Windows Server 2008 இல் Wireless Network
பதிந்தவர் சுபாஷ் மேல் அக்டோபர் 7, 2008
இந்த முறை விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பை செயற்படுத்துவது பற்றி பார்க்கலாம். வழமைபோல இந்த செயன்முறையை நீங்கள் VM Ware அல்லது Virtual PC போன்ற போலி இயங்குதள நிர்வாக மென்பொருட்கள் மூலம் பயிற்சிபெற முடியாது. ( ஆனால் NAT மூலமாக எப்படி செய்யலாம்) கண்டிப்பாக உங்கள் கணனியில் இரண்டாம் நிலை இயங்குதளமாக நிறுவிக்கொள்ளலாம். அல்லது பயிற்சிக்காக ஓர் வன்தட்டை பயன்படுத்தலாம்.
முக்கியமாக மடிக்கணனியில் விண்டோஸ் சர்வர் 2008 பயன்படுத்துவபர்களுக்கு உதவியாக இந்தப்பதிவு இருக்குமென எண்ணுகிறேன்.

சரி விடயத்திற்கு வருவோம். நீங்கள் உங்கள் கணனியில் Wireless Network Adapter ஐ நிறுவிய பின்னர் Wireless NIC மூலமாக கம்பியில்லாத வலையமைப்புடன் தொடர்புகொள்ள முயற்சிக்கவும். இப்போது இதன் status ஆனது Disabled ஆகவிருப்பதை உணர்வீர்கள்.
Wireless Network வசதியுள்ள மடிக்கணனிகளில் விண்டோஸ் சர்வர் 2008 நிறுவப்பட்டிருந்தால் அதன் Wireless Connection ஆனது Disabled ஆகவிருப்பதை காணலாம்.
ஏன் இப்படி? வேறொன்றுமில்லை. வழக்கமான நிலையில் Disabled ஆக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை இயங்குநிலைக்கு கொண்டுவர சில படிமுறைகளை கையாளவேண்டும். முக்கியமாக இதற்குண்டான கோப்புகளை நாமாக நிறுவ வேண்டும். விண்டோஸ் சர்வர் 2008 இன் அழகே இதுதான். நிறைய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் எல்லாம் Disabled ஆகவிருக்கும். நமக்கு தேவையானவற்றை மட்டும் நிறுவிக்கொண்டால் போதுமானது. இதனால் பல தேவையற்ற அம்சங்கள் மூலமாக கணனியின் செயல்பாடு விரயமாக்கப்படமாட்டாது.
இப்போது நாம் கோப்புகளை நிறுவும் முறையை பார்க்கலாம்.
Start > Network க்கு செல்லவும்
Network and Sharing Center எனும் பொத்தானை அழுத்தவும்.
Tasks என்பதற்கு கீழுள்ள Manage Network Connections க்கு செல்லவும்
Network Connections பக்கத்தை திறந்து கொள்வீர்களாயின் Wireless Network Connection ஆனது Disabled ஆகவிருப்பதை பார்க்கலாம். நீங்கள் right click மூலம் இயங்குநிலைக்கு வரவழைக்க முற்பட்டாலும் மீண்டும் Disable ஆக மாறிவிடும்.
இவ்வம்சத்தை இயங்குநிலைக்கு கொண்டுவர Wireless LAN Service Feature
என்பதை நிறுவ வேண்டும்.
1. Start > Server Manager , or Start > Administrative Tools > Server Manager எனும் வழிமுறைகளட மூலம் Server Manager ஐ திறக்கவும்.

2. இடது பக்கமுள்ள பட்டியலிலிருந்து Features என்பதை தெரிவு செய்யவும்.

3.வரும் சாரளத்தில் Add Features என்பதை தெரிவு செய்யவும்.

4. இப்போது பயன்படுத்தத்தக்க அம்சங்கள் கொண்ட ஒரு பட்டியல் கிடைக்கும். அதில் scrole செய்து Wireless LAN Service checkbox ஐ தெரிவு செய்து Next ஐ சொடுக்கவும்.

5. அடுத்து வரும் Confirm Installation Selections சாரளத்தில் Install ஐ சொடுக்கவும்.

நிறுவும் பணி துவங்கிவிடும்.

நிறுவுதல் முடிவுற்றதும் Close Button ஐ சொடுக்கவும்.

6. மீண்டும் Network Connections பக்கத்திற்கு செல்லவும். அங்கு Wireless Network Connection இன் status ஆனது “Disabled” என்பதிலிருந்து ” Not Connected” என மாறியிருக்கும். அப்படி மாறவில்லையெனில் Wireless Network Connection மீது Right Click செய்து Enable என்பதை சொடுக்கவும்.

7. இனி Wireless Network இனை நாம் தாராளமாக இயங்கச்செய்யலாம். Wireless Network Connection மீது Right Click செய்து Connect/Disconnect என்பதை தெரிவு செய்யவும்.

8. இப்போது பயன்படுத்தக்கூடிய wireless connection களின் பட்டியல் ஒன்று கிடைக்கும். அதில் ஒன்றை தெரிவு செய்து Connect என்பதை தெரிவு செய்யவும். சிலவேளைகளில் உங்களின் Wireless Connection இல் ஏதாவது பாதுகாப்பு அமைத்தல்கள் இருப்பின் shared key யை உள்ளிடச்சொல்லி கேட்கும். அல்லது சில Wireless Network க்குகள் SSID இனை மறைத்து வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கயே சுயமாக wireless connection ஐ நிறுவ அல்லது அமைத்தெடுக்க வேண்டி வரலாம்.

Wireless Networking சரியாக நிறுவப்பட்டபின்னர் கீழே படத்தில் காட்டியவாறு காணப்படும்.

சுருக்கம் -
சாதாரணமாக விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பு Disabled ஆக இருக்கும். அதை எவ்வாறு இயங்குநிலைக்கு கொண்டுவருவதென இந்தப்பதிவு விளக்குகிறது.
-
ஆக்கம் -
சுபாஷ்.
டிஸ்கி 1-
அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.
தமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும் உதவியாகவிருக்கும். நன்றி.
ஊசாத்துணை-
http://technet.microsoft.com/en-us/network/bb530679.aspx
http://www.way2books.com/2008/06/windows-server-2008-networking-and.html – Free e Book
படங்கள் -
http://www.samparkit.com/files/wireless_network.jpg
டிஸ்கி 2 -
நேற்று US Robotics Wireless ADSL2 Router வாங்கினேன். அதனால்தான் இந்த Win 2k8 Wireless Network பரிசோதனைகள். இதுவரை இணைய அகலப்பட்டை இணைப்பிற்கு 4G தொழில்நுட்பமான WiMax பாவித்து வந்தேன். இனி பத்தாம்பழைய தொழில்நுட்பமான ADSL ற்கு மாறலாமென தீர்மானம். அதனால்தான் ADSL ற்கு apply செய்துவிட்டு ADSL Router ஐயும் வாங்கி வந்திருக்கிறேன். புதிய தொழில்நுட்பத்திலிருந்து பழையதிற்கு ஏன் மாறுகிறேனென எனக்கே குழப்பம்தான். ஆனால் ADSL ஆனது நான் தற்போது பாவிக்கும் 3.5G தொலழில்நுட்ப HSPA ஐயும் 4G தொலழில்நுட்ப WiMax ஐயும் விட Flexible ஆக இருக்கிறது. எப்படியென விளக்கமாக இன்னொரு பதிவில் சொல்லுகிறேன். இரன்டிற்கும் Bill கட்டுவதை விட பழைய ADLS மேலென எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் எப்பவும் எனது ஆதரவு 3.5 Genaration HSPA ற்குதான். 4G கூட இதற்குபிறகுதான். ஏனென பிறகு சொல்கிறேன்.






murugesanpillayar சொன்னார்
payanaana seithi nandri
Anban
murugesan pillayar
kuala lumpur
malaysia
தமிழ் போலீஸ் சொன்னார்
தாங்க்ஸ் பா..
உருப்புடாதது_அணிமா சொன்னார்
எனக்கு இது பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது..
( ஒன்னிமே புரில… ஏதோ உருப்படியான மேட்டர்ன்னு மட்டும் தெரியுது.. பட் அது என்னன்னு தான் தெரியல)
நமக்கு தெரியாத விசயத்தில் கும்மி அடிக்க கூடாது என்பதால், இத்தோடு எனது பின்னூட்டத்தை நிறுத்தி கொள்கிறேன்)
நான் தற்பொழுது எனது மடி கணினியில் உபயோகிப்பது விண்டோஸ் சர்வர் 2008 தான்..
ஆனால் என்னுடைய கணினியில் Wireless Connection தனியா பட்டன் உள்ளது.. அதனால் எனக்கு பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்..
என்னது இது?/ நான் தானா இப்படி அழகாக, அருமையாக, விசித்திரமாக, உபயோகமாக பின்னூட்டமா ?? நம்பவே முடியலயே…
மோகன் சொன்னார்
//உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
என்னது இது?/ நான் தானா இப்படி அழகாக, அருமையாக, விசித்திரமாக, உபயோகமாக பின்னூட்டமா ?? நம்பவே முடியலயே…//
அட, ஆமா. ரிப்லீஸ் பிலீவ் இட் ஆர் நாட் க்கு இதை சொல்லிடலாமா?
மோகன் சொன்னார்
சுபாஷ் எனக்கு இதை பத்தி தெரியாததனால ஒன்னும் சொல்லலை.அப்போ மத்தது மட்டும் தெரிஞ்சி தான் சொன்னியானு கேக்க கூடாது.
ஆனா விண்டோஸ் 2008 சர்வர் க்குத்தானே? அப்போ எதுக்கு அணிமா மடிக்கணினியில அதை வச்சி இருக்கார்?
உருப்புடாதது_அணிமா சொன்னார்
/////ஆனா விண்டோஸ் 2008 சர்வர் க்குத்தானே? அப்போ எதுக்கு அணிமா மடிக்கணினியில அதை வச்சி இருக்கார்?
///////////
நான் தான் சொல்லிட்டேன்ல..
எனக்கு ஒன்னிம் தெரியாது,,
இப்படி தான் வாய வுட்டு புன்னாக்கிகுவேன்
சுபாஷ் சொன்னார்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி murugesanpillayar
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் போலீஸ்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அணிமா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்
மோகன் சொன்னார்
நண்பர் அடலேறு சொல்லி இருப்பது என்னவென்றால்:
தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..
தமிழ் ஸ்டுடியோ…
நிகழ்ச்சி பற்றி:
குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…
தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு
மேலும் விபரங்களுக்கு:
9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬
உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….
அடலேறு
//உருப்புடாதது_அணிமா,இங்கிலீஷ்காரன்,சுபாஷ்,அது சரி கூகிள் வலைபக்கத்தில் இயங்கும் பதிவுகளில் பின்னுட்டத்தில் அழைப்பு அனுப்பும் வசதி என் நிறுவனத்தில் தடை செய்ய பட்டுள்ளதால் தான் உங்கள் வலை பக்கத்தில் அழைப்பு விடுக்க முடியவில்லை.இதனை அழைப்பக ஏற்று வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//
நீங்களும் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
சுபாஷ் சொன்னார்
தகவலுக்கு நன்றி மோகன்.
Vishnu சொன்னார்
நல்ல பயனுள்ள தகவல் நண்பரே ..
அதிக விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ..
மிக்க நன்றிகளுடன் ..
Raghavan சொன்னார்
Well written and easy to understand. Today only I was thinking how to put a simple wireless networking to be used within the department without going into the internet connection. Thanks a lot. Raghavan, Nigeria
மின்னல் சொன்னார்
செக்யுரிட்டி எனெபில் நெட்ஓர்க் இல்லிகலா கனெக்ட் பண்ண வழியிருக்கா..
சுபாஷ் சொன்னார்
@மின்னல்,
நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?
ஃஃசெக்யுரிட்டி எனெபில் நெட்ஓர்க் இல்லிகலா கனெக்ட் பண்ண வழியிருக்காஃஃஃ
இல்லிகலா – இல்லையென்றால் எனவா?
or
இல்லிகலா – illegal எனவா ?
—
செக்யுரிட்டி எனெபில் நெட்ஓர்க் இல்லையென்றால் பார்ஸ்வேர்டு குடுப்பது ஒதன்டிகேஷன் சிக்கல் இல்லை. ஆனால் சர்வர் 2008ல் கண்டிப்பாக செக்கியூரிட்டி எனேபிள் பண்ணியிருக்கணும்.
செக்யுரிட்டி எனெபில் நெட்ஓர்க் illegal ஆக கனக்ட் பண்ண ட்ரை பண்ணிடிருக்கேன். Hack பண்ண முடிஞ்சா அடுத்த பதிவு அதுதா!!!
WAN Hacking (or W LAN ) பற்றி இணையத்தில் மேய்ந்து கொஞ்சம் தேடி எடுத்திருக்கிறேன். டைம் கிடைக்கறப்ப பண்ணி பாக்க வேண்டியதுதான்.
அப்பதா அவற்றிலிருந்து எப்படி பாதுகாப்பதென வழி கிடைக்கும்.
நீங்களும் தேடி பாருங்கள்.
சுபாஷ் சொன்னார்
Thanks for the visit and comment Raghavan.
சுபாஷ் சொன்னார்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஷ்னு
மின்னுது மின்னல் சொன்னார்
செக்யுரிட்டி எனெபில் நெட்ஓர்க் illegal ஆக கனக்ட் பண்ண ட்ரை பண்ணிடிருக்கேன். Hack பண்ண முடிஞ்சா அடுத்த பதிவு அதுதா!!!
//
ம் waiting
ஃபிரியா wireless LAN தூரத்தில் இருப்பதால் ஸ்பிட் இல்லை அதான் பக்கத்தில் உள்ள செக்யுரிட்டி LAN ஐ hack பண்ண முடியுமானு கேட்டேன்..
hack பண்ண முடிஞ்சா இங்கையும் கொஞ்சம் தட்டுங்க ஹி ஹி மெயில் தான்
சுபாஷ் சொன்னார்
கண்டிப்பாக மின்னல் !!