சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

என்னோட கம்ப்யூட்டர்ல இருக்கற டீ கப் ஹோல்டர் உடைஞ்சி போச்சி

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 9, 2008

— இமெயிலில் சுட்டது

இந்த உரையாடல் முழுக்க கற்பனையே! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சிரித்து விட்டு (ஒருவேளை வந்தால்!!) மறந்து விடுங்கள். ரொம்ப முக்கியமாக லாஜிக் பார்க்காதீர்கள். மின்மடலில் வந்த வேடிக்கையான உரையாடல்களை சற்று உல்டா செய்திருக்கிறோம்.

வாடிக்கையாளர் ஒருவர் கணிப்பொறி இயக்க சேவை மையத்தை தன் மொபைல் போனில் அழைக்கிறார். எதிர்முனையில் தேன் குரல் ஒன்று வழிகிறது.

“வணக்கம், நான் திவ்யா பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்?”

“கு..குட் மார்னிங்க் மேடம்.. ந..ந.ல்லாருக்கீங்களா?”

“நான் நலம். சொல்லுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை?”

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. மேடம். என் கம்ப்யூட்டருக்குத் தான்..”

“ஊப்ப்ஸ்.. புரிகிறது. சொல்லுங்கள்.”

“கம்ப்யூட்டர் வாங்கி ரெண்டு நாள் தான் ஆகுது மேடம். வேலை செய்ய மாட்டேங்குது. நெறய பிரச்சினை இருக்கு. மொத்தமா சொல்லட்டுமா.. ஒவ்வொண்ணா சொல்லட்டுமா”

“ஒவ்வொண்ணா சொல்லுங்க”

மானிட்டர்ல ‘கீபோர்டைக் காணோம்னு’ செய்தி வருது. நான் என்ன பண்ணட்டும்? ‘F1’ கீ கூட அமுக்கிப் பார்த்துட்டேன். ஹெல்ப் வரமாட்டேங்குது..”

சிலையானது கால் செண்டர் தேவதை.

“கம்ப்யூட்டருக்குப் பின்னாடி வெள்ளைக் கலர் கேபிள், கீபோர்டுலர்ந்து போறது ஒன்னு சொருகியிருக்கும். அதப் பிடுங்கி மறுபடியும் மாட்டுங்க”

“ஆங்…இப்போ சரியா வேலை செய்யுது. ஆனா இப்போ வேற ஒரு ப்ராப்ளம். Press any key அப்படின்னு சொல்லுது”

“சரிகீ அமுக்குங்க..”

“ஐயோ… என் கீபோர்டுல any key இல்லை.. நான் என்ன செய்யறது?”

“ஐயோ..ராமா.. ஏதாவது ஒரு கீ அமுக்குங்க”

“ஆங்க்.. இதுக்குத் தான் எக்ஸ்பர்ட்ஸ் வேணுங்கிறது.. இப்போ பூட் ஆகுது”

“விண்டோஸ்க்குள்ளே போனதுக்கப்புறம் பிரிண்ட் குடுக்கும்போது பிரிண்டரைக் காணோம்னு செய்தி வருதே மேடம்”

‘சரியான மாங்கா மடையனா இருப்பானோ..’ மனதில் நினைத்தவாறே, “சரி.. பிரிண்டரைத் தூக்கி கம்ப்யூட்டரை நோக்கித் திருப்புங்க..”

“ஆங்.. இப்படிப் பண்ணா கம்ப்யூட்டர் பிரிண்டரைக் கண்டுபிடிச்சிடுமா?”

“கண்டிப்பா..கண்டுபிடிக்கும்”

“என்னை ஏமாத்தாதீங்க மேடம்.. அது எப்படிக் கண்டுபிடிக்கும்?”

“இப்போ விண்டோஸ்ல புது ஆப்சன் வந்திருக்கு. ‘பிளக் அண்ட் பிளே’ மாதிரி ‘லுக் அண்ட் இன்ஸ்டால்’.

“ஓ.. டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச்..யா “ வியந்தவாறே பிரிண்டரோடு மல்லுக் கட்டினார் வாடிக்கை.

சிரிப்பலைகள் பரவின கால் செண்டரில்.

வாடிக்கை பிரிண்டரை நகர்த்தியதில் கேபிள் லூஸ் அதுவாக சரி செய்யப்பட்டு பிரிண்டரை இன்ஸ்டால் செய்தது விண்டோஸ்.

“வாவ்.. இட்ஸ் ரியல்லி கிரேட் மேடம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. இப்போ இன்னோரு பிராப்ளம்..”

மனதிற்குள் “பகவானே.. சீக்கிரம் என்னைக் காப்பாத்து”.

“ம்ம்..சொல்லுங்க”

“என்னோட கம்ப்யூட்டர்ல இருக்கற டீ கப் ஹோல்டர் உடைஞ்சி போச்சி. வாரண்டி பீரியட்ல இருக்கறதால மாத்தி தருவீங்களா?”

“கம்ப்யூட்டர்ல டீ கப் ஹோல்டரா?! வாட் டூ யூ மீன்? கம்ப்யூட்டர் வாங்கும்போது எதுவும் இலவசமா கொடுத்தாங்களா?

“இல்லை. அது கம்ப்யூட்டருக்குள்ளேயே அட்டாச் ஆகியிருக்கு”

“புரியலியே.. அதுல எதுவும் எழுதியிருக்கா?”

“ஆமாம். 52x ன்னு எழுதியிருக்கு”

கலகலத்தது கால் செண்டர். “ஓஓஓவ்வ்வ்வ்வ்வ்…”

“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”

“ஓ! அப்படியா மேடம். நாங்கூட அதை டூ இன் ஒன்னுன்னு நெனச்சேன். என்னோட ப்ராப்ளம் எல்லாம் தீர்ந்துடுச்சு. ரொம்ப நன்றி மேடம்”

“வெல்கம்”

ஆக்கம் – – ரிஷிகுமார்

===========

டிஸ்கி 1 : இமெயிலில் வந்த பல சுவையான செய்திகள் உள்ளன. ஆனால் அனுப்புவபர்கள் ஒரிஜினல் எங்கேயென்று போட மாட்டார்கள். அனேகமாக பதிவு அல்லது வெப்பிலிருந்து சுட்டிருப்பார்களென்று நினைக்கிறேன். ஆதலால் இதை ஆக்கியேர் / ஒரிஜினல் பற்றி தெரிந்தால்  தயவுசெய்து பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

டிஸ்கி 2 : டிஸ்கி என்றால் என்ன என்பதையும் தயவுசெய்து அறியத்தரவும். பல பதிவுகளில் பதிவிற்குக் கீழே ஏதாவது சொல்வதென்றால் டிஸ்கி போட்டு சொல்வார்கள்.

Advertisements

11 பதில்கள் to “என்னோட கம்ப்யூட்டர்ல இருக்கற டீ கப் ஹோல்டர் உடைஞ்சி போச்சி”

 1. Srini said

  🙂

  அந்த ‘டிஸ்கி’ எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நானும் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் பதில் கிடைக்கவில்லை.

 2. Muthu Kumar.N said

  Dear Friend,

  If you still dont get the ansewer for Disci its short form for Disclaimer

  I saw in PKP site.

  Yours

  Muthu Kumar.N-Singapore

 3. சுபாஷ் said

  வாங்க Srini, வாங்க முத்துக்குமார்,

  யப்பாடா, இதுதா டிஸ்கியா? இத வச்சுத்தா இந்தப்பாடா? ஹிஹி
  okok

  ரொம்ா நன்றி முத்துக்குமார்,

  தொடர்ந்து வாருங்கள்.

 4. டிஸ்க்லெமர் …
  இதை தான் சுருக்கி நெருக்கி வாளைச்சி ஓடிச்சி டிஸ்கீ னு சொல்றாங்க..
  என்ன கொடுமை சுபாஷ் இது?/
  அப்புறம் சும்மா நெட் ல மெயில் அ சுட்டு போடுங்க..
  யாரு கேக்க போறாங்க..
  ஆத்துல போற தண்ணி தான? யார் குடிச்சா என்ன ??

 5. சுபாஷ் said

  வாங்க உருப்படாதண்ணா !!!!! ( :)))) )

  //ஆத்துல போற தண்ணி தான? யார் குடிச்சா என்ன ?? //
  அதானே!!!!!!
  இனிமே பதிவுக்கு ஐடியா கிடைகடகலனா Draft ல இருக்கறதுல ஒவ்வொண்ணா இறக்கவேண்டியதுதா. ( இவன பதிவு போட சொல்லி இப்ப யார் அழுதானு மட்டும் கேக்கப்படாது.)))

 6. கணிப்பொறி தொடர்பான மூன்று ஆங்கில ஜோக்குகளையே எனது பாணியில் உரையாடல் வடிவில் தந்திருக்கிறேன். கரு மட்டுமே கலெக்ட் செய்யப்பட்டது. முழு உரையாடலும் என்னுடைய எழுத்துவகை. ஆங்கில ஜோக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே எழுதியிருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே ஜோக் பல வெப்தளங்களில் இருந்ததால் எது ஒரிஜினல் என்பது தெரியவில்லை. அதனால் கொடுக்க இயலவில்லை.

  இது நிலாச்சாரலில் பதிப்பிக்கப்பட்டது.
  http://www.nilacharal.com/ocms/log/07280811.asp

  அன்பன்
  ரிஷிகுமார்

 7. சுபாஷ் said

  வணக்கம் ரிஷிகுமார்.
  நிலாச்சாரலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் ஏனைய ஆக்கங்களும் சிறப்பாயுள்ளன. உங்கள் ஆக்கங்கள் சுவாரசியமானவை. நீங்கள் பிளாக்கரா?
  தகவலுக்கு நன்றி.

 8. சுபாஷ்,
  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! நான் வலைப்பதிவர் அல்ல. நிலாச்சாரலுக்கு மட்டுமே என்னுடைய ஆக்கங்களை அனுப்பி வருகிறேன். என்னுடைய ஆக்கங்கள் சிறப்பாக இருக்கிறதென்றால் அதற்கு முழுமுதற்காரணம் நிலாச்சாரல் ஆசிரியர் அவர்களையேச் சாரும். அவர்களது ஊக்கத்தின் பேரிலேயே தொடர்ந்து எழுதி வருகிறேன். நிலாச்சாரல் தள விதிகளின் படி ஒரு படைப்பை அப்படியே நகலெடுத்து மற்றொரு ப்ளாக்/வெப்சைட்டில் வெளியிடக்கூடாது. தங்களுக்கு பிடித்திருக்கிறதென்றால் லிங்க் மட்டும் வெளியிட்டு ஊக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  உங்கள் தொடர்ந்த ஆதரவை எதிர்நோக்கி..
  அன்பன்
  ரிஷிகுமார்

 9. சுபாஷ் said

  நன்றி ரிஷிகுமார்.
  இமெயிலில் வந்ததை அப்படியே இங்கு பதிவிட்டேன்.
  மெயிலில் எந்த தகவலும் இல்லை,உங்கள் பெயரைத்தவிர.
  ஆகவே உங்கள் பெயரையும் சேர்த்துதான் வெளியட்டிருக்கிறேன்.
  இனி இம்மாதிரி நடக்காமல் பார்க்கிறேன்.
  அன்புடன் சுபாஷ்.

 10. புரிந்துகொண்டேன். மிக்க நன்றி சுபாஷ்.

  அன்பன்
  ரிஷிகுமார்

 11. raman said

  டிஸ்கி ‍ என்பதன் சுருக்கம்.. disclaimer.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: