சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

 • ஓகஸ்ட் 2008
  தி செ பு விய வெ ஞா
      செப் »
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728293031
 • Top Posts

 • Top Clicks

  • எதுவுமில்லை
 • Please Don’t Copy

  Page copy protected against web site content infringement by Copyscape
 • Blog Stats

  • 47,291 hits
 • உலகம் சிறியது

 • Advertisements

வணக்கம் வந்தனம்

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 2, 2008

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

தட்ஸ்தமிழ்.வணி மூலமாக முதல் முதலில் தமிழ் பதிவுகளை காணும் வசதி கிடைத்தது. வழமையாக தட்ஸ்தமிழில் செய்திகளை மட்டுமே பார்க்கும் நான் யதேச்சையாக பிளாக் தொகுப்பில் என் மவுஸ் சொடக்குப்போட்டு சோம்பல் முறிக்க, வாழ்கையில் முதன் முதலாக முழுவதும் தமிழால் ஆக்கப்பட்ட ஒரு பதிவிற்குள் சென்றேன். அந்த முதல் பதிவு ஞாபகத்திலில்லை. அந்த பதிவில் ஈர்க்கப்பட்டு அதிலுள்ள மற்ற பதிவுகளுக்கான தொடர்புகளைப்பெற்று கிட்டத்தட்ட ஒரு பதிவுக்கிடங்கை என் புக்மார்க்குகளாக ஏற்றிக்கொண்டேன்.இப்படியாக தினமும் பதிவுகளைப் படிப்பது வாடிக்கையாகிவிட்டது.

பின்னர் தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற திரட்டிகளின் அறிமுகமும் கிடைக்க பதிவுகளை படிக்க எந்த சிக்கலும் இல்லாமல் எல்லாம் இலகுவாகிவிட்டது. போகப்போக நானும் இப்படியான பதிவுகளை தமிழில் வெளியிட வேண்டும் என்ற ஆவல் உண்டாக அது இன்றைக்கு கோலாகலமாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

முதலில் எனது வெப் சர்வரில் வேர்ட் பிரஸ் தமிழில் வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்க ஒருவழியாக இந்த பதிவை துடங்கினேன். எனது ஆங்கிலப்பதிவில் யுனிகோடு தமிழ் வேலை செய்யவே இல்லை. காரணத்தை துப்பு துலக்கிக்கொண்டு இருக்கிறேன்.

என்னையும் ஒரு ஆரம்ப நிலை பதிவாளராக ஏற்றுக்கொள்வீர்களென்று நம்பி எனது கன்னி முயற்சியை தொடங்குகிறேன்.

நன்றி.

8 பதில்கள் to “வணக்கம் வந்தனம்”


 1. //என்னையும் ஒரு ஆரம்ப நிலை பதிவாளராக ஏற்றுக்கொள்வீர்களென்று நம்பி எனது கன்னி முயற்சியை தொடங்குகிறேன்.//

  வருக. வருக. வணக்கம். இலங்கையிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் ஊரில்தான் கோப்பி-பேஸ்ட் என்பீர்கள். எங்கள் ஊர்களில் காப்பி-பேஸ்ட் என்போம். அதை வைத்து உத்தேசமாக அடித்து விட்டிருக்கிறேன்.

  உங்கள் பதிவுகளில் கலக்கல்களை எதிர்பார்த்துக் காத்திருப்போர் பட்டியலில் நானும் ஒருவனாக

 2. சுபாஷ் said

  நன்றி தமிழ்நெஞ்சம் அவர்களே,
  வாழ்க்கையில் பெற்ற முதல் பின்னுட்டம். மறக்கமாட்டேன்.
  கண்டிப்பாக என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன். ஆனால் உங்கள் பதிவுகளின் நடையை பின்பற்றுவது தவிர்க்க முடியவில்லை.
  வருகைக்கு நன்றி.

 3. வருக வருக என வரவேற்கிறேன்.

  பதிவுலகிற்கு

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

 4. சுபாஷ் said

  தங்களின் மேலான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவை விஜய்.

 5. Srini said

  சுபாஷ், பதிவு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.

  உங்கள் வெப் சர்வரில் தமிழ் யுனிகோடு ஏன் வேலை செய்யவில்லை என்று கண்டுபிடித்து விட்டீர்களா?

  Srini
  http://srinig.wordpress.com/

 6. சுபாஷ் said

  தங்களின் மேலான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Srini.

  // உங்கள் வெப் சர்வரில் தமிழ் யுனிகோடு ஏன் வேலை செய்யவில்லை என்று கண்டுபிடித்து விட்டீர்களா? //

  ஆம். MySql ல் encoding method ஐ UTF-8 க்கு மாற்றிவிட்டேன்
  விரைவில் அங்கேயே குடிபுகலாமென்றிருக்கிறேன்.]

 7. Srini said

  //MySql ல் encoding method ஐ UTF-8 க்கு மாற்றிவிட்டேன்//

  அதே தான்!

  உங்கள் பதிவுகள் சுவாரஸ்யமாகவும், உபயோகமான தகவல்களைக் கொண்டும் உள்ளது. தொடரட்டும்…

 8. சுபாஷ் said

  வாழ்த்துக்களுக்கு நன்றி Srini,
  மீண்டும் வருக

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: