சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

செப்டம்பர், 2008 க்கான தொகுப்பு

விண்டோஸ் Vista விலிருந்து XP க்கு செலவில்லாமல் டவுண்கிறேட் பண்ணுவது எப்படி?

பதிந்தவர் சுபாஷ் மேல் செப்டம்பர் 28, 2008

நீங்கள் புதிதாக கணனி (மடிக்கணினி) வாங்கினால் இப்போது அதனுடன் லைசன்ஸ் பெறப்பட்ட Vista Business அல்லது Vista Ultimate தருவார்கள். ஆனால் நமக்கு விஸ்டா வேண்டாம், XP  தான் வேண்டுமென நினைத்தால் துளி செலவில்லாமல் லைசன்ஸ் வேர்சனை நிறுவிக்கொள்ளலாம்.

நிறைய கணினி பயனர்கள் இன்னும் Vista பாவிக்க மறுக்கிறார்கள். காரணம் இதற்கு வந்த எதிர்மறையான கருத்துக்களே. பாவிக்க கடினம், கூடுதலான வன்பொருள் தேவை, நிலையான தன்மையின்மை, ஒத்திசைவின்மை மற்றும் விலை போன்ற காரணங்களை சர்வ சாதாரணமாக பல வலைத்தளங்கள் குறிப்பிட்டிருந்தன.

முன்னர் HP, Dell மற்றும் Lenovo போன்ற மடிக்கணினிகளில் Windows XP யை pre installed ஆக தந்தார்கள். இப்போது Windows Vista தருகிறார்கள். ஆனாலும் மேலே சொன்ன காரணங்களால் பயனாளர்கள் இனனும் XP தான் வேண்டுமென நினைக்கிறார்கள். Microsoft கூட இந்த நிலமையை உணர்ந்து Vista Business அல்லது Vista Ultimate உரிமம் வைத்திருப்பவர்கள் துளி செலவில்லாமல் தாராளமாக XP Professional ஐ நிறுவிக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது

சரி இவர்களுக்குதான் இந்தப்பதிவு!!! எப்படி நாம் விண்டோஸ் விஸ்டாவிலிருந்து எக்ஸ்பீக்கு உரிமத்துடன் மாறுவதென பார்க்கலாம்.

இதற்குமுன்னர் Microsoft Downgrade பற்றி என்ன சொல்லியிருக்கிறார்களென பாருங்கள்.

Desktop PC பாவனையாளர்கள் தங்களின் உரிமம் பெறப்பட்ட Vista Business அல்லது Vista Ultimate ஐ இதனது பயனர் வரைமுறையை மீறாதவண்ணம் டவுண்கிறேட் பண்ணலாம். ஆனால் Vista Business அல்லது Vista Ultimate உரிமம் வைத்திருப்பவர்கள் மாத்திரமே Windows XP Pro வுக்கு மாறலாம். இந்த டவுண்கிறேட் உரிமம் Windows XP Pro 32 bit, 64 bit மற்றும் XP Tablet PC Edition போன்றவற்றிற்கு செல்லுபடியாகும். தவிர Windows Vista Home Basic மற்றும் Windows Vista Home Premium உரிமம் வைத்திருப்பவர்க்கு இந்த சலுகை கிடையாது.

சரி, இனி இதனை எப்படி செயல்படுத்துவதென பார்க்கலாம்.

  1. தற்போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் விண்டோசுக்கான Product Key யை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக நிறைய மென்பொருட்கள் இணையத்தில் குவிந்திருக்கின்றன..
  2. இப்போது உங்களிடமுள்ள பைரேட் அல்லாத XP Setup CD/ DVD மூலமாக கணினியில் நிறுவவும். முன்னர் பதிவு செய்யப்பட்ட அல்லது பழைய கணினிகளுடன் வரும் CD கொண்டு நிறுவ வேண்டாம். முடிந்தால் Microsoft இலிருந்து தரவிறக்கி நிறுவுவதே நல்லது.
  3. நிறுவலின் பின்னர் புகுபதிகை செய்யவும் ( Log on செய்யவும் )
  4. விண்டோஸ் அக்டிவேஷன் பண்ணும்படி கேட்கும்போதோ அல்லது
    go to “Start” -> “All Programs” -> “System Tools” -> “Activate Windows”
    அல்லது
    right click on “Computer” and click “Click here to activate Windows”
    என்பதன் மூலமோ Activation Window வை திறந்து
    Yes, I want to telephone a customer service representative to active Windows now
    என்பதை சொடுக்கவும்.
  5. உங்கள் பிரதேசம் மற்றும் நாடு என்பவற்றை தெரிவுசெய்தபின்னர் அருகிலிருக்கும் Microsoft Customer Care தொலைபேசி இலக்கம் உங்களுக்கு வழங்கப்படும். அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவும். அனேகமாக இது கட்டணமற்ற அழைப்பாகவே இருக்கும்.
  6. அதில் சொல்லப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி நிஜ மனித பிரதானியை அழைக்கவும் (human customer care representative :) ). இது கடினமாக இருக்குமானால், நீங்கள் அழைப்பை ஏற்படுத்தியவுடன் Installation ID கேட்கும்போது எதையாவது குடுத்தால் தவறான உள்ளீடென செய்தி வரும். இரண்டு மூன்றுதடவை இப்படியே செய்தால் customer care representative தானாக வழிக்கு வருவார்.
    படத்தில் 3ம் படிமுறையில் Installation ID இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது.
  7. இனி அவரிடம் நீங்கள் டவுண்கிரேட் செய்துள்ளதை தெரிவிக்கவும். அவர்கள் நீங்கள் நிறுவிய இயங்குவளத்திற்கான product key யை கேட்கும்போது Vista விற்கான product key யை தெரிவிக்கவும். அத்துடன் XP யின் விபரங்களையும் அவர்களிடம் தெரிவியுங்கள்.
  8. validation முடிந்ததும் Confirmation ID ஒன்று தருவார்கள். இதனை 6ஆவது படிமுறையில் காட்டப்பட்ட பட சாரளத்தில் Step 4 என்பதில் பதிவு செய்துவிட்டீர்களென்றால் அத்தோடு முற்றும் போட்லாம்.

ஆக்கம்,
சுபாஷ்,
http://hisubash.wordpress.com

உங்களின் கருத்துக்களை தயவுசெய்து அறியத்தாருங்கள். மற்றும் இப்பதிவு சம்பந்தமாகவுள்ள வேறு பதிவுகளிக் சுட்டி மற்றும் வேறு கூடுதலான தகவல்களை பின்னுட்டத்தில் அறியத்தரவும். அது எமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நல்ல தொகுப்பை உருவாக்கவும் உதவியாக அமையும்.

மற்றும் சரியான தமிழ் சொற்பிரயோகங்களையும் அறியத்தந்தால் பதிவின் தரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

=================================

டிஸ்கி – (பதிவில் பின்னுட்டமாக இட்டதையே இங்கு மீண்டும் பதிகிறேன்.)

வருகைக்கும் கருத்திற்கும் அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவு கண்டிப்பாக XP க்கு மாறவேண்டுமென போடப்பட்டதல்ல.

மாற விருப்பமாயின் எப்படியென்பதுதான் பதிவின் விடயம்.

சாதாரணமான வீட்டு மற்றும் அலுவலக பாவனைக்கும் இணைய பாவனைக்கும் Home Premium தாராளமாய்ப்போதும்.
தற்போதுள்ள பல மென்பொருட்களையும் நிறுவி உபயோகிக்கலாம்.

Vista Business and Ultimate போன்றவை திறன் கூடிய மடிக்கணனிகளுடன் தான் வருகிறது. வேகமும் அதிகம். ஆக XP க்கு மாற வேண்டியதில்லை. ஆனால் Dual Core மற்றும் AMD வகை கணனிகளில்தான் விஸ்டா வேகக்குறைவாக செயல்படும். அவர்கள் மாற்றினால் பயனுள்ளதாயிருக்கும்.
அல்லது உங்கள் கணனி வேகம் குறைவாகவிருந்தாலும் XP க்கு மாறுவது பரவாயில்லை.

நீங்கள் டெவலப்மன்ட் வேலைகள் மற்றும் பெரிய விஷேட மென்பொருட்களை (MS SQL Server based application and Network) உபயோகிக்கவேண்டி வந்தால் மட்டுமே Business and Ultimate அல்லது XP பயன்படுத்தலாம். ஏனெனில் சில மென்பொருட்களை Home Version ல் நிறுவ முடியாது.
உதா- சில கணக்கீட்டு மென்பொருட்கள், MS Sql Server2005

மற்றும் XP க்கு மாறுவது உங்கள் பழைய மென்பொருட்கள் Vista க்கு ஆதரவில்லையெனில் மட்டும் பயனளிக்கும்.
மற்றும் XP யின் உதவிகளையும் மைக்ரோசாப்ட் நிறுத்தும் இவ்வேளையில் XP யில் மினக்கடுவது அவ்வளவு நல்லதல்ல. ( முக்கியமான தேவை இருந்தாலன்றி )
மற்றயது புதிய தொழில்நுட்பங்களோடும் அப்டேட்டுகளோடும் தொடர்பில் நம்மை வைத்துக்கொள்வது ஐடி யில் இருக்கும் நமக்கு முக்கியம்.

ஆக முக்கியமான தேவைகளன்றி XP க்கு downgrade பண்ண வேண்டாம். புதியதை அதன் வித்தியாசங்களோடு வரவேற்று நமக்கேற்றபடி மாற்றுவோம்.

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி

.... இங்கே பதியப்பட்டது எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 45 மறுமொழிகள் »

வாரணம் ஆயிரம் இசை – My Own பார்வை

பதிந்தவர் சுபாஷ் மேல் செப்டம்பர் 26, 2008

Dear Haries !!!!!!!

இரவு 12.30 க்கு முதல்முதலாக கேட்க துவங்கினேன். அதிலிருந்து அதிகாலை 4 30 மணிவரைக்கும் துங்க முடியவில்லை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்!!!

நிறைய காலத்திற்கு பிறகு ஒரு முழு இசை ஆல்பத்திற்கு அடிமையாகியிருக்கிறேன்.

நான் -ம்ம்ம் நம்ம தல றஃமான் என்ன பண்ராரோ?

என் மனசாட்சி -ஹம் ஹம். பொருடா. ஹிந்தி கஜினி வரட்டும்

.... இங்கே பதியப்பட்டது மொக்கை | குறிச்சொல்லிடப்பட்டது: | 12 மறுமொழிகள் »

கூகிளின் Android இயங்குதள SDK 1.0

பதிந்தவர் சுபாஷ் மேல் செப்டம்பர் 25, 2008

கூகுள் நிறுவனம் செல்லிடப்பேசிகளுக்கென பிரத்தியோகமான இயங்குதளத்தை அறிமுகம் செய்து வைத்தது. Android என பெயரிடப்பட்ட இந்த இயங்குதளம் Microsoft Windows Mobile இயங்குதளத்திற்கும் Apple iPhone Mac X இயங்குதளத்திற்கும் பெரும் சவாலாக இருக்குமென கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு. அடிப்படை கட்டமைப்பிலும்சரி மென்பொருள் கட்டமைப்பிலும் இம்மூன்றிற்கும் பெரும் வித்தியாசங்களுண்டு.

ஒரு மாதத்திற்கு முன்னர் கூகிள் Android க்கான SDK 0.9 வெளியிடப்பட்டு மென்பொருள் உருவாக்க போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசு US $275000, 2ம் பரிசு US $100000. முதல் பரிசு 20 பேருக்கும் 2ம் பரிசு 40 பேருக்கும் அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற மென்பொருள் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

இப்போது SDK 1.0 முழுப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Java மொழி மூலமாக மென்பொருளை உருவாக்கவேண்டும். தற்போது Java மொழிக்கு மட்டுமே ஆதரவு. விரைவில் C/C++ மொழிகளுக்கும் ஆதரவு தரும்படி SDK வெளியிடப்படும். இதற்கான சகல உதவிகளும் Android community மூலம் பெறலாம். இதற்கு Android செல்லிடப்பேசி அவசியமில்லை. Software emulator மூலம் பரீட்சித்துப்பார்க்கலாம்.

உங்களிடம் Nokia N 810 Internet Tablet இருக்குமானால் நீங்களாகவே Androidஐ அதில் நிறுவி பார்க்கலாம். இதற்கான சகல உதவிகளும் இங்கேயுள்ளன மற்றும் இங்கேயும். மற்றய செல்லிடப்பேசிகளில் நாமாக நிறுவும் அனுமதியை கூகிள் அளிக்கவில்லை.

மற்றய இயங்குதளத்திற்கும் இதற்குமிடையிலான வித்தியாசங்களையும் இதன் சிறப்பம்சங்களையும் வைத்துப்பார்க்கும்மோது இது வெறும் செல்லிடப்பேசி இயங்குதளம் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சகல கணினி செயல்களையும் செய்யவல்ல ஓர் பணித்தளமாக இது விளங்கும் என்பதில் ஐயமில்லை.

முதல் ஆச்சரியம் இது அடிப்படையில் Linix Kernel ஐ அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் Motorola நிறுவனம்தான் Linux Mobile Version இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அத்திட்டம் வெற்றிபெறவில்லை. ஆனால் கூகிள் இந்த திட்டத்தை கையாண்ட விதத்திலும் வியாபாரப்படுத்திய விதத்திலும் பெருவெற்றிபெற்றுள்ளது.

அடுத்து இவ்வியங்குதளம் 2D மற்றும் 3DGraphics க்கு OpenGL ES 1.0 ன் வரையறைக்கு ஏற்றாற்போலவும் OpenGL ESக்கு முழு ஆதரவு தருமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிதுல்லியமான படங்களும் Animation உம் சாத்தியம். விளையாட்டு வடிவமைப்பாளர்களுக்கு இது ஓர் கூடுதல் உற்சாகம்.

மற்றயது SQLlite எனும் Opensource தகவல்தள மென்பொருளானது இதனுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உருவாக்குபவர்கள் இதற்கு ஒத்திசைவாக இலகுவான மென்பொருட்களை உருவாக்கமுடியும். இது MySQL ன் கட்டமைப்பை ஒத்திருந்தாலும் இதைவிட வேகமானதும் அதிக தகவல்களை சிக்கலில்லாமல் கையாளக்கூடியது.

MPEG4, H.264, MP3, AAC, AMR, JPG, PNG, GIF போன்ற இன்றய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் Media Format களை ஆதரிக்கின்றது.

Bluetooth, EDGE, 3G, and WiFi போன்ற தெலைத்தொடர்பு தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கின்றது.

மொத்தத்தில் மற்றய போட்டியாளர்களான Windows Mobile Apple, iPhone Mac மற்றும் Symbion போன்றவர்களுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் கூகிளின் Android செயல்படும்.

இப்போது உத்தியோகபுர்வ வியாபார வெளியீடாக HTC நிறுவன PDA க்களில்  அமரிக்காவின் AT&T நிறுவனத்தில் வலையமைப்பில் உள்ள செல்லிடப்பேசிகளில் மட்டுமே கூகிளின் Android நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் மற்றய இடங்களிலும் இது விஸ்தரிக்கபடும்.

எப்படியோ, இவர்களின் போட்டி நமக்கு நன்மைதான்.

மேலும் உதவிகளுக்கு
http://androidcommunity.com/
http://www.talkandroid.com

Sunsung Android Plateform Mobile
http://www.itechnews.net/2008/02/20/samsung-google-branded-android-phone-coming/

மேலும் தமிழ்நெஞ்சம் அவர்களின் பதிவு.
http://tamizh2000.blogspot.com/2008/09/blog-post_8580.html

அனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.

நன்றி
சுபாஷ்.

டிஸ்கி -
தவறுகளையும் தமிழ்ப்பிழைகளையும் உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் எழுத உதவியாகவிருக்கும். நன்றி.

இவர்களுக்கும் நன்றிகள்ஆங்கிலம்-தமிழ் அகராதி

.... இங்கே பதியப்பட்டது அறிமுகம், செல்பேசி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 18 மறுமொழிகள் »

Windows Server 2008 – முதல் பார்வை ( First Look )

பதிந்தவர் சுபாஷ் மேல் செப்டம்பர் 24, 2008

இந்த பதிவு Microsoft Windows Server 2008 க்கான முன்னோட்ட பதிவாகவும் அறிமுகப்பதிவாகவும் இருக்கும்.Microsoft ன் புதியதும் அதிநவீன பயன்பாடுகளைக்கொண்டதுமான Server வகை இயங்குதளம்தான் இந்த Windows Server 2008. இதில் புதிதாக என்ன உள்ளது மற்றும் எப்படி உபயோகப்படுத்துவது என வரிசையாக பார்க்கலாம்.

இந்த வெப்தளமூலம் சர்வரை டவுண்லோடு செய்து Virtual Machine மென்பொருள் எதையாகிலும் கொண்டு உபயோகிக்கலாம். கிட்டத்தட்ட 4GB அளவுள்ள Virtual Hard Disk Image ஐ Download பண்ண கண்டிப்பாக அகலப்பட்டை இணைய இணைப்பு அவசியம். இல்லவிடில் யுடொரண்டில் setup ISO வை download செய்யலம். 800MB அளவுதான் வரும். நான் அதிகமாக ISO format ல் download செய்து VM Ware ல் பயன்படுத்துகிறேன். பரீட்சார்த்தமாக பயன்படுத்த இது ஒரு நல்ல வழி.

”நாம் வெளியிட்டதில் மிகவும் மேம்படுத்தப்பட்டதும் பாதுகாப்பானதுமான சேவக மேலாண்மை வகை இயங்குதளமென”  Microsoft இந்த பதிப்பை விளம்பரப்படுத்தி வெளியிட்டுள்ளது. அது உண்மையும் கூட. பெரிய மற்றும் நடுத்தர வகுப்பு நிறுவனங்களின் தேவைகளை திருப்திசெய்யத் தேவையான அனைத்து விடயங்களையும் மிக இலகுவான முறையில் நிர்வாகித்திட இந்த புதிய பதிப்பு உதவிடும்.

சரி புதிய விடயங்கள் ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.

புதிய வடிவமைப்பு

முதலில் விண்டோசை ஆரம்பித்தவுடன் உணர்வது இதன் புதிய Start Menu தான். நீங்கள் Vista பாவிப்பவராயின் கிட்டத்தட்ட அதைப்போல இருப்பதை உணரலாம்.

பல புதிய மாற்றங்களை நாம் பாவிக்கும்போது உணரலாம். உதாரணமாக control panel ல் உள்ள add/remove programs நீக்கப்பட்டுள்ளது. மற்றும் Run Command ஐ Start Menu வில் நாம்தான் கொண்டுவர வேண்டும்.

இது நல்லதா இல்லை தேவையில்லாததா என்றால் ” வித்தியாசமாகவுள்ளது” என்பதே எனது கருத்தாகும்.

செம்மைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்.

”நாங்கள் வெளியிட்டதிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த இயங்குதளம் இதுதானென” மைக்றோஸொப்ட் மார்தட்டிக்கொண்டிருக்கிறது. சரி, அப்படி என்னதான் இருக்கிறதென பார்க்கலாம்.

  • Active Directory Federation Service – administrator ஆல் பல கூட்டிணைப்புக்களிடையே மிக நம்பகமான ஓர் உறவை இலகுவாக்க உருவாக்கலாம்.
  • Read-Only Domain Controllers – எபபோது நமக்கு domain controller பாவிக்க தேவைப்படுகிறதோ அந்தந்த இடங்களில் மாற்றங்கள் செய்யமுடியாத domain controllerஐ பாவிக்கலாம். அதனால் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் புறநிலை பாதிப்புகளுக்கு உத்தரவாதமில்லை.
  • Server Core Installation – இந்த 2008 சர்வரின் installation உடன் தேவையான Windows network infrastructure services ஆன DHCP, DNS, file sharing, and domain controller functions ஆகியவையும் சேர்த்தே Install பண்ணப்படுகிறது.
  • Password and account lockout policy improvements – single domain ல் பல கடவுச்சொற்களையும் account policies களையும் நிர்வகிக்கலாம்.
  • Windows BitLocker Drive Encryption – முழு வன்தட்டையுமே என்கிரிப்ட் செய்யும் வசதியிருக்கிறது. இதனால் சர்வரிலிருந்து வன்தட்டை கழற்றி வேறு கணனியில் பாவித்து தகவல் திருட முடியாது.

புதிய மேம்படுத்தப்பட்ட Server 2008 Web Server – IIS 7.0

பல புதிய சேவைகளும் மேம்படுத்தல்களும் சர்வர் 2008 ல் இடம்பெற்றுள்ளது. அதில் முக்கியமானதொன்றாக Internet Information Server உம் உள்ளது. Windows Server 2008 ல் IIS Version 7 இடம்பெற்றுள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட இடைமுகப்பும் பாவிக்க இலகுவாக்கப்பட்டிருக்கிறது.


WDS மூலம் Client கணினிகளை வேகமான தகவல் பகிர்வு

Windows Deployment Service (WDS) எனும் புதிய பயன்பாடானது வலையமைப்பில் இணைந்துள்ள கிளையன்ட் கணினிகளுக்கூடான  மிக விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு வழிசமைக்கிறது. இது TFTP எனும் தொழில்நுட்பத்தை பாவிப்பதனால் இந்த சிக்கலில்லாத வேகமான தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.

பாதுகாப்பில்லாத Client PC க்களிடமிருந்து வலையமைப்பை NAP மூலம் பாதுகாத்தல்

Microsoft’s Network Access Protection (NAP) எனப்படும் கோட்பாட்டிற்கிணங்க செயற்படுவதால் பாதுகாப்பில்லாத கணனிகள் வலையமைப்பிலிருந்து மற்றய கணினிகள் மற்றும் சர்வரின் செயற்பாட்டை பாதிக்கதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வலையமைப்பில் இணைக்கப்பட்ட கணினிகள் சர்வரை தொடர்புகொள்ள நிர்வாகியினால் வரையறுக்கப்பட்ட சில நிபந்தனைகளை புர்த்தி செய்ய வேண்டும். இது சர்வருக்கு மிகவும் பாதுகாப்பானதொன்றாகும்.

இதன் மூலம் LAN மட்டுமல்ல VPN இணைப்பிலுள்ள கணினிகளினுடாகவும் தகுந்த பாதுகாப்பு சர்வருக்கு கிடைக்கின்றது.

Windows Terminal Service மேம்படுத்தல்கள்.

Termilan Server மிகவும் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

  • RemoteApp – வலையமைப்பில் இனைந்துள்ள கணனிகளுடன் சர்வரில் நிறுவப்பட்டுள்ள மென்பொருளை பகிர்ந்து கொள்ளலாம். Client PC பாவிப்பவர் இதற்கான ஐகானை சொடுக்குவதன் மூலம் முழு மென்பொருளையும் பயன்படுத்தலாம்.
  • Terminal Services Gateway – VPN மூலமாக அலுவலக வலையமிப்பிலில்லாமல்(LAN) வெளி அல்லது வீட்டிலிருந்து அலுவலக வலைப்பின்னலுடன் இணைந்து அலுவலக வேலைகளை செய்ய இது வசதியளிக்கின்றது.
  • Terminal Services Web Access – நாம் எங்கிருந்தாலும் இணைய உலாவிமூலம் நம் அலுவலக வலைப்பின்னலுடன் இணைந்துகொள்ளலாம். ஆனால் இதற்கும் மேலே கூறியதற்கும் வித்தியாசமுண்டு.

மேலே கூறிய வசதிகள் Citrix Metaframe ன் வசதிகள் போல Microsoft வடிவமைத்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் நிர்வாகம்  ஒரே இடத்தில்!

சர்வரின் இயங்குதள நிர்வாகத்தை ஒரேயிடத்தில் அதாவது ஒரு விண்டோவிலேயே பார்த்து நிர்வாகிக்கக்கூடிய தன்மை.

Windows Server Virtualization அம்சம்

Windows Server Virtualization அம்சமானது ஒரு சர்வரிலேயே பல சர்வர்ளை மாயநிலையில் (Virtual ) பயன்படுத்தலாம். இந்த அம்சமானது பரீட்சார்த்த வேலைகளுக்காக தேவையற்ற மேலதிக வளங்களை பயன்படுத்தும் தேவையினை இல்லாதொழிக்கிறது. இதனால் பெருமளவு செலவு கட்டுப்படுத்தப்படுகிறது.

இறுதியாக…

Windows Server 2008ல் பல விடயங்களை மேம்படுத்தியும் புதிதாக சேர்த்துமுள்ளார்கள். சிலர் இந்த வசதிகளுடைய விண்டோசை விரும்பி பயன்படுத்துவார்கள். சிலர் இதனை ஏற்றுக்கொள்ள அல்லது இந்த இயங்குதளத்திற்கு மாற யோசிப்பார்கள். உண்மையில் கணக்கில்லாத புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் Windows Server 2008ல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக பார்க்கத்துவங்கினால் முடிவில்லாமல் போகும்.

ஆனாலும், பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட பல மேம்படுத்தல்கள் Windows Server 2003 பயனர்களை சிறிது எரிச்சலடைய வைக்கிறது. காரணம் 2003 பதிப்பிலிருந்து முற்றாக வேறுபடுவதுதான். ஆனாலும் புதிதாக பாவிப்பவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.

உண்மையிலேயே இது பாதுகாப்பான இயங்குதளம்தானா ???

சிஸ்டம் நிர்வாகிகளின் கருத்துப்படி இது உண்மைதானென தெரியவருகிறது. சான்றாக வழமையாக Microsoft புதிய பதிப்பு வெளியிட்டு 2 நாட்களுக்குள் ஹேக் பண்ணிவிட்டோம், உடைத்துவிட்டோமென வரும் ஹேக்கர்களின் சத்தம் இது வெளியாகி மாதக்கணக்காகியும் காணவில்லையென்பதை பார்க்கும்போது உண்மையிலேயே இது Microsoft வெளியீடுகளில் சிறந்ததொன்றாக ஏற்றுக்கொள்ளலாம்.

பிழைகளையும் உங்கள் கருத்துக்களையும் அறியத்தாருங்கள். எனது கற்றலுக்கும் அவை உதவியாகவிருக்கும்.

மேலதிக விபரங்களுக்கு

Microsoft: Windows Server 2008 Homepage
Microsoft: Windows Server 2008 Highlighted Features

நன்றி
சுபாஷ்.

.... இங்கே பதியப்பட்டது தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் சர்வர் 2008 | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 12 மறுமொழிகள் »