ஏன் வேலை மெனக்கட்டு விண்டோஸ் 2008 சர்வரை இன்ஸ்டால் செய்து தேவையில்லாம வேர்க்ஸ்ரேஷனாக மாற்றணும ? என் கிட்ட இருக்கிய விஸ்டாவோ XP யோ நல்லாத்தானே வேலை பண்ணிடிருக்கு ???
இப்படி நீங்க மனசுக்குள்ள கேக்குறது டெலிபதில எனக்கும் புரோட்காஸ்ட் ஆகுது. ஹாஹா.
விஷயம் என்ன என்று பார்த்தா,
விண்டோஸ் 2008 சர்வர் ஆனது விஸ்டாவின் சர்வீஸ் பக் 1 உடன் உள்ள அத்தனை விடயங்களையும் உள்ளடக்கியதுடன் சில மேலதிக வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனா இதெல்லாதையும் விட முக்கியமா செம வேகத்துடனும் நம்பகத்தன்மையுடனும் செயல்படும.
Dell XPS M1710 test bed (Core 2 Duo T7200 at 2GHz, 2GB RAM, 80GB 7200RPM disk) இந்த வகை கனிணியில் பரீட்சித்துப் பார்த்தபோது சுமார் 11-17% 2008 வேர்க்ஸ்ரேஷன் சிறப்பாக செயல்படுவதை அவதானிக்கலாம்.
முடிவுகள்
விஸ்டாவை விட 10 வீதம் வேகமாகவும் விஸ்டா இயங்குநேரத்தில் தேவைப்படும் ரேம் அளவில் தோராயமாக 2/3 ரேமை மட்டுமே பயன்படுத்துகிறது.

மேலும் பல செய்முறை விளக்கங்களுடன் இதை எப்படி நிறுவுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்,
இனியென்ன install Win 2k8 Server as a workstation.




