  Thunderbird is a Email Client Application like Outlook Express.
  Portable Thunderbird means, u dont need to install it, just copy that folder to ur pen drive and u can run it on any PC.
  and u have to activate POP2 settings in Gmail.
  Login ur gmail, and goto Settings > and enable POP3 Protocol.
  Its very easy.

  http://www.mozilla.com/en-US/thunderbird/

  Portable > http://portableapps.com/apps/internet/thunderbird_portable

  Have Fun and share ur experience

 13. Raghuraman said

  Hello Sir, I have an above website, this type of website I have got google adsense account. to this way How can I publish my website to the visitors, via notepad of other way. Have you know this type of google adsense work by earning money to publish website. If you know about this type of work please tell me about how to work with this by telling with tamil language or simple english. thanking you

 14. சுபாஷ் said

  Hello Raguram,
  If u need a website or blog for Ad sense, simply create a google ad sense account. thats free.
  http://www.google.com/adsense

  adn there are so many video tutorials in youtube. and now they introduce RSS feed adsense setup also.
  and there r many…
  http://www.google.lk/search?q=adsense+tutorial&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

  but i prefer yutube videos.

  and ill prepare a tamil tutorial post asap.
  Thank you for da visit.

 15. pligg.com said

  ஜிமெயிலின் மெருகேற்றப்பட்ட பயர்பாக்ஸ் தோல் நீட்சி…

  தலைப்பிலுள்ள எனது தமிழை நீங்கள் எப்படி விளங்கினீர்களோ தெரியாது. எதுக்கும் கீழே குடுக்கப்பட…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: