சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள மிதோரி மென்பொருள் மைக்ரோசொப்ட்டால் உருவாக்கம்

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 6, 2008

உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் “விண்டோஸ்’ மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான “மிதோரி’ எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

இந்த புதிய “மிதோரி’ கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு “விண்டோஸ்’ மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது.

இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு “மிதோரி’ தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இம்மென்பொருளானது கையில் எடுத்துச் செல்லக் கூடிய “லப் டொப்’ கணினிகளிலான செயற்பாட்டு குறைபாடுகள் மற்றும் தரவுகள், படங்கள், ஆவணங்கள் என்பனவற்றை பரிமாறிக் கொள்வதில் எதிர்கொள்ளும் தடைகள் என்பனவற்றுக்கு சிறந்த பரிகாரம் அளிப்பதாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.

மிக நிறை குறைந்த, காவிச் செல்லக் கூடிய கணினி செயற்பாட்டு முறைமையை உருவாக்கும் இலக்கில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள மிதோரியானது, மாறுபட்ட பல கணினி பிரயோகங்களை இலகுவாக கையாளக் கூடிய ஒன்றாக அமையும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய கணினிகளின் விற்பனையுடன் 80 சதவீதமான “விண்டோஸ்’ விற்பனையும் இடம்பெற்று வருவதால், புதிதாக “மிதோரி’ மென் பொருளை பாவனைக்கு கொண்டு வருவதில் பெரும் நடைமுறைச் சிக்கல் நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது.

thanks : lankasri.com

Advertisements

7 பதில்கள் to “விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள மிதோரி மென்பொருள் மைக்ரோசொப்ட்டால் உருவாக்கம்”

 1. நல்ல தகவல், நண்பரே. எப்படி இருப்பினும் லினக்ஸிற்கு ஈடகாது, விண்டோஸ். ஒரு புது மொழி பார்த்தேன், “Only Window, No doors” – இது தான் விண்டோஸ், டெவலப்பர்களுக்கு உதவது. மிதோரி எப்படி செயல்பட போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

  http:\\tamil-software.blogspot.com
  & http:\\getitfreely.co.cc

 2. சுபாஷ் said

  //“Only Window, No doors”//
  ஹாஹா உண்மைதானுங்க.
  வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி பாபு

  மிதோரி ஆனது Ee PC க்கு போட்டியென்று நினைக்கிறேன்

 3. வாழ்க தமிழ்க்கு தங்களின் வருகையும் கருத்துக்கும் மிக்க நன்றி.
  ஆஸ்கார்பாரதி

 4. hisubash said…

  தங்கள் பாராட்டுக்கு கோடி நன்றி

 5. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றிய

  விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

  விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

  உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

  ஒன்றுபடுவோம்
  போராடுவோம்
  தியாகம் செய்வோம்

  இறுதி வெற்றி நமதே

  மனிதம் காப்போம்
  மானுடம் காப்போம்.

  இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

 6. சுபாஷ் said

  //hisubash said…

  தங்கள் பாராட்டுக்கு கோடி நன்றி//

  ஆஹா, மிக்க நன்றி ஆஸ்கார்பாரதி.
  இப்படியே எல்லாரும் பண்ணா எவ்வளவு வசதி.

  நிஜமாகவே தங்களின் வருகையினால் மகிழ்ச்சி தோழரே.

 7. சுபாஷ் said

  //கோவை விஜய் said
  பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றிய

  விழிப்புணர்வுக்காக//

  நினைவுட்டியமைக்கு மிக்க நன்றி கோவை விஜய். இந்த விழிப்புணர்வு உணர்வு காலம் கடந்து இப்போதாவது சூடு பிடித்திருப்பது பாராட்டத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: